சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஹுதூதுகள் காட்டுமிராண்டித்தனமானதாக இல்லையா?

 

 

குற்றங்களை தடுக்கக்கூடியதை அடிப்படையாகக் கொண்ட தண்டனைகளில் ஹுதாத் என்பது அதை முழுமையான இஸ்லாமிய கட்டமைப்பில் நடைமுறைப் படுத்தப்படும் போது ஒரு ஜொலிக்கும் முன்னுதாரணமாகத் திகழக்கூடியதாகும். கூடுதலாக, ஹுதூத் தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கும் அதேவேளை, குற்றத்தை மெய்பிப்பதற்கான ஆதாரம் அதிகப்படியாக இருப்பது அவசியமாகும். ஆகவே திட்டவட்டமான ஆதாரம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே தண்டனைகள் நிறைவேற்றப்படும். தண்டனை வழங்குவதன் நோக்கமானது ஒரு ஆண் அல்லது பெண் புரிந்த பாவத்திலிருந்து தூய்மை படுத்துவதுவதற்காக அளிக்கப்படுவதாலும் இரண்டாவதாக வெகுஜனத்தை குற்றங்கள் புரிவதிலிருந்து தடுப்பதற்காகவும் இருப்பதனால் தண்டனைகளானது எவ்விதமான தயக்கமுமின்றி நிறைவேற்றப்படும். இந்த முறையில் கலீஃபா ஒரு தெளிவான செய்தியை குற்றவாளிகளுக்கும் ஊழலுற்றவர்களுக்கும் சென்றடையுமாறு செய்வார் அதாவது அவர்களுடைய செயல்களுக்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று.

Comments are closed.