சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 10.01.2018

சிரியாவில் ரஷ்யாவின் பலம் குறைகின்றது

சிரியாவில் உள்ள ரஷ்யாவின் இராணுவ தளத்தில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஏற்பட்ட பெருந்தாக்குதலில் இரண்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டத்தோடு அப்படைத்தளம் பெரும் சேதத்தை சந்தித்தது, இதனை தொடர்ந்து மேலும் பல தாக்குதல்கள் அப்படைத்தளத்தில் வழக்கமாக நடக்கின்றது. ஜனவரி 6, 2018 அன்று மற்றொரு தாக்குதல் வானில் பறக்கும் சிறுவகை ஆளில்லா விமானம் மூலம் நிகழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத்தால் பஷார் அல் அஸ்ஸாதின் ஆட்சி நல்லமுறையில் பாதுகாக்கப்பட்டதென்றும் தங்கள் இராணுவத்தை குறைப்பதாக கூறிய ஒரு மாதத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளாகும். இத்தகைய நவீன தாக்குதல்களை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில நிகழ்த்தியிருப்பதிலும் , நவீன ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பதும், போராளிகளின் திறன் வழக்கமாக போராளிகளின் கூட்டத்தில் உள்ள ஆயுதபலத்தை விட மிகவும் திறன்பட உள்ளதாக தெரிகிறது

சிக்கலில் இருக்கும் துனிசியா

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி, விலைவாசி மற்றும் வரி உயர்வால் துனிசியாவில் உள்ள நகரத்தில் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் , இராணுவத்திற்கும் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு அமைச்சரகம் அறிவித்த அறிவிப்பில், தூனிஸ் நகரத்திலிருந்து 40 கி.மீ. மேற்கில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒருவர் கொல்லப்பட்டதாக வந்துள்ளது. இளைஞர்கள் சிலர் அரசு கட்டிடத்தை தீ வைக்க முயற்சித்தபோது, அதை இராணுவம் தடுக்க முயற்சித்தபோது இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது என நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர். ஐந்து நபர்கள் காயப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்டம் துனிசியாவில் உள்ள பத்து நகரத்திற்கு பரவியுள்ளது. அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளில், உள்நாட்டு போரில் சிக்காமல் தன்னுடைய மதசார்பற்ற அரசியலமைப்பை தக்க வைத்த ஒரே நாடு என்ற பெருமை துனிசியாவிற்கு உண்டு. ஆனால் இதனை தொடர்ந்த அரசுகள், பென்அலியின் தோல்விபெற்ற கொள்கைகளையே பின்பற்றி, நாட்டை குழியில் தள்ளிவிட்டனர். பென்அலியின் அரசு பல தசாப்தமாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தோல்விகண்டுள்ளது, இப்போது அவருடைய சீடர்கள் மீண்டும் பதவியில் வந்து அதே தோல்வியுற்ற பழைய கொள்கைகளை தொடர்கின்றனர்.

துருக்கியை சார்ந்த தொலைக்காட்சி ஜெருசலம் பற்றிய செய்தியை வெளியிட்டது

துருக்கியை சார்ந்த தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் ஒரு ஒலிநாடாவை வெளியிட்டது, இதில் எகிப்திய உளவுத்துறை எகிப்தில் உள்ள செல்வாக்குள்ள நபர்களிடம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் இருக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் முடிவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஒலிப்பதிவு அரபி மொழியில் வந்துள்ளது, இதனை மேகமலீன் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது , மேலும் இது எகிப்து வெளிப்படையாக அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்ப்பதாக கூறியதற்கு நேர்முரணாக தெரிகிறது. மேகமலீன் தொலைக்காட்சி, இஸ்தான்புல்லை சார்ந்த இலவசமாக வெளிவரும் செயற்கைகோள் தொலைக்காட்சி ஆகும் , இதனை எகிப்திலிருந்து வெளியானோர்களால் நடத்தப்படுகிறது. இந்த ஒலிநாடாவில் , கேப்டன் அஷ்ரப் எல் க்ஹோஜி என அடையாளம் காணப்பட்ட நபர், விருந்தினரிடம் ‘இஸ்ரேல்’ எகிப்தின் தேசிய நலனில் இல்லை என்றும், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிடவேண்டும் என்றும் கூறினார். எகிப்தின் அரசு தகவல் மையம் இந்த பதிவை மறுத்துள்ளது. சயீத் ஹசசீனிடம் மேற்கொண்ட அழைப்பில் , தொலைக்காட்சி தொகுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எல்-க்ஹோலி கூறியதாவது, அணைத்து அரபு நாட்டு சகோதரர்களும் எதிர்ப்பது போல் இந்த முடிவை தாங்களும் எதிர்ப்பதாகவும் , இதுவே எகிப்தின் தேசிய பாதுகாப்பின் நிலைப்பாடு என்றும் கூறினார். இதன் பிறகு, இந்த முடிவு உண்மையானால், பாலஸ்தீனிய மக்களால் இதனை நிச்சயம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

Comments are closed.