சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

கூட்டு குழாய் திட்டத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடாக 2 மில்லியன் டாலர் யூத அரசுடன் ஜோர்டான் அரசு ஒப்பந்தம்

செய்தி :

2018 ற்கான தேசிய பட்ஜெட்டில் 1.5 மில்லியன் தினார் மதிப்பில் (2 மில்லியன் டாலர்) ஹாஷிமிய ராஜ்ஜியத்தையும் இஸ்ரேலையும் இணைக்க கூடிய எரிவாயு குழாய் திட்டத்தை ஜோர்டான் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை Al-Ghad என்ற செய்திதாளின் படி: ஜோர்டான்- இஸ்ரேல் மத்தியிலான இத்திட்டத்தின் செலவு தொகை சுமார் 3 மில்லியன் தினாராக 2019 ல் இருக்குமென்றும், 6 மில்லியன் தினாராக 2020 ல் இருக்குமென்றும் தெரியவந்துள்ளது. தலைநகர் அம்மானிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ஷேக் ஹுசைன் எல்லையை இது கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.(Source: MEMO 02/01/2018)

கருத்து:

முஸ்லிம் தேசங்களின் துரோகம் நாளுக்கு நாள் அது முடிவடையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. ஜார்டன் அரசு தன்னுடைய பொருளாதார சிக்கலை தீர்க்க, ஷேக் ஹுசைன் எல்லையை கடக்க கூடிய 90 கிலோமீட்டர் அளவிலான எரிவாயு குழாய் திட்டத்தை கடந்த 2016 செப்டம்பர் மாதம் யூத அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஜார்டன் அரசு யூத அமைப்புடன் தன்னுடைய இழிவான உறவை தொடர்கின்றது.

ஜார்டனின் தேசிய மின்சார சக்தி நிறுவனம் (NEPCO) யூத எரிவாயு நிறுவனமான நோபல் எனர்ஜியுடன் இவ்வொப்பந்ததை கையெழுத்திட்டுள்ளது. ஷாமில் உள்ள இயற்கை எரிவாயுவின் மொத்த பங்கில் 40% சதவீதம் நோபல் எனர்ஜி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் கிழக்கு தரை கடல் பகுதியை உள்ளடக்கிய பாலஸ்தீனம், சைப்ரஸ் மற்றும் எகிப்து பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு தளங்களிலிருந்து ஜார்டன் அரசு எரிவாயுக்களை எடுக்க உறுதுணையாக இருக்கும். இவ்வாதாயத்திற்காக ஜார்டன் அரசு யூத அமைப்புடன் வியாபார உறவு வைத்து பிராந்திய துரோகியாக இருந்து வருகிறது.

ஜார்டன் அரசும் மதசார்பின்மையை ஆதரிக்க கூடிய மற்ற அரசுகளும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அதாவது இவ்விடங்களில் நிச்சயமாக ஒருநாள் அல்லாஹ்வுடைய சட்டம் நடை முறை படுத்த படும் என்பதை.

நபி (ஸல்) கூறினார்கள்

“முஸ்லிம்கள் மூன்று விஷயங்களில் கூட்டாளிகள் , நீர், நெருப்பு, மேய்ச்சல் நிலங்கள் ” (அஹ்மது மற்றும் இப்னு மாஜா)

இந்த ஹதீஸ் இயற்கை வளங்களை விவரிக்க கூடியதாக இருக்கின்றது. அதாவது எரிபொருள் எண்ணைகள், ஆற்று நீர்கள், மழை நீர் மேய்ச்சல் நிலங்கள் போன்றவைகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை.

ஆகையால் இச்சொத்துகளை ஒரு அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ விற்பனை செய்ய அனுமதி இல்லை. அதற்கு ஒரு தொகை மக்களிடம் வசூலிப்பதும் அனுமதியில்லை.

இஸ்லாம் நீதமான மார்க்கமாகும், இதில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தொகையும் வசூலிக்க அனுமதிக்காத ஓர் அழகிய வாழ்க்கை வழிமுறையாகும்..

அல்லாஹ்வின் எதிரியிடத்தில் நேசம் பாராட்டுவது (allying) தெளிவான குப்ராகும். ஜியோனிச அமைப்பை தொடர்ந்து அங்கீகரித்து வருவது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதற்காக ஜார்டன் தலைமைத்துவத்திற்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் கைசேதத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

பாலஸ்தீன மக்கள் மீட்புக்காக ஏங்கி கொண்டிருக்கும் போது, காசாவில் மின்சாரம் கூட இல்லாத சூழ்நிலையில், அருகில் இருக்கும் முஸ்லிம் (ஆட்சியாளர்) அநியாயக்காரர்களுடன் வியாபார உறவு வைத்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலம், அவர்கள் இதுவரை ஜியோனிச அடக்குமுறையை எதிர்த்து வந்தது வெறும் வாய் வார்த்தை தான் என்பது தெளிவாகின்றது.

அல்லாஹ் (சுபு) இஸ்லாமின் நீதத்தின் மூலம் மீண்டும் இவ்வுலகை ஒளி பெற செய்வானாக.

Comments are closed.