சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

விபச்சாரத்தில் ஈடுபட்டவரின் [(z)ஜானி] மீது கல்லால் எறியும் தண்டனையை கலீஃபா நிறைவேற்றுவாரா?

 

 

விபச்சாரமானது தான் திருமணம் செய்து கொண்ட நபருடன் மட்டும் உறவைக் கட்டுப்படுத்தும் கருத்துக்கு எதிர்மறையாக இருக்கின்றது. இவ்விஷயத்தில் தண்டனையானது மக்களை இதிலிருந்து தடுத்து குடும்பம் எனப்படும் சமூகத்தின் மையக்கருவை பாதுகாப்பதற்காக வேண்டி இதற்கு விதக்கப்படும் தண்டனையானது கடுமையானதாக இருக்க வேண்டும். இக்குற்றத்தை நிரூபிப்பதற்கான பொறுப்பை இஸ்லாம் அதிகப்படியாக சுமத்தியுள்ளதால் இதுபோன்ற குற்றங்களுக்கான சாட்சிகளை முன் வைக்க மூன்று முறைகளை மட்டும் கையாள்வதற்கு கட்டுப்படுத்துகிறது, ஆக இந்த மூன்று முறைகளுக்கு மாற்றமான வேறு எந்த வகையிலான பலமான ஆதாரத்தை கொண்டிருந்தாலும் இம்மூன்று முறைகளை மட்டும் பயன்படுத்தி குற்றத்தை நிரூபித்தாலே அன்றி இதற்கான தண்டனையை நிறைவேற்ற முடியாது என்பதை குறிக்கின்றது. இந்த மூன்று ஆதாரங்களானது, இந்த செயலில் ஈடுபட்ட நபர் தனது செயலை ஒப்புக்கொள்வது, ஒரே தன்மையை கொண்ட 4 நம்பகமான நபர்களின் வாக்குமூலம் அல்லது கர்ப்பமாவது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த அறிவிப்பில், ரசூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள். “ஆதாரமில்லாமல் ஒருவருக்கு நான் கல்லெரியும் தண்டனையை வழங்குவதாக இருந்தால், நடத்தையில் சந்தேகத்தை வெளிப்படுத்திய அந்த பெண்மணிக்கு வழங்கியிருப்பேன்,” (புஹாரி).

சந்தேகத்திற்குரிய இந்த பெண்மணியானவர் அநாகரீகமாக நடந்து கொண்டார் என்பதை காட்டுகின்றது மற்றும் இந்த நான்கு வகையிலான சாட்சிகளை கொண்டும் அல்லது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் எவ்விதத்திலும் விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்று அவர் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, ஆதலால் அவர் மீது ஒருபோதும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

Comments are closed.