சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

எகிப்திய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது

ஜனவரி 6ம் தேதி, “ஜெருசலேம் சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எகிப்திய தலைவர்கள் மறைமுக ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஒலிநாடாக்கள் வெளிப்படுத்தின” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. அதில் கடந்த மாதம் அமெரிக்கா ஜெரூசலேத்தை ‘இஸ்ரேலின்’ தலைநகராக அங்கீகரிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததை எகிப்திய அரசாங்கம் வெளிப்படையாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் அதேவேளையில், ஒரு எகிப்திய புலனாய்வுத்துறை அதிகாரி பிரபலமான பல்வேறு தொலைக்காட்சி நெறியாளர்களிடம் எகிப்தியர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர்களை இணங்க வைக்குமாறு கேட்டுக் கொண்டார். கேப்டன் அஷ்ரஃப் அல்-கோலி எனும் அந்த அதிகாரி நெறியாளர்களிடம் “அரபு சகோதரர்கள் இந்த விஷயத்தை மறுக்கிறார்கள்” ஆனால் இது “சில காலத்திற்கு பிறகு, யதார்த்தத்தில் இந்த விஷயம் நிலைபெற்றிருக்கும்” எனக் கூறியதாக பதிவிடப்பட்ட ஒலிநாடாக்கள் தனக்கு கிடைத்தருப்பதாக இந்த செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் இதை தடுக்க முடியாது மற்றும் நாம் போருக்கு செல்ல விரும்பவில்லை. பாலஸ்தீனியர்கள் ஜெரூசலேத்திற்காக தமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தற்போது பாலஸ்தீன அரசாங்கம் இயங்கி வரும் ரமல்லாஹ்வின் மேற்கு கரையோடு தங்களை திருப்தி படுத்திக் கொள்ள வேண்டும் என கோலி நெறியாளர்களிடத்தில் வலியுறுத்தியதாகவும் கூறியது. “ரமல்லாஹ்வை விட ஜெரூசலேம் எந்த விதத்தில் வேறுபட்டிருக்கின்றது?” எனக் கேட்டு “விட்டுக்கொடுத்தல் என்பது கட்டாயமாக இருக்கின்றது, அதன்படி இந்த போரை நிறுத்துவதற்காகவும் அதன் மூலம் வேறு எவரும் உயிரிழக்காமல் செய்ய ரமல்லாஹ் பாலஸ்தீனத்தின் தலைநகராக இருக்கும் வகையிலான ஒரு சமரசத்தை அடைந்தால், நாங்கள் அதை நோக்கி செல்வோம்,” எனக் கூறினார். தி நியூயார்க் டைம்ஸின்படி, அமெரிக்காவின் ஜெரூசலேத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ‘அபாயகரமானது’ என்றும் அதுவொரு ‘இன்டிஃபாதா பிரச்சனையாகும்’ எனக் கூறி “இன்டிஃபாதா எகிப்திய தேச பாதுகாப்புக்கு உதவாது ஏனெனில் இன்டிஃபாதா இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் ஹமாஸையும் மறுமலர்ச்சி அடையச் செய்யும்” எனக் கூறினார். (ஆதாரம்: nytimes.com)

கருத்து:

அடுத்தடுத்து ஆட்சி செய்துவரும் எகிப்திய அரசாங்கங்கள் புனித பூமியான பாலஸ்தீனத்திற்கு செய்து வரும் துரோகமானது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஒன்றாகும். எனினும் இன்று, கொலைகார சர்வாதிகாரியும் அமெரிக்காவின் வளர்ப்பு நாயுமான அப்துல் ஃபத்தாஹ் அல்-ஸிஸியின் கீழ் இந்த துரோகமானது அடுத்த கட்ட நிலையை அடைந்துள்ளது. ஒரு அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனமான சர்வதேச நெருக்கடி குழுவிற்கான [International Crisis Group (ICG)] மூத்த ஆய்வாளரான ஜெரூசலேத்தை மையமாக கொண்ட நாதன் த்ராலின்படி “எகிப்திய-இஸ்ரேலிய உறவு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உச்ச நிலையில் உள்ளது”. இந்த விஷயத்தை இந்த பிராந்தியத்திலுள்ள பல அரசியல் ஆய்வாளர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளார்கள், எகிப்திய அரசும் யூத ஆக்கிரமிப்பாளர்களும் தசாப்தங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு நெருங்கிய ஒத்துழைப்பை நழ்கி வருகிறார்கள், குறிப்பாக க(z)ஸ்ஸா மற்றும் சினாய் பாலைவனத்தில் இருக்கும் போர்க்குழுவுக்கு எதிராகவும் பாதுகாப்பு மற்றும் இராணுவ அரங்கில் ஒத்துழைப்பை நழ்கி வருகின்றன என அவர்கள் கூறினர். புளும்பெர்க் எனும் ஊடகம், எகிப்திய அரசின் ஒப்புதலோடு ‘இஸ்ரேல்’ சினாய் பகுதியில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. அல்-ஸிஸியின் தலைமையின் கீழ் ரஃபாஹ் சந்திப்பு பாதையை முடக்கும் அளவுக்கான தடையை விதித்து க(z)ஸ்ஸாவிலுள்ள நமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் தங்களது அடிப்படைத் தேவையான எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகளை பெறுவதை தடுக்கும் வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்ததன் மூலம் க(z)ஸ்ஸாவின் முஸ்லிம்களை மூச்சித் திணர வைத்ததில் இந்த தீவிரவாத சியோனிச அரசுடன் எகிப்திய அதிகாரிகள் கொண்டுள்ள இந்த சட்டவிரோத கூட்டும் மேலும் பாலஸ்தீனர்கள் கட்டிய குகைப் பாதையை அழிப்பதில் எகிப்திய அரசு இந்த கொடூரமான ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்ததும் நன்கு அறிந்ததே. புளும்பெர்கின்படி, இவ்விரு அரசாங்கங்களும் பல மில்லியன் டாலர்கள் அளவுக்கான எரிவாயு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் அளவுக்கும் நெருங்கியுள்ளனர்.

மே 2016ல், அல்-ஸிஸியின் அரசு எகிப்திய பள்ளிக்கூடங்களில் ‘இஸ்ரேலுடன்’ தோழமையை பாராட்டும் விதமான தோரணையுடன் அதை அரவணைக்கும் வகையிலும் மற்றும் இந்த கொலைகார ஆக்கிரமிப்பாள அரசுடன் சமாதானத்தை மேற்கொள்வதற்கு அதிக அளவில் வலியுறுத்தும் விதமாகவும் ‘அரபுலகின் நிலவியல் மற்றும் நவீன எகிப்தின் வரலாறு’ எனும் பாடபுத்தகத்தை அறிமுகப்படுத்தியது. அதேபோல் இந்த புத்தகத்தில் யூத அரசுடனான மோதலின் வரலாறு குறித்து ஏற்கனவே கூறப்பட்டிருந்த 32 பக்கங்களிலிருந்து 12 பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதனோடு, எகிப்தின் 9ம் வகுப்பு மாணவர்கள் இப்போது 1979ல் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தத்தின் விதிகளை மனனம் செய்ய வேண்டியிருக்கிறது.

கெய்ரோவை சேர்ந்த ஒரு அரசியல் ஆய்வாளரான, முஹம்மது சுலைமான் எகிப்துக்கும் ஆக்கிரமிப்பாளனுக்கும் இடையேயான உறவின் தற்போதய அத்தியாயத்தை இரண்டு அரசுக்கும் இடையேயான “முழுமையான கூட்டுப் பங்காண்மை, உடைக்க முடியாத கூட்டணி மற்றும் இராஜாங்க உறவின் முழுமைப்படுத்தல்” என வரையறுக்கிறார், அதேநேரம் க(z)ஸ்ஸாவின் இஸ்லாமிய பல்கழைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவரான வலீத் அல்-மொதள்ளல், அல்-ஜசீராவிடம் இத்தகைய ‘நெருங்கிய உறவை’க் கொண்டிருக்கும் போது “பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு இஸ்ரேலை அது எவ்வாறு வற்புறுத்தமுடியும்,” என்பது சந்தேகமாக இருக்கிறது என்றும், “அதற்கு மாறாக இவ்வாறு நடைபெறலாம் என்று தெரிகிறது – அதாவது இஸ்ரேலின் நோக்கத்திற்கு விட்டுக் கொடுக்க பாலஸ்தீனர்களை எகிப்து அதிக அளவில் வற்புறுத்தும்.” எனக் கூறினார்.

நமக்கு ஏற்கனவே தெரிந்தது போல், பாலஸ்தீனம் மீது இழைக்கப்படும் இதுபோன்ற துரோகமானது தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்சி செய்துவரும் மதசார்பற்ற எகிப்திய அரசுகளின் மரபு மட்டுமல்லாமல் கிலாஃபத்தின் அழிவிற்கு பின்னர் முஸ்லிம் உலகில் ஆட்சி செய்யும் அனைத்து ஆட்சியாளர்கள் மற்றும் அரசுகளின் மரபாக இருக்கின்றது. அல்-குத்ஸ் மற்றும் இந்த புனித பூமியின் முக்கியத்துவம் குறித்து வாக்கு வன்மையை வெளிக்காட்டி வரும் அதேவேளையில் இந்த அறுவறுக்கத்தக்க முஸ்லிம் அரசுகள் பாலஸ்தீனம் மீதான அதன் ஆக்கிரமிப்பை வலுப்படுத்தும் விதமாக யூத அரசுக்கு உதவி புரிந்து வருகின்றன. உண்மையில், அவர்கள் ‘இஸ்ரேலுடைய’ மாபெரும் சொத்தாகவும் பாதுகாப்பு படையாகவும் செயல்பட்டு வருகின்றனர்! உதாரணத்திற்கு, டிரம்ப்புடைய அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் சவூதியின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் கிழக்கு ஜெரூசலேத்தை தலைநகராக கொண்டில்லாத ஒரு தேசம் உருவாக்கும் நோக்கத்தை ஒப்புக் கொள்ளுமாறு தனிமையில் வலியுறுத்தினார் என்று செய்தி வெளியானது. உண்மையில், 2017 செப்டம்பரில் ‘இஸ்ரேலுடைய’ தலைவர் நெடான்யஹூ வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு கூட்டத்தில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த யூத அரசு இன்று அரபு நாடுகளிடமிருந்து பெருமளவிலான ஒத்துழைப்பை அனுபவித்து வருகிறது எனக் கூறினார்.

நிச்சயமாக, நாம் ஒரு உம்மத்தாக இதுபோன்ற துரோகம் இழைக்கும் முஸ்லிம் அரசுகளை முடிவுக்கு கொண்டு வரவும் உடனடியாக நபித்துவ வழிமுறையிலான கிலாஃபத்தை நிறுவுவதற்கான காலம் நெருங்கிவிட்டது அந்த கிலாஃபத்தானது ஒரேயடியாக இந்த புனித பூமியை விடுவித்து அல்-குத்ஸை நம்பிக்கையாளர்களின் தலைநகராக ஆக்கி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அதன் போற்றத்தகு நிழலின் கீழ் அதை திரும்ப கொண்டு செல்லும்!

Comments are closed.