சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஷரீ’ஆ முஸ்லிம் அல்லாதவர்களை காட்டிலும் முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளாதா?

இல்லை, இவ்வாறல்ல. இஸ்லாம் சமுதாய கண்ணோட்டத்தில் பார்க்கையில் அனைத்து குடிமக்களையும் அவர்களுடைய இனத்தை பார்க்காமல் மனிதனாகவே பார்க்கின்றது. இதன் விளைவாக இஸ்லாமிய நிலப்புகளில் குடியிருக்கும் அனைவரையும் அவர்களுடைய கொள்கை, நிற அல்லது இனத்தை கருத்தில் கொள்ளாமல் அதன் குடிமக்களாக பார்க்கப்படுவர். குடியுரிமை என்பது பிறப்பால் அல்லது திருமணத்தால் அல்லாமல் குடியிருப்பதன் அடிப்படையில் வழங்கப்படும். குடியுரிமை கொண்டுள்ள அனைவரும் கிலாஃபத்தின் குடிமக்களாவர், எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய விவகாரங்களை நிர்வகிப்பது கிலாஃபத்தின் கடமையாகும். கிலாஃபத்தில் குடியுரிமை கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத ஒவ்வொரு மனிதரும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஷரீ’ஆ ஆணையிட்டுள்ள அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பார்கள். குடியுரிமை கொண்டிராத எவருக்கும் அவர் முஸ்லிமான ஆணாக/பெண்ணாக இருந்தாலும் இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றது.

முஸ்லிம் அல்லாத குடிமக்களை பொறுத்தவரை, அவர்களுடைய நம்பிக்கைகள் மற்றும் வணக்க வழிபாட்டு விஷயங்களில் தலையிடப்படமாட்டார்கள். உணவு மற்றும் அலங்காரம் தொடர்பான விஷயங்களில் சட்டத்தின் பொதுவான கட்டமைப்பிற்குள் அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடத்தப்படுவார்கள். முஸ்லிம் அல்லாதவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான பிரச்சனைகளை கிலாஃபத்தினால் அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மூலம் அவர்களிலிருந்து நீதிபதியை நியமித்து தீர்த்து வைக்கப்படும். இஸ்லாம் பொது இடங்களில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என பாகுபாடின்றி அனைத்து குடிமக்களின் மீதும் தனது சட்டங்களை நடைமுறைப்படுத்தும். இவ்வகையில் பொது இடங்களில் அனைத்து குடிமக்களின் மீதும் ஒரே மாதிரியான சட்டங்கள் விதிக்கப்படும

Comments are closed.