சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இங்கிலாந்தின் அதிர்ச்சிக்குரிய வறுமை அளவுகளுக்கு முதலாளித்துவ பொருளாதாரம் தான் காரணம்

செய்தி :

டிசம்பர் 4 ம் தேதி, பிரிட்டிஷ் சமூக கொள்கை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொண்டு நிறுவனமான ஜோசப் ரௌண்ட்ரி பவுண்டேஷன், பிரிட்டனைப் பாதிக்கும் அதிர்ச்சியூட்டும் வறுமை நிலைகளை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பிரிட்டனில் தற்போது ஐந்தில் ஒருவருக்கு 5:1 மேற்பட்டு (14 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்) வறுமையில் உள்ளனர், இதில் குழந்தைகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பல தசாப்தங்களாய் மோசமான சரிவில் உள்ளனர். அந்த அறிக்கையின் படி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் இன்னும் 400,000 குழந்தைகளும், 300,000 ஓய்வூதியம் பெறுவோர்களும் வறுமையில் வாழ்கின்றனர். ஆக 4 மில்லியன் குழந்தைகள்; அதாவது மொத்த இளைஞர்களில் 30% சதவித்தினர் இப்போது இங்கிலாந்தில் வறுமையில் வாழ்கின்றனர். பலர் உணவுப் போன்ற அத்தியாவசிய தேவைக்கான குறைபாட்டுடன் உள்ளனர். கிட்டத்தட்ட அரை சதவீத (46%) பெற்றோரில் ஒருவரை மட்டும் கொண்ட குடும்பங்கள் வருமையில் வாழ்ந்து வருகின்றனர். ( மூல: தி இன்டிபென்டன்ட்)

இந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் அரசாங்கத்தின் சமூக மொபிலிட்டி கமிஷனின் மொத்த உருப்பினர்கள் பதவி விலகியதன் பின்னரே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. நாட்டின் செல்வத்தில் உள்ள பெரும் சமத்துவமின்மையை எதிர்கொள்ளும் பொறுப்பு அந்த கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் உறுப்பினர்கள் “நியாயமான பிரிட்டன்” உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முன்னேற்றமும் கவனமும் இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி, அவர்களது பதவியை விட்டு வெளியேறினர். கெல்லாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘ யூகோவ் ‘ நடத்திய சமீபத்திய ஆய்வில், லண்டனில் உள்ள பெற்றோர்களில் நான்கில் ஒருவர் 1:4, தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க இயல்வதைப் பற்றி அஞ்சுகின்றனர், ஐந்தில் ஒருவர் 1:5, தங்கள் வீடுகளை வெப்பமூட்டுவதா அல்லது தங்களது குடும்பத்திற்கு உணவளிப்பதா என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலையில் உள்ளனர், இப்படி 14 சதவீத (14%) பெற்றோர்கள் தொண்டு நிருவனங்களையும் உணவு வங்கிகளையுமே சார்ந்து இருக்கின்றனர். மேலும், இங்கிலாந்தின் மிகப்பெரிய உணவு வங்கிகளின் நெட்வொர்க்கை கொண்டிருக்கும் டிரஸ்ஸெல் டிரஸ்ட், 2016-2017 க்கு இடையில் 1.2 மில்லியன் அவசர உணவுப் பொட்டலங்களை தேவையுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளது. இது இங்கிலாந்தில் உணவு வங்கிகளை நம்பி உயிர்வாழும் மக்களின் வெரும் ஒரு பகுதி மட்டும் தான்.

கருத்து :

உலகளாவிய அளயில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சந்தை, உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்று என்றெல்லாம் இருந்தும் மக்களிடையே இத்தகைய வேகமாக பரவும் நிதி நெருக்கடி, மற்றும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கும், தன் குடும்பத்தினருக்கும் உணவளிக்க முடியாதது என்பது மிக பெரிய அவமானமாகும். இந்த அளவுக்கான அராஜ வறுமை மற்றும் இழப்பிற்கு பலர் காரணமென கருதி குறைகூறுவது, சிக்கன போர்வையில் குறைக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகள், நலத்திட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள், குறைந்த ஊதியங்கள், மற்றும் எரிவாயு, உணவு, வீடுகள் மற்றும் இதர அத்தியாவசிய செலவுகளின் அதிக விலைவாசி. எவ்வாறாயினும் பெரும்பாலான அரசியல்வாதிகள் அல்லது ஊடகங்களால் கவனிக்கப்படாமல் இருக்கும் உண்மை என்னவென்றால், இங்கிலாந்து மற்றும் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் முதலாளித்துவ அமைப்பு மற்றும் அதன் அடிப்படையில் இயங்கி வரும் பொருளாதார வடிவம் தான் இன்றைய மொத்த நிதி சமத்துவமின்மைக்கும் மற்றும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் தொடரும் வறுமைக்கும் காரணியாய் அமைந்துள்ளது.

பேராசை மற்றும் கடன் மீது கட்டப்பட்ட முதலாளித்துவத்தின் கடன் என்னும் எரிபொருள் அடிப்படையிலான வளர்ச்சி மாதிரி, ஆவியாகும் பொருளாதாரங்கள், உலகளாவிய அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, இதன் விளைவாக தொடர்சியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதன் அநீதியான வட்டி அடிப்படையிலான முறைதிட்டம் ஏழைகளிலிடமிருந்து பணத்தை உறிஞ்சி செல்வந்தர்களிடம் குவித்து பலரை மென்மேலும் வட்டிக் கடனால் முடக்குகிறது. அதன் அசட்டையான சூது அடிப்படையான பங்குச் சந்தை மற்றும் நிதி சேவை அமைப்புகள் பொருளாதாரம் உறுதியற்று இருக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. அதிக வரி வசூலிக்கும் முறை சிறுதொழிலார்களுக்கு தடையாய் இருந்து ஏழ்மைக்கு ஆழ்த்துகிறது. நீர், எரிவாயு, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை ‘உரிமை சுதந்திரம்’ என்ற அதன் கொள்கையின் கீழ் தனியார்மயமாக்கி, மக்களின் தேவைகளுக்கு அவர்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமான விளைகளுக்கு அவர்களை உட்படுத்தியது, பலர் கடும் குளிர் நாட்களில் கூட தங்கள் வீடுகளை வெப்பமயமாக்க முடியாமல் இருக்கின்றனர். மேலும் , முதலாளித்துவ அரசாங்கங்கள் தங்கள் நிறுவனங்கள், வணிகங்கள் ஆகியவற்றை அதிக வருவாய் ஈட்டும் முறைகளின் பக்கம் மட்டும் கவனம் செலுத்தி, கஜானா நிரம்புவதை பிரதானப் படுத்தி நடத்துகின்றன, மாறாக ஏழை எளியோரின் பராமரிப்பு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை அமைப்பதில் இல்லை.

சுருக்கமாக, இந்த முதலாளித்துவ அமைப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீதமாக ஆட்சி நடத்துவதிலும் முழுமையான தோல்வி அடைந்துள்ளது. சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தின் நிதி குழப்பம், அநீதி மற்றும் வறுமைக்கான மருந்து அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெனிசுலா, கியூபா, வியட்நாம் மற்றும் சீனா போன்ற நாடுகளில் வறுமையால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்க வேண்டும்.

இவ்வாறு இருந்தாலும், முஸ்லிம் உலகின் சிந்தனையில் திவாலான ஆட்சியாளர்கள் மற்றும் தலைமைகள் பாழான, தோல்வியுற்ற இந்த அமைப்பையே தங்களது நாடுகளில் தொடர்ந்து செயல்படுத்தி மக்களின் பொருளாதாரத்தை சுரண்டி சீரழிக்கும் அமைப்பை தான் விதைத்தள்ளனர். ஓர் முஸ்லீம் உம்மத் ஆக நாம் முதலாளித்துவ, சோசலிச மற்றும் இதர அனைத்து மனிதனால் இயற்றப்பட்ட அமைப்புகளின் இழிவான தோல்வியிலிருந்து நாட்டின் பொருளாதாரங்களை நிர்வகிக்கும் படிப்பினைகளை எடுத்துக் கொண்டு, செழிப்பின் பழன்களை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமின்றி அனைவரும் சுவைக்க வேண்டும்.

நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது, மொத்த பிரபஞ்சத்தை படைத்த, எல்லாம் அறிந்த, சர்வ ஞாணமுள்ள அல்லாஹ் நிர்ணயித்த பொருளாதார சட்டங்கள், மற்றும் பொருளாதார அமைப்பு மட்டுமே நாட்டின் செல்வத்தை நியாயமான, திறமையான வழியில் சீரமைத்து, ஓர் ஆரோக்கியமான மற்றும் நியாயமான பொருளாதாரத்தை உருவாக்கி வறுமையை தீர்க்கின்றது. இஸ்லாம் உற்பத்தியை காட்டிலும் செல்வத்தின் விநியோகத்தில் கவணம் செலுத்தும், வட்டி அடிப்படையிலான அமைப்பு மற்றும் சூதாட்ட நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை நிராகரிப்பது, செல்வப்பதுக்கல், மற்றும் நீர், எரிவாயு, மின்சாரம் போன்ற அத்தியாவசிய வளங்களின் தனியார் மயமாக்கலை தடுப்பது. இதன் மூலம் அனைவருக்கும் அதன் நன்மைகள் கிட்டும், நிலவளத்தின் சிறப்பான நிர்வாகத்திற்குள்ள ஆக்கப் பூர்வமான விவசாயக் கொள்கைகளை கொண்டுள்ளது, மற்றும் அதன் சீரிய கொள்கைகள், சட்டங்கள் தனிநபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க செய்து, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, ஏழைகளுக்கு கன்னியமான வாழ்க்கைத் தரத்தை வழங்கி, இவ்வாறே வறுமைக்கு எதிராக போராடும். நமது முஸ்லிம் நாடுகளில் செழிப்பை வளர்க்கும். நிச்சயமாக நபி வழியில் கிலாப்தை அமைப்பதன் மூலமே இஸ்லாமிய பொருளாதார அமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலும், எதிர்கால செழிப்பான பொருளாதாரத்தை, முஸ்லிம் உலகம் பார்க்கும் கண்ணோடத்தை மாற்றி செயல்படுத்தப்படும், பிதினில்லாஹ்.

Comments are closed.