சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மிலோசெவிக்கை விசாரித்து வந்த ஐ.நா போர்க்குற்ற நீதிமன்றத்தின் முடிவினால் அதன் கதவுகள் மூடப்பட்டுள்ளது

செய்தி

1990 களில் யுகோஸ்லாவியாவின் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து விசாரித்து வந்த ஐ.நா போர்க்குற்ற நீதிமன்றம், முன்னாள் செர்பிய ஜனாதிபதி ஸ்லொபோடான் மிலோசெவிக்கை விசாரணைக்கு உட்படுத்திய, இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் வியாழனன்று அதன் கதவுகளை மூடியது.(ராய்ட்டர்ஸ்)

கருத்து

முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது (ICTY) 1990 களில் பால்கனில் நடைபெற்ற மோதல்களின் போது நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்களை விசாரித்து வரும் ஐக்கிய நாடுகளின் நீதிமன்றம் ஆகும். மற்றொரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (“ICTR”) ஆகும். அது 2015ம் ஆண்டு இறுதியில் மூடப்பட்டது. இந்த நீதிமன்றங்களின் செயல்முறையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களின் பொறிமுறையைக் (“Mechanism” or “MICT”) கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நீதிமன்றங்களின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இந்நீதிமன்றங்கள் குறிப்பிட்ட குற்றங்களான கொலை, சித்திரவதை, கற்பழிப்பு, அடிமைபடுத்துதல், சொத்துக்களை அழித்தல் மற்றும் இதர குற்றங்களில் நடைபெறுவதற்கு பெறும் பங்கை கொண்டிருக்கும் நபர்களை விசாரிப்பதாகும். குற்றவாளிகளை விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த “நீதிமன்றங்களானது வருங்காலத்தில் நிகழக்கூடிய குற்றங்களை தடுக்கும் என்றும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி வழங்கும் என்றும் இதன் மூலம் போர் நடைபெறும் பகுதிகளில் அமைதியை நிலவச்செய்வதற்கு பங்களிக்கும்” என்றும் கோரப்படுகிறது.

முதலாவதாக, இந்த நீதிமன்றங்களானது ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்பட்டவையாகும் அவை மேற்கத்திய காலனியாதிக்க நாடுகளால் தமது நலன்களுக்காக மற்ற நிலப்பரப்புகளில் சுரண்டுவதற்கான மற்றும் அழிவை ஏற்படுத்துவதற்கான அவர்களுடைய காலனியாதிக்க கொள்கைகளின் காரணமாக அவர்கள் நிகழ்த்திய அட்டூழியங்களை மறைப்பதற்காக நிறுவப்பட்ட கருவியாகும். உலகெங்கும் நடைபெறும் எந்தவொரு அரசியல் அமைதியின்மை, இனவாதம், இனப்படுகொலை மற்றும் இதர அட்டூழியங்களுக்கான காரணம் மேற்கத்திய காலனியாதிக்கவாதிகளின் சித்தாந்தமும், அந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் அவர்களுடைய கருவிகளின் இருப்பும், அதன் ஆதிக்கமும் மற்றும் அதன் செல்வாக்குமேயாகும்.

யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICTY) சாதித்தவைகளில் சில உதாரணங்களை காண்போம்: ஸ்லொபோடன் மிலோசெவிக் அவருடைய போர் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதற்கு முன்பாகவே அவருடைய சிறையில் தனது மரணத்தை தழுவினார். 22 ஆண்டுகளின் விசாரணைக்கு பிறகு ரேடோவான் கராட்ஜிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அது அவருடைய குற்றங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் அதன் விளைவாக இன்றளவும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் முஸ்லிம் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு சற்றும் பொறுத்தமானதாக இருக்கவில்லை. இந்த குற்றவாளியான ஸ்லோபோடன் பிரல்ஜக் நவம்பர் 29, 2017 அன்று ஹேகில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட சிறிது நேரம் கழித்து ஐ.நாவின் நீதிபதிகளுக்கு முன்பாக விஷம் அருந்தினார். இந்த விசாரணையின் சர்க்கஸ் 20 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருந்த போது போஸ்னியா மற்றும் ஹெர்ஜெ(z)கோவினா முஸ்லிம்கள் கொண்டிருந்த தங்களுடைய சொந்த நிலத்தின் மீதான சுய அதிகாரத்தை ஐ.நா மற்றும் மேற்கத்திய உலகால் திணிக்கப்பட்ட ஒரு சர்வாதிகார முறையிலான ஆட்சிமுறையின் மூலம் பறிக்கப்பட்டது, இந்த ஆட்சிமுறையானது முஸ்லிம் மண்ணில் முஸ்லிம் மக்களை கொன்ற மற்றும் கற்பழித்தவர்களுடன் “ஜனநாயக ரீதியாக” அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு அவர்களை கட்டாயப்படுத்துகிறது.

அதேநேரம், இதுபோன்ற நீதிமன்றங்கள் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் நடைபெற்ற இனச்சுத்தகரிப்பை வெறுமனே வேடிக்கை பார்த்தன, சிரியாவில் பஷார் அசாத், பர்மாவில் ஆங் ஸான் சூ கீ ஆகியோரால் நடத்தப்பட்ட படுகொலைகள் யெமனில் ஹவ்த்திக்கள் மற்றும் சவூதி அரேபியா நடத்திய படுகொலைகள் மற்றும் பாலஸ்தீனத்தில் யூத ஆக்கிரமிப்பு தேசம் என அழைக்கப்படும் உலகின் மாபெரும் தீவிரவாத இயக்கமான “இஸ்ரேல்” மற்றும் அதன் குடியேறிகளின் எண்ணிலடங்கா அத்துமீறல்களை கண்டும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. ஆக, ஐ.நா வும் அதன் நீதிமன்றங்களும் செய்வது என்னவென்றால் நீதி மற்றும் சட்டம் எனும் சொற்களால் தன்னை அலங்கரித்து கொள்வது மட்டும் தான்.

மனிதகுலத்திற்கு நீதி வழங்குவதாக இந்த நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளின் பொய்யான தோற்றம் குறித்து உலக மக்கள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் மதம், நிறம் அல்லது இன பாகுபாடின்றி அனைத்து மனிதகுலத்துக்குமான உண்மையான நீதியானது நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபா ராஷிதாவின் அரசால் அல்லாஹ் வழங்கிய இஸ்லாமிய ஆட்சியமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மட்டுமே அடையப்படும். இந்த அரசு முதலில் மனிதகுலம் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் உலகின் முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கம் மற்றும் காலனித்துவத்தை அப்புறப்படுத்தும், இவ்வாறு அது இஸ்லாத்தின் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளை முற்றும் முதலுமாக அப்புறப்படுத்தும். அதன்பிறகு இந்த அரசு இஸ்லாமிய நீதிமன்றங்களை நிறுவும், அது நீண்டு செல்லும் விசாரணைகளை கொண்டிருக்காது மற்றும் படுகொலை செய்தவர்களை சிறையில் அடைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த கொலைகாரர்களின் மீது அல்லாஹ் سبحانه وتعالى வின் ஆணைகளை தாமதப்படுத்தாமல் நடைமுறைப்படுத்தும். அதன் பின்னர் இந்த உலகம் முன்பு கிலாஃபத்தின் கீழ் அனுபவித்து வந்த நீதியையும் அமைதியையும் மீண்டும் அனுபவிக்கும்.

Comments are closed.