சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

யூத அரசுடனான உண்மையான உறவுகளை லெபனான் வெளிப்படுத்தியது

بسم الله الرحمن الرحيم

லெபனானுடைய அயலுறவு மந்திரிக்கு “இஸ்ரேலுடன்” எவ்விதமான சித்தாந்த ரீதியிலான பிரச்சனையும் இல்லை!!

லெபனானுடைய அயலுறவு மந்திரி ஜிப்ரான் பாஸிலுடன் அல்-மயாதீன் தொலைக்காட்சியில் “ஹிவார் அஸ்-ஸா’அ (இப்போதய பேச்சு) எனும் நிகழ்ச்சியில் 26/12/2017 அன்று ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில், அந்நிகழ்ச்சியின் நெறியாளர் ஜிப்ரான் பாஸிலை “லெபனானின் அயலுறவுக் கொள்கையின் பொறியாளர்” என விவரித்து அவரிடம் கேட்டதாவது: “ஒரு அதிகாரப்பூர்வ பதில் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நான் நம்புகிறேன், தங்களால் முடியும் பட்சத்தில் எமக்கு அதுபற்றி தகவல் அளியுங்கள், யதார்தத்தில் இயல்பாக்கம் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா அதாவது “இஸ்ரேலுடன்” (சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட) சில அரபு தேசங்களின் இயல்பாக்கம்? அதற்கு சர்வசாதாரணமாக எவ்விதமான தயக்கமுமின்றி ஜிப்ரான் பாஸில் அளித்த பதில் என்னவென்றால்: “நான் உமக்கு ஒன்றை கூற விரும்புகிறேன், எங்களுக்கு அது ஒன்றும் சித்தாந்த ரீதியான பிரச்சனை கிடையாது, நாங்கள் “இஸ்ரேலின்” இருப்புக்கு எதிரானவர்கள் அல்ல, பாதுகாப்பை கொண்டிருக்கும் உரிமையை அது கொண்டிருக்கிறது, இதை நாங்கள் மறுக்கவில்லை, நாங்கள் கூறுவது என்னவென்றால் அனைத்து மக்களும் பாதுகாப்புடன் வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம், ஒருவரை ஒருவர் அங்கீகரித்து, மற்றும் அடுத்தவரை அங்கீகரித்து, இந்த பிரச்சனை குருட்டுப்போக்கானது அல்ல, அந்த மற்றவருடனான எங்களுடைய வேறுபாட்டுடன் அது இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்.”

ஒரு அரசியல் தொலைக்காட்சியில் வியத்தகு வகையிலான காட்சி ஒன்றை ஏற்படுத்த அரங்கின் பின்னணியை வெள்ளைப்பனி நிறத்தில் அமைத்து (“இஸ்ரேலை” எதிர்ப்பதாகவும் மற்றும் அதை நிராகரிப்பதாகவும் கோரும் பின்புலத்தை கொண்டுள்ள லெபனானுடைய அயலுறவு மந்திரி இந்த வாக்கியங்களை வெட்கமில்லாமல் எவ்விதமான தயக்கமுமின்றி அறிவித்துள்ளார்!!! உமது எதிர்ப்பின் பனி உருகிவிட்டது மற்றும் பாலஸ்தீன விவகாரத்தில் உமது மோசடியின் புற்கள் வெளியாகியுள்ளன, மற்றும் பாலஸ்தீன பூமியை அபகரித்த யூத அரசுடன் கடைபிடித்து வந்த இயல்பாக்க நிலையை மறைத்து வந்த மல்பெர்ரி இலை உதிர்வின் மூலம் லெபனான் அதனுடைய “அயலுறவுக் கொள்கையின் பொறியாளர்” மற்றும் அரசில் மற்றும் கூட்டணியில் உள்ளவர்களுடன் சேர்ந்து அரபு அணுகுமுறையை பின்பற்றுவதை தெளிவாக காட்டுகிறது.

அது ஜெரூசலேத்தை “இஸ்ரேல்” என்றழைக்கப்படுவதின் தலைநகராக அறிவித்த டிரம்பின் முட்டாள்தனமான அறிவிப்பிற்கு பிறகு லெபனான் அல்-குத்ஸில் (ஜெரூசலேம்) தனது தூதரகத்தை திறக்க தயாராக உள்ளதாக உடனடியாக அறிவித்ததையும் வெளியாக்கியுள்ளது, இது முறைப்படுத்தப்பட்ட இயல்பாக்க நிலையின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் மற்றும் யூதர்களுடனான “அமைதி” கோப்பில் சிக்கியுள்ள அல் குத்ஸ் மற்றும் அகதிகளின் பிரச்சனை ஆகிய இரண்டு பிரச்சினைகளை தீர்த்து வைப்பத்தற்கான முயற்சியின் தொடக்கமாகும்.

அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஒரு அரசு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், அரசுக்கான ஒரு செய்தியை வாசித்த தகவல் துறை அமைச்சர் மெல்ஹெம் ரியாஷி: “ஜெரூசலேத்தில் லெபனானுக்கான தூதரகத்தை அமைத்து அதை பாலஸ்தீனத்தின் தலைநகராக அர்ப்பணிக்கும் அயலுறவு மந்திரி ஜிப்ரான் பாஸிலின் முன்மொழிதலை ஆராய்வதற்காக வேண்டி பிரதம மந்திரி ஸா’த் ஹரீரியின் தலைமையிலான ஒரு குழுவை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது”. (அல்-ஜசீரா 14/12/2017). அதேபோல் லெபனான் அதன் அரசாங்கத்தை கொண்டு மற்றும் அதன் “அயலுறவுக் கொள்கை பொறியாளரை” கொண்டு அமெரிக்காவின் தலைமையில் பாலஸ்தீனத்தின் மீதமுள்ள மக்களையும் அவர்களுடைய காரியத்தையும் வெளியேற்றும் “இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம்” என அறியப்படுவதில் ஈடுபட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தும், அந்த ஒப்பந்தமானது “இஸ்ரேல்” மற்றும் அரபு நாடுகளுக்கு இடையில் சவூதி அரேபியாவின் தலைமையில் பிராந்தியத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை உட்பட இறுதி பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியதாகும்!!! அமெரிக்காவால் திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் லெபனான் பயணிப்பதை உணர்த்தும் குறியீடுகளா இது?

ஓ லெபனானிய அயலுறவு அமைச்சரே, மற்றும் லெபனானிய அரசாங்கத்தில் உள்ளோரே

நீங்கள் இந்த வாக்குமூலங்கள் மூலம் உங்களை வெளிப்படுத்துகறீர்கள். பாலஸ்தீனத்தை அபகரித்துள்ள யூத அரசுடனான போராட்டமானது அனைத்து வகையிலும் சித்தாந்த ரீதியிலானது அது அற்பமான லெபனானிய அரசுக்கும் யூத அரசுக்கும் இடையே நடத்தும் போராட்டம் கிடையாது. மாறாக, இது இந்த பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் அபகரித்த அனைத்து அபகரிப்போனுக்கு எதிராக லெபனானிய மக்கள் உட்பட உம்மத்துடைய போராட்டமாகும். உமது “அயலுறவுக் கொள்கை பொறியாளரின்” வாக்குமூலம் இந்த பிரச்சனையின் பாதை மற்றும் அதன் தன்மையின் போக்கை தீர்மானிக்க போவதில்லை. உம்மத்திலுள்ள மற்றும் லெபனானிலுள்ள கண்ணியமிக்க மனிதர் ஒவ்வொருவரும் “இஸ்ரேல்” எனும் இந்த புற்றநோய் சுரப்பியின் இருப்பை நிராகரிக்கின்றனர். “இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம்” எனும் அமெரிக்காவுடைய மாயையானது உம்மத்தாலும் பைத் அல்-மக்திஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தின் மற்றும் அஷ்-ஷாமின் பிள்ளைகளால் அழித்தொழிக்கப்படும். லெபனானுடைய மக்களே நீங்கள் இதன் ஒரு பகுதியாக – உம்மத்தின் ஒரு பகுதியானவர்கள் கிடையாதா – நீங்கள் இந்த உம்மத்தின் பகுதியினர் ஆவீர்கள்.

அஹமதில் அபூ உமாமாவிடமிருந்து பதிவான ஒரு அறிவிப்பில் ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள்:

{لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ لَعَدُوِّهِمْ قَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ إِلَّا مَا أَصَابَهُمْ مِنْ لَأْوَاءَ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ. قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَأَيْنَ هُمْ؟ قَالَ: «بِبَيْتِ الْمَقْدِسِ وَأَكْنَافِ بَيْتِ الْمَقْدِسِ }

“உம்மத்தில் எப்போதும் உண்மையின் பக்கம் வெற்றிக்கொள்ளும் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும், அவர்களுடைய எதிரிகளுக்கு எதிராக வெற்றி பெற்ற; அவர்களை எதிர்ப்பவர்களிடமிருந்து அவர்களுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது அல்லாஹ்வின் ஆணையினால் ஏற்படுத்தப்படுவதை அன்றி அவர்கள் நோவினை படுத்தப்படமாட்டார்கள் அவர்கள் இவ்வாறே (வெற்றியாளர்களாக) இருப்பார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் ரசூலுல்லாஹ் என அவர்கள் வினவினார்கள்? “பைத் அல்-மக்திஸ் மற்றும் பைத் அல்-மக்திஸின் சுற்றுவட்டாரத்தில்…” என ரசூலுல்லாஹ் ﷺ பதிலளித்தார்கள்.

Comments are closed.