சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 01.01.2018

‘ஃபயர் அண்ட் ஃபூரி’ ஆசிரியர் உல்ஃப், டிரம்ப் உலகில் வாழ்ந்த மனிதர்களிலேயே மிகவும் குறைந்த நன்பகத்தன்மை கொண்டவர் என அழைத்தார்

மைகேல் உல்ஃப், வெள்ளை மாளிகையில் திரைக்கு பின்னால் உள்ள விஷயங்களை பற்றி தன்னுடைய புதிய புத்தகத்தில் கூறியிருந்தார், இவர் டொனால்ட் டிரம்பிடம் தன்னுடைய
ஆவணத்தை பற்றி பேசியதாகவும், மேலும் அவரை உலகில் வாழ்ந்த மனிதர்களிலேயே மிகவும் குறைந்த நன்பகத்தன்மை கொண்டவர்” என்றார். உல்ஃப் என்.பி.சிக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய இந்த நூலுக்காக அவர் வெள்ளை மாளிகையில் தொடர்பு கொண்ட அனைவரும் இவரை ஒரே மாதிரியாக தான் குறிப்பிட்டனர் என்றார். அவர்கள் அனைவரும் கூறிய ஒரு குறிப்பை நான் கூறுகிறேன்: அனைவரும் அவரை ஒரு குழந்தை போன்றவர் என்றனர், என தெரிவித்தார். அதாவது அவர்கள் கூறியதில் அர்த்தம் அவர் உடனடி மனநிறைவை விரும்புகிறார். மேலும் அவரை சுற்றியுள்ள நூறு சதவீத நபர்கள் , அவரின் மூத்த ஆலோசகர்கள், குடும்பத்தினர் , ஒவ்வொருவரும் அவருடைய அறிவு திறனையும் உடல் தகுதியையும் சந்தேகிக்கின்றனர்.

உல்ஃப் கூறிய விஷயங்கள் அனைத்தும் உலக மக்கள் டிரம்ப்பை பற்றி நினைப்பதை உறுதி செய்கிறது. எனினும், இங்கு முட்டாள்கள் யார் டிரம்பா? அல்லது அவரை தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான மக்களா? அல்லது அவரை பாதுகாக்கும் குடியரசு கட்சியா?

எகிப்து தலைமை முஃப்தி பிட்காயினுக்கு எதிராக ஃபட்வா விடுத்து, இது தீவிரவாதிகளால் உபயோகிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்

எகிப்து நாட்டின் தலைமை முஃப்தி ஷாவ்க்கி அல்லாம் பிட்காயின் ஹராம் எனவும் இது தீவிரவாதிகளால் உபயோகிக்கக்கூடும் என எச்சரித்து ஃபட்வா விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது பிட்காயின் என்பது தீவிரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான சாதனமாகவும் இருக்கும் என்றார். 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிட்காயின் , தனி நபர்கள் மற்றும் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது என அல்லாம் தன்னுடைய ஃபட்வாவில் கூறியுள்ளார். பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனையோடு தன்னுடைய ஃபட்வாவை அறிவித்து , பிட்காயின் ஷரியாவின் மையமாக உள்ள அரசை உதாசீனப்படுத்தக்கூடியதாக உள்ளது எனவும் எனவே இது அனுமதிக்கப்பட்டவையல்ல என்றார். நாணய தயாரிப்பு என்பது அரசு மட்டுமே செய்யக்கூடிய உரிமை பெற்றுள்ளது எனவும் அது அரசின் மிக முக்கிய கடமை என்று கூறியுள்ளார். [மூலம் : டெய்லி மெயில்]

ஷரியா விடுத்துள்ள தங்கத்தின் அடிப்படையிலுள்ள நாணய முறையின் படி திரும்ப வேண்டும் என கூறியிருந்தால் அது மிக பொருத்தமாக இருந்திருக்கும். மேலும் , இத்தகைய முறையை உடனே எகிப்து நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியிருந்தால் , விலைவாசி உயர்வால் மக்கள் படும் பெரும் துன்பங்களுக்கு நிவாரணமாக இருந்திருக்கும். இத்தகை கிரிப்டோ நாணயத்துக்கு மாற்றமாக இஸ்லாமிய நாணயமுறை உள்ளது என சொல்லாததால் , இஸ்லாத்தில் இதற்க்கு மாற்று என்ன என தெரியாமல் மக்களுள்ளனர்.

பாக்கிஸ்தான் சீனாவிடம் டாலரை கொண்டு வர்த்தகம் செய்வதை மறுத்துள்ளது

இஸ்லாமாபாத் பற்றி அமெரிக்கா தலைவர் புத்தாண்டு அன்று பாக்கிஸ்தான் தீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக வெளியிட்டிருந்த டீவீட்டுக்கு மறுநாள் , பாகிஸ்தானின் மத்திய வங்கி சீனாவுடன் வர்த்தகம் டாலருக்கு பதிலாக யுவான் நாணயத்தில் தொடரும் என அறிவித்துள்ளது. அதே நாளில் , சீன வெளியுறவு அமைச்சரவையின் பேச்சாளர் கேங் ஸுங் இஸ்லாமாபாத்தை ஆதரிக்கும் வகையில், இந்நாடு பெரும் முயற்சிகளை தியாகத்தின் மூலம் தீவிரவாதத்தை எதிர்த்துள்ளது என்றும் அதனை மற்ற உலக நாடுகள் உணர வேண்டும் என்றார். அமெரிக்க பாக்கிஸ்தான் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிப்பதை சீன உற்று கவனிக்கிறது.

டிரம்ப் நீண்டகாலமாக இந்நாட்டை தீவிரவாதத்திற்கு எதிராக இன்னும் ஆற்றல் கொள்ளவேண்டும் என்றும் அதேவேளையில் , அவர்களின் பரம எதிரியான இந்தியாவிடம் நெருக்கத்தை மேற்கொண்டார். பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்கா உறவில் சிக்கல்கள் பல ஆண்டுகால உள்ளது , ஆனால் அதனுடைய பெரிய மாற்றம் சீனாவினால் தற்போது ஏற்பட்டுள்ளது என ஆசியாவின் பொருளாதார உளவுத்துறை பிரிவின் பிராந்திய இயக்குனர் சைமன் பாப்டிஸ்ட் தெரிவித்துள்ளார்

சீனா தற்போதைய பாக்கிஸ்தான் உறவை பலப்படுத்த தீவிரமாக முயற்சிக்கிறது, மேலும் தன்னுடைய ஒரு வழி பாதை திட்டத்திற்கு மிகவும் சாதகமான இடமாக பாகிஸ்தானை பார்க்கிறது, மேலும் அங்குள்ள புவி நிலை மற்றும் அரசியல் சாதகத்தை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. சீனாவின் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் இஸ்லமாபாத்தில் உள்ளது, 60 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிலம் மற்றும் கடல் வழித்தடம் சீன பாக்கிஸ்தான் பொருளாதார மையமாக உள்ளது. சீனவின் இத்தகைய பலம் உள்ள நிலையில் , அமெரிக்க அச்சுறுத்தலை பாக்கிஸ்தான் செவி மடுக்கவில்லை. சீன 57 பில்லியன் டாலர் முதலீட்டை பாகிஸ்தானுக்கு இந்த நில நீர் பாதைக்கு வாக்களித்துள்ளது என ப்ரூக்கிங்ஸில் வசிக்கும் மதிஹா அப்சல் கூறினார். இவை அனைத்தும் பாக்கிஸ்தான் மீது அமெரிக்காவிற்கு குறைந்தளவே பிடிப்புள்ளதென தெரிகிறது. பாக்கிஸ்தான் சீனா உறவின் வரலாற்றை கவனிக்கும்போது , பாகிஸ்தானின் கொள்கைகள் கடுமையான போக்குக்கு மதிப்பளிக்காமல் , விசுவாசத்திற்கும் மரியாதையுடன் நடத்தப்படுவதற்குமே மதிப்பளிக்கும் என தெரிகிறது என கூறினார். [மூலம் சி.என்.பி.சி.]

யுவான் நாணயத்தை தழுவித்தான் தங்களுடைய பெரும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற ஆசைக்கு பாக்கிஸ்தான் உத்வேகம் கொடுக்கும் ஆபத்தை பெற்றுள்ளது. ஜெர்மன் யூரோ நாணயத்தின் மூலம் ஐரோப்பிய யூனியனை ஆதிக்கம் செலுத்துவது போல் , சீன பாகிஸ்தானையும் தன்னுடைய யுவான் நாணயத்தின் மூலம் மற்ற நாடுகளையும் ஆதிக்கம் செலுத்தும்.

Comments are closed.