சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 03.01.2018

1. ஜோர்டானில் ஆட்சிக்கவிழ்ப்பு
2. ஈரானின் உடைந்துப்போன நாட்டு கட்டமைப்புகள்
3. டிரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார்.

1. ஜோர்டானில் ஆட்சிக்கவிழ்ப்பு

ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் குடும்பத்தினர் சவுதி அரேபியாவுடன் தொடர்பு கொண்டு தன் ஆட்சியை கலைக்க ஆட்சிக்கவிழ்ப்பு திட்டத்தை திட்டமிடுகின்றனர் என்று தெரிந்ததும் தன் குடும்பத்தினரை கைது செய்ததாக செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. மேலும், இதைப் பற்றி ஜோர்டான் அரசு கூறும்போது, ஆளும் குடும்பத்தைப் பற்றி பொய் பரப்பிக்கொண்டிருக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனால், சில அதிகாரிகளை அரசு அகற்றியது இதற்கு காரணம் ஆட்சியின் முன்னேற்றத்திற்கான ஒரு மாற்றத்தை கொண்டுவர மேற்கொண்ட செயல் என அறிவித்தது. இராணுவத்தின் உயர் பதவிகளில் இருந்த மன்னரின் சகோதரர்களான இளவரசர் அலி, இளவரசர் ஃபைசல் மற்றும் அவரது உறவினரான இளவரசர் தலால் ஆகியோர் தன் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றதாக கடந்த வாரம் மன்னர் கூறியிருந்தார். ஆயுதப்படைகளின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருந்தது என்றார். இளவரசர் ஃபைசல் அரசு விமானப்படைத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் இருந்தார், இளவரசர் அலி பல ஆண்டுகளாக மன்னரின் பாதுகாவலர் படைக்கு பொறுப்பாளராக இருந்தார். உயர் சிறப்பு படைகளின் அதிகாரியாக இருந்த தலால் பின் முஹம்மது பிரித்தானிய இராணுவத்தின் பயிற்சி மையம் Sandhurst யில் பட்டம் பெற்றவர் ஆவார்.

2. ஈரானில் உடைந்துப்போன அரசு கட்டமைப்புகள்

டிசம்பர் 28-ஆம் தேதி ஈரானின் மஷத் நகரத்தில் ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடித்து எழுந்தன. வரலாற்று ரீதியாக இந்த நகரம் தன்னாட்சிக்கு பரந்த ஆதரவைப் கொடுத்தது. உள்ளூர் செய்தி ஊடகத் தகவல்களின்படி, உணவு விலை 40% க்கும் மேலாக உயர்ந்துள்ளது, இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற செய்தி வெளிவந்தது. “நாட்டில் உள்ள வளங்களை பயன்படுத்தி ஒரு மேம்பட்ட பொருளாதாரத்தை வழங்குவோம்” என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, நீண்ட காலமாக மக்களை திசை திருப்பிய இந்த மதகுருமார்களின் ஆட்சி பிராந்தியத்தின் நோக்கங்களுக்காக மட்டுமே வளங்களை பயன்படுத்தியுள்ளனர். நாட்டின் பணவீக்கம் கடந்த பத்து ஆண்டுகளில் 20% – 40% க்கும் இடையில் உயர்ந்ததோடு, சிரியாவில் நடந்த ஐந்து காலப் போரின் விளைவு இப்போது ஈரானில் உள்ள மக்களை பாதிக்கிறது. ஆர்ப்பாட்டங்கள் இப்போது பொருளாதார பிரச்சினைகளிலிருந்து அரசியல் பிரச்சனையாக மாறி, ஹஸன் ருஹானி மற்றும் ஆயத்துல்லா காமெனியின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாகியுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள் இன்னும் பெரியளவில் மாறி மதகுரு ஆட்சியை சவால் செய்யலாம், அல்லது மேற்கத்திய சக்திகள் ஈரானின் சர்வதேச விவகாரங்களில் தலையிட இதை பயன்படுத்தலாம். எல்லாம் காலப்போக்கில் தெரியும்.

3. டிரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார்

ஆப்கானிஸ்தானின் பிரச்சனைத் தீர்ப்பதில் பாகிஸ்தானின் தோல்வியை தன் டுவிட்டர் பக்கத்தில் இன்னொரு முறை டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், அமெரிக்க நிர்வாகங்கள் அவருக்கு முன்னரே பாகிஸ்தானில் பில்லியன் கணக்கில் பணத்தை வீணாக்கிவிட்டன, ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து அமெரிக்க எதிரிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கியுள்ளது என்றார். இதுவரை தன் குற்றச்சாட்டுகளுக்கு சரியான ஆதாரம் வழங்காமல் உதவித் திட்டம் தொடர்பான விவாதங்கள் போன்ற விமர்சனங்களை மட்டும் தொடர்ந்து பேசுகிறார்.

பொதுமக்கள் தலைமையும் இராணுவத் தலைமையும் வாஷிங்டனின் ஒவ்வொரு கட்டளையையும் சரியாக தான் செய்துள்ளது, அது அனைத்து தளவாட, விமானம் மற்றும் தரைப் படைகளுடன் ஆதரவு தந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வெற்றி பெற அமெரிக்கா தோல்வி கண்டதைக் கருத்தில் கொண்டு, இதிலிருந்து தப்பிச்செல்ல பாகிஸ்தானை பலியாடாக அமெரிக்க தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், உண்மையில் பாகிஸ்தானின் தலைமைத்துவம் அமெரிக்காவை தொடர்ந்து உதவி செய்வதில் ஆர்வம் காட்டியது, அது அமெரிக்காவுக்கு குறைவாக ஒத்துழைத்துள்ளது என்ற குற்றம் சாட்டப்பட்டியிருக்கின்ற போதிலும் அதன் உத்தரவுகளை சரியான முறையில் நிறைவேற்றியது. வாஷிங்டன் மற்றும் இஸ்லாமபாத் ஆகிய இரு இடங்களிலிருந்து வரும் அறிக்கைகள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு முரணாக உள்ளது, இந்த அறிக்கைகள் உண்மையான நோக்கங்கள் மற்றும் செயல்களை மறைக்க வெறுமென பிரச்சாரப் போரின் ஒரு பகுதியாகும்.

Comments are closed.