சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 12.01.2018

அமெரிக்க மக்கள் தொகையில் முஸ்லிம்களின் ஆதிக்கம்

அடுத்து வரும் இரு பத்தாண்டுகளில் (இரண்டு சகாப்தங்களில்) அமெரிக்க மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை முஸ்லிம்கள் எட்டி பிடிப்பார்களென தனியார் ஆராய்ச்சி நிறுவனமான Pew Research centre தனது ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளது..இந்த ஆராய்ச்சி முடிவானது அமெரிக்காவின் மதம் மற்றும் இனம் சார்ந்து அல்லாமல் அங்கு வாழும் மக்களில் 2007, 2011 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் பார்த்தால் 2017ம் ஆண்டு 3.45 மில்லயனாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 2050 க்குள் 8.1 மில்லினாக அதாவது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும். அதேவேளையில் அமெரிக்காவில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள யூத இன மக்கள் தொகையை விஞ்சிவிட வாய்ப்புள்ளது.

Pew Research centre தனது ஆராய்ச்சியின் அதற்க்கான காரணங்களையும் வெளியிட்டுள்ளது. யூதர்களை விட அதிகமாகவும், 2017ம் ஆண்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை 2050ம் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும் என எதிர்பர்க்கபடுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அது முஸ்லிம்களின் புலம் பெயர்வு ( புது வரவு முஸ்லிம்களின் அமெரிக்க குடியேற்றம்) Pew Research centre 2016ம் ஆண்டு மிக அதிகமான முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்ததாக கூறியுள்ளது. மேலும் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் எனவும் தனது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளது. இதனால் எதிர் காலத்தில் முஸ்லிம்களின் மனிதவளம் அதிகரித்திருக்கும் எனவும் 2050ல் மற்ற சமுதாயத்தை காட்டிலும் முஸ்லிம்களில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

மனித வளத்தில் அடுத்த இருபது ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் மேலாக முஸ்லிம்களின் எண்ணிக்கையும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கையும் அமெரிக்காவின் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும். உதாரணமாக 2020ல் தோரயமாக உள்ள 252,970,000 கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2050ல் 261,960,000 யாக மாறும். இருந்தபோதிலும் மற்ற சமுதாய இனங்களின் மக்கள் தொகை அதிகரிப்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனாலும் அதிகரித்து வரும் முஸ்லிம் மக்கள் தொகையை கணக்கிடும் பொது அது மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 2.1% மட்டுமே. உலகம் முழுவதும் அமெரிக்க இஸ்லாமை வளர விடாமல் தடுத்தப் போதிலும் தனது சொந்த நாட்டில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

நிச்சயமாக நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து ) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் – முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். ( அல் குர்ஆன் – 8:36)

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மாட்டிக்கொண்ட நெதர்லாந்தின் அமெரிக்க தூதர்

பேடே ஹோஎக்ச்ற (Pete Hoekstra) என்பவர் நெதர்லாந்தின் அமெரிக்க தூதராக இந்த ஆண்டு துவக்கத்தில் பொறுபேற்றுக் கொண்டார். இந்நிலையில் பொறுபேற்றபின் முதன் முதலாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை கடந்த 10.01.2018 புதன் கிழமை அன்று நடத்தினார். கடந்த காலத்தில் அவர் இஸ்லாத்தை பற்றிய உளறிய உளறல் அவருக்கு தலைவலியாக வந்து நின்றது. இவரின் கடந்த கால வரலாறு மிக அற்புதமானது. 2015ம் ஆண்டு நடந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்கள் ஐரோப்பாவில் குழப்பத்தை ஏற்படுதுகிறது, அந்த குழப்பம் நெதர்லாந்த் வரை வந்துள்ளதாகவும் இதனால் கலவரங்கள் நடந்து வாகனங்கள் ஏறிக்கப்பட்டதாகவும், அரசியல்வாதிகள் ஏறிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் ஐரோப்பாவில் மற்றும் நெதர்லாந்த்தில் கூட சில இடங்கள் எப்போதும் கலவர பூமியாகவே இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் 2015ம் ஆண்டு இஸ்லாத்தை பற்றிய தனது சர்ச்சைக்குரிய கருத்து சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். பத்திரிக்கையாளர்கள் ஒருவர் மாறி ஒருவர் விடாமல் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தனர். இவர்களின் கேள்விகளை சற்றும் எதிர்ப்பாராத பேடே ஹோஎக்ச்ற செய்வதறியாது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டார். முடித்துக்கொண்டார் என்று சொல்வதைவிட முடித்து வைக்கப்பட்டது என்று சொல்வது சிறப்பாக இருக்கும்.

ஒரு பொய்யன் (ட்ரம்ப்) தலைமையின் கீழ் இருக்கும் அதிகாரிகளும் பொய்யர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் எப்போதும் பொய்யையும் கற்பனைகளையும் அவிழ்த்து விட்ட வண்ணமே இருக்கின்றனர். ஆனால் இவர்களிடமுள்ள நேர்மறை அம்சம் என்னவென்றால் இவர்களின் வார்த்தைகளின் மூலம் இவர்கள் மனதிலுள்ள இனவெறி, வீடாப்பிடித்தனம், இஸ்லாதை பற்றி மக்கள் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கும் கேவலமான சிந்தனை ஆகியவை வெளிப்படுகிறது.

அமெரிக்காவின் விமர்சனத்தின் மூலம் அதன் துரோகத்தை உணரமுடிகிறது – பாகிஸ்தான் இராணுவ தளபதி

ட்ரம்ப் கடந்த ஜனவரி 1 ம் தேதி அன்று பாகிஸ்தான் பொய்யும் வஞ்சகமும் கலந்து தங்களை எமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். அமெரிக்கா பலமுறை பாகிஸ்தானை எச்சரித்ததாகவும் ஆனாலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும், மேலும் அவர்களுக்கு ஏகப்பட்ட நிதியுதவி அளித்தபோதிலும் அவர்கள் தீவிரவாதத்தை கட்டுபடுத்தவில்லை என்றும், ஆப்கான் தாலிபான்கள் மற்றும் ஹக்கானி ஊடுருவலை தடுக்கவில்லை என்றும், அதனால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 2பில்லியன் இராணுவ உதவியை நிறுத்தப்போவதாக அறிவித்தது.

பாகிஸ்தான் இராணுவ தளபதி அமெரிக்காவின் விமர்சனத்தின் மூலம் அதன் துரோகத்தை உணரமுடிகிறது என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் காமர் ஜாவீத் பஜ்வா இது சம்பந்தமாக தொலைபேசியில் அமெரிக்க இராணுவ தளபதி ஜோசப் வோடேலுடன் பேசினார். அப்போது மொத்த பாகிஸ்தானும் அமெரிக்காவின் விமர்சனத்தின் மூலம் அதன் துரோகத்தை உணரந்துள்ளது. மேலும் பஜ்வா தாங்கள் இராணுவ உதவியை நிறுத்தியது எந்த விதத்திலும் பாகிஸ்தானுக்கு பின்னடைவு கிடையாது. ஆனால் உதவியை நிறுத்தியதற்கு தாங்கள் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. நாங்கள் இதுவரை போராடியதற்கு மரியாதைக்குரிய அங்கிகாராத்தை மட்டுமே எதிர் பார்க்கிறோம். தங்கள் கூற்றால் நங்கள் துன்பப்பட்டு, துயரப்பட்டு, வேதனை பட்டு அல்லல் படுகிறோம் என்றார்.

தொலைபேசியில் பஜ்வா பேசும்போது தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் கூறி, தங்களுடைய தியாகங்களையும் ஓத்துழைப்பையும் நினைத்து பார்க்க வேண்டும், தாங்கள் இராணுவ உதவியை நிறுத்தியது எந்த விதத்திலும் பாகிஸ்தானுக்கு பின்னடைவு கிடையாது ஆனால் நாங்கள் இதுவரை போராடியதற்கு மரியாதைக்குரிய அங்கிகாராத்தை மட்டுமே எதிர் பார்க்கிறோம் என்றார்.

பாகிஸ்தான் இராணுவ தளபதி தங்களது எதிரியை கண்டுகொண்டதுபோல் பேசுகிறார். ஆனால் அவர் பேசும்தோனி எதிரியிடம் பேசுவது போல் இல்லை. அடிமை தன் எஜமானிடம் பிச்சை கேட்பதுபோல் உள்ளது. முஸ்ரபும் பஜ்வாவும் தாங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். அவர்கள் அமெரிக்காவை சமதனபடுத்த முயல்கின்றனர்.

உண்மையாகவே பஜ்வா அமெரிக்காவின் துரோகத்தை உணரந்திருந்தால் அவர் தன் கூற்றில் உண்மையாக இருந்தால் அமெரிக்காவிற்கு எந்த ஓத்துழைப்பையும் தராமல் அவர்களின் துதரகத்தை மூடி அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கலாம்.

Comments are closed.