சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

பாகிஸ்தானிற்கு எதிரான டிரம்ப்பின் ட்வீட், அமெரிக்கா பாக்கிஸ்தானை சார்ந்துள்ளதை மறைக்க முயற்ச்சிக்கிறது

பகிஸ்தானிற்கு எந்த அளவு அமெரிக்கா தேவையோ அதை விட பல மடங்கு அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் தேவை. டிரம்ப்பின் டீவீட்டில் அவர் கூறியது போன்று அமெரிக்கா ஆப்கான் போரில், பாகிஸ்தானிற்கு 33 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது, இதை விவாதத்திற்காக உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அமெரிக்க போரில் பங்கெடுத்துக் கொள்வதன் காரணமாக பாக்கிஸ்தான் அதன் பொருளாதாரத்தில் இருந்து இழந்த அளவை ஒப்பிடும்போது, பாகிஸ்தான் அமெரிக்காவை விட அதிக பணத்தை செலவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் மொத்த இழப்பு வருடத்திற்கு $ 7-9 பில்லியனாகும், இது 15 ஆண்டுகளில் குறைந்த எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டாலும் 105 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்காவும் அதன் நேட்டோ படைகளும், ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படைகளை தக்க வைத்து கொள்ள வேண்டுமென்றால் அது பாகிஸ்தான் மூலியமாக தான் முடியும்.ஏனெனில் ஆப்கானிஸ்தான் நாலாபுறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. மற்றும் அதற்கு கடல் வழி இல்லை.

எனவே அதன் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு அதன் பொருட்களை விநியோகிப்பதை, கராச்சியில் உள்ள துறைமுகத்திற்கு கப்பல் மூலம் கொண்டுவந்து, பிறகு ஆப்கானிஸ்தானுக்குள், பாகிஸ்தானின் எல்லை வழியாக கொண்டு செல்வதன் மூலம் அது தங்கள் படைகளை தக்க வைத்து கொள்கிறது.ஆப்கானிஸ்தானின் வடக்கில் வான்வெளி வழியாக மற்றொரு பாதை உள்ளது, ஆனால் போக்குவரத்து செலவுகள் 3 மடங்கு அதிகரிக்கிறது.எனவே சில குறுகிய கால அவசர விநியோக நடவடிக்கை தவிர, கராச்சி வழியில் ஒப்பிடுகையில் இது உண்மையில் அதிக செலவுடையது,மேலும் இந்த வடக்கு பாதை ரஷ்யாவின் செல்வாக்கு உள்ள மத்திய ஆசியா வழியாக செல்கிறது.

அமெரிக்காவிற்கு இராணுவ ரீதியான தொழில்நுட்பம் இருக்கும் பட்சத்திலும், பாகிஸ்தான் அங்குள்ள சில ஆயுத குழுக்களிடம் தொடர்ப்பில் உள்ளதை போன்று அமெரிக்காவிற்கு உள்ளூர் ஆயுதக் குழுக்களிடையே தொடர்பு இல்லை, எனவே ஆப்கானிஸ்தானின் அரசியல் தீர்விற்கு பாகிஸ்தான் மிகவும் அமெரிக்காவிற்கு தேவை.

அமெரிக்காவின் பிரச்சினை என்னவென்றால், கிட்டத்தட்ட ஒவ்வொரு பாக்கிஸ்தான் மக்களும் இப்பகுதியில் இருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பை நிராகரிப்பார்கள். ஆகையால் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், பாகிஸ்தானிய தலைவர்களுக்கு ஒரு அரசியல் மறைப்பை உருவாக்கி அங்குள்ள வெகுஜன மக்களின் போராட்டம் எதுவும் இல்லாமல் பாகிஸ்தானிய அரசு அமெரிக்காவிற்கு உதவி செய்ய வேண்டும். இதை அவர்கள் பல வழிகளில் செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று, தற்போது டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும் அற்பமான உதவியாகும்(இது பொதுவான வளர்ச்சியை விட போரின் விளைவுகளுடன் தொடர்புடையது) ஆனால் மிக முக்கியமானவை எது என்றால் அங்கு நடக்கும் போர் பாகிஸ்தானின் நலனுக்கனான போராகவும் அதில் எந்தவித அந்நிய நாட்டின் நலனும் இல்லை என்பதாக ஒரு பொய்யான தொற்றைத்தை கொண்டு இதை செயல்படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிய தலைவர்கள் அமெரிக்கா என்ன சொல்கிறதோ அதைச் செய்யும் நபர்களாக இல்லை என்று காட்டுகின்ற சூழ்நிலையை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள், என்வே தான் அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே இப்படி பட்ட பதட்டங்களும், கருத்து மோதல்களும் உள்ளதாக சித்தரிகின்றார்கள். ஆனால் உண்மையில் இப்படி எதுவும் இல்லை. அமெரிக்காவிற்கும் பகிஸ்தானிற்கு உண்மையில் மோதல் இருந்தால் கராய்ச்சி வழியாக அமெரிக்க படைகளுக்கு ஆயுதங்களை அனுப்பும் விஷயத்தை நிறுதியிர்க்க வேண்டும். மேலும் இந்த போர் ஓரிரு வாரங்களில் முடிந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை.உண்மை என்னவென்றால் பாகிஸ்தானிய தலைவர்கள் அமெரிக்கா என்ன கேட்கிறதோ அதை அதிகமாகவே செய்து தரும், அதே நேரத்தில் அதன் மக்களிடமும், தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றிய கேள்விகளைக் கொண்டிருக்கும் அதன் ஆயுதப்படைகளின் சில பிரிவிற்கும், இதை தங்கள் நாட்டு பிரச்னையாக காட்டி அதை மறைக்க பார்கிறார்கள். இது ஒரு உதாரணம்.

மற்றொரு உதாரணம், ஆப்கானிஸ்தானில் போராளிகளின் வருகையை கட்டுப்படுத்த அமெரிக்காவிற்கு உதவுவதற்கு ஆப்கானிஸ்தானுடனான அதன் எல்லையுடன் ஒரு பெரிய வேலியை கட்டுகிறது.இது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் உள்ள வேலியாகும்.

ட்ரம்ப்பிடமிருந்து வந்த இந்த ட்வீப் பாக்கிஸ்தானிய நிலப்பரப்பில் ஒரு எஜமான் மற்றும் அதன் அடிமைகளுக்கு இடையில் பதட்டங்கள் நிலவுவதாக கடந்த 15 ஆண்டுகளாக சித்தரித்து வைத்த கதைக்கு இணங்கி வந்துள்ளது. அதனால் அங்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் வீரர்களுக்கு பாக்கிஸ்தான் அதன் சொந்த அடிப்படையில் தான் இந்த விஷயங்களை செய்து வருகிறது என்று காட்டுவதற்கு தான் இப்படிபட்ட ட்வீட்டை டிரம்ப் பாகிஸ்தானிய தலைவர்களுக்கு சார்பாக வெளியிட்டார்.

இது பாகிஸ்தான் தலைவர்கலால் மட்டுமல்ல, முஸ்லீம் உலகம் முழுவதும் பல தலைவர்கள் வேறுபட்ட கதைகளுடன் நாம் பார்க்கும் அரசியல் துரோகத்தின் அதே செயலாகும். அது சவுதியாகட்டும்,துருக்கியாகட்டும்,எகிப்தாக இருக்கட்டும், அனைத்து நாடுகளிலும் உள்ள தலைவர்கள் இப்படி தான் துரோகத்தை செய்துவருகிறார்கள்.

இறுதியாக இந்த இடங்களில் உள்ள ஆட்சியாளர்கள் தங்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். முஸ்லீம் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் பற்றி இஸ்லாம் சொல்வதை பற்றியும் மக்களிடம் கூறி ஏமாற்றி விடுகிறார்கள். அதே சமயம் அங்குள்ள நிலைமையை மாற்றுவதில் நமக்கு போதிய திறமையும், வலிமையும் இல்லை என்பதாக கூறி அவர்களுடைய துரோகத்தை மறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு மாற்றத்தை கொண்டுவருவதற்கான ஒரு அரசியல் தெளிவும் சிந்தனையும் இருந்தால் மாற்றத்தை கொண்டு வரமுடியும். அவர்கள் அனைவரும் தங்கள் மக்களை பார்த்து அச்சமுறுகிறார்கள். அதனால் அமெரிக்காவைப் போன்ற நாடுகளுடன் தங்கள் சொந்த மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவது பற்றி விவாதித்து பிறகு தங்கள் உள்நாட்டு மக்களை போராட்டத்தில் இருந்து தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

போதுமான மக்கள் இதை உணர்ந்தார்கள் என்றால், இந்த ஆட்சியாளர்கள் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள். சூரா அன்கபூத்தில் அல்லாஹ் கூறும் ஒரு வசனத்தை நாம் இங்கு நியாபகப் படுத்தலாம்.

مَثَلُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ‌ اِتَّخَذَتْ بَيْتًا ‌ وَ اِنَّ اَوْهَنَ الْبُيُوْتِ لَبَيْتُ الْعَنْكَبُوْتِ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலவீனத்தை அறிவார்கள்).
(அல்குர்ஆன் : 29:41)

Comments are closed.