சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

தன்னிறைவான ராணுவத்தை கொண்ட போதிலும், அதிபர் டிரம்ப் முன் மண்டியிடும் பாகிஸ்தானின் முதுகெலும்பில்லா தலைமைத்துவம்

பாகிஸ்தான் ராணுவ அமைப்பின் ஊடக பிரிவான Inter Services Public Relations (ISPR) கடந்த ஜனவரி 12, வெள்ளிக்கிழமை  செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஓடல் அவரிடமிருந்து  பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல் பஜ்வா நவாஸுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல் பஜ்வா நவாஸ், பாகிஸ்தானின் ‘தீவிரவாதத்திற்கு எதிரான  உறுதியான நடவடிக்கைகள்’ மேலும் தொடரும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அதிபர் டிரம்பின் தொடர்ச்சியான அவமதிப்பு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், உலகின் ஆறாவது பெரிய ராணுவத்தை கொண்ட பாகிஸ்தானின் ராணுவ தளபதி, உள்நாட்டில் குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் அமெரிக்காவின் போருக்கு பாகிஸ்தானின் முழு ஒத்துழைப்பை  உறுதிசெய்துள்ளார்.

ஒரு காலத்தில், இதே டிரம்ப் நிர்வாகம் ஆப்கானின்  பலவீனமான பழங்குடி முஸ்லீம் போராளி  குழுக்கள் முன் தாக்குப்பிடிக்க முடியாமல்  மண்டியிட்ட சமயம், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமளவிற்கு தள்ளப்பட்ட நிலையில், இந்த கொடுங்கோல் அரக்கனின் கொட்டத்தை அடக்கும் வலிமையும் இஸ்லாத்தின் மீது தூய பற்றுதலையும் கொண்ட மிகப்பெரிய ராணுவத்தை இஸ்லாமை மேலோங்க செய்யவும், கொல்லப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம்களின் உயிர்களை பாதுகாக்கவும் கட்டளையிடாமல், பாகிஸ்தானின் முதுகெலும்பில்லா தலைமைத்துவம் இந்த முட்டாள் கொடுங்ககோலனுக்கு சேவை புரிய சொல்லி அவன் முன் மண்டியிட்டு நின்றது. மாறாக பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு எதிராக கட்டளையிட்டிருந்தால், அமெரிக்க தன் கல்லறையை அங்கு கண்டிருக்கும், இன்னும் பாகிஸ்தானின் ராணுவ வலிமையை உலகம் அறிந்திருக்கும்.

ஓ பாகிஸ்தான் முஸ்லிம்களே!
இஸ்லாமை கைவிட்டுவிட்டு, அதிகாரதிற்காகவும் வலிமைக்காகவும் எதிரி நாட்டுடன் கைகோர்ப்பது அவமானத்திற்கும் அபாயகரமான விளைவுகளுக்குமே வழிவகுக்கும்.
அல்லாஹ் (சுபு) கூறுகிறான்,

الَّذِينَ يَتَّخِذُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ ۚ أَيَبْتَغُونَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.(அன் நிஸா 4:139)

தங்களின் வறுமை மற்றும் பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கும் என தெளிவாக தெரிந்த நிலையில்,  பாகிஸ்தானின் முதுகெலும்பில்லா தலைமைத்துவம், வலிமையை குஃப்ரிடமும்,  குஃப்ரின் பிள்ளைகளிடமும் தேடிச்செல்கிறது.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்,

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).(அல் அன்கபூத் 29:41)

நாசக்காரர்களுடன் இதற்கு முன்னால் கூட்டணி வைத்த முஷாரப், கயானி மற்றும் ரஹீல் ஷரீஃப் ஆகியவர்கள் முஸ்லிம்களின் பார்வையில் இழிவானவர்களாய் போனார்கள். இவர்களில் எவரேனும் ஒருவர், அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் மீதும் ஆதரவு வைத்து, முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் உலகமே ஏங்கி எதிர்பார்க்கும் அமெரிக்காவின் அழிவை அவனது திமிரை அடக்கி இருக்க வேண்டாமா? அவ்வாறு அவர்கள் செய்திருப்பின் முஸ்லீம் உம்மத்தின் மரியாதையை பெற்றிருப்பார்கள்.

ஓ பாகிஸ்தான் முஸ்லீம் ராணுவமே!

ராணுவ வலிமையும், அணு ஆயுதமும் இன்னும் JF-17 போர் விமானங்களும், உயர் ரக ஏவுகணைகளும் அனைத்திற்கும் மேலாக சிறந்த மற்றும் வீரமிக்க ராணுவ  வீரர்களையும் பெற்ற நிலையில், இன்று பாகிஸ்தான் இழிவையும், ஏளனத்தையும், அவமானத்தையும் சுமந்து கொண்டிருக்கிறது.

இதற்கான முழு காரணம், இஸ்லாமிய வாழ்வியலை அடிப்படையாக கொண்டு வழிநடத்தும் உண்மையான மற்றும்  உறுதியான தலைமை இன்று இல்லாமல் இருப்பது தான்.இதில் வேதனை என்னவெனில், இஸ்லாமிய வாழ்வியலான கிலாஃபாவை தடுப்பது மேற்கத்திய காலனியாதிக்க நாடுகளின் கொள்கைகளில் ஒன்றாக கொண்டிருப்பதை இன்றைய தலைமை அதனை கண்டுகொள்ளவில்லை. இன்னும் மிக மோசமாக, அமெரிக்காவுடன் கூட்டு வைப்பதை முஷாரப் காலந்தொட்டு தொடர்ச்சியாக எதிர்த்துவரும் ஹிஸ்புத்தஹ்ரிர் அமைப்பை அது இஸ்லாமிய வாழ்வியலை மீட்கும் அதன் பணியை கொடுங்கோன்மையால் தடுப்பது மட்டுமல்லாமல் அதன் நன்மக்களை  கைது செய்து, சிறைப்படுத்தி சித்ரவதை செய்துவருகிறது. இஸ்லாமிற்குகாக உண்மையாய் இருந்து, இஸ்லாமை நடைமுறை படுத்துவதில் ஞானமுடையவர்கிகளில் ஒருவரான நவீத் பட் போன்ற நன்மக்களை அவர்கள் குறித்த எந்த தகவல்களும் இல்லாமல் கடத்தி மறைத்து வைத்தும வஞ்சித்து வருகிறது.

ஓ பாகிஸ்தான் முஸ்லீம் ராணுவமே!

நபித்துவ வழியில் கிலாஃபா அரசு அமைப்பதற்கு தேவையான நுஸ்ரா (ராணுவ உதவி) தரவேண்டிய நேரமிது! அமெரிக்கா பலஹீனம் அடைந்துவிட்டதை, டிரம்ப் நிர்வாகம் வெளிப்படையாக அறிவதை போன்று, நீங்களும் வெளிப்படையாக அறிவீர்கள்.

ராணுவ ரீதியாக, அதன் ராணுவம் அனைத்து உயர் ரக ஆயுதங்களை பெற்றிருந்த போதும், உயிர் மீதுள்ள பயத்தால் ஆப்கானின்  பலவீனமான பழங்குடி முஸ்லீம் போராளி  குழுக்கள் முன் நடுங்கி தவிக்கிறது. இன்னும் அவர்களை எதிர்கொள்ள உங்களை முழுமையாக சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியாக, பெருமுதலாளிகளின் பேராசையின் காரணமாகவும், தவறான பொருளாதார கொள்கைகளாலும், குறிப்பிட்ட சில மக்களிடம் செல்வம் குவிந்து அந்நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைய செய்துவிட்டது.

அரசியல் ரீதியாக, அதன் புகழும் ஸ்திரத்தன்மையும், அது உலகின் வளங்களை சுரண்டுவதில் மேற்கொண்ட வக்கிரபோக்கு காரணமாக முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரின் முன்னிலையிலும் தவிடுபொடியாகிவிட்டது.

அனைத்திற்கும் மேலாக, அல்லாஹ்விற்கும் அவனுடைய மார்க்கத்திற்கும், பணிவுடனும் அவனுக்கு அடிபணிந்தவர்களாக  உதவுவதற்கு முன்வந்தால், நிச்சயம் அல்லாஹ் (சுபு) வின் உதவியை பெற்ற மக்களாய் ஆகுவீர்கள்! நிச்சயமாக, இதற்கு முன்னால் சென்றுவிட்ட முஸ்லீம் ராணுவ தளபதிகள் காலித் பின் வலீத் (ரலி), சலாஹுதீன் (ரஹ்), முஹம்மத் பின் காசிம் (ரஹ்) போன்றோர் பல்வேறு  எதிர் சூழ்நிலைகள்  இருந்த போதிலும், அல்லாஹ்வின் உதவியை பெற்று வெற்றிவீரர்களாய் திகழ்ந்தனர். இத்தகைய இஸ்லாமிய செல்வர்களின் வழிநடந்து, கிலாஃபாவை இப்புவியில் நிறுவுவதற்கு தேவையான உதவியை (நுஸ்ரா) தரும்பட்சத்தில் அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு வேறோர் உதவி தேவைப்படாது. இதுவே உங்களை கீர்த்திக்கும் வெற்றிக்கும் அழைத்து செல்ல போதிமானதாகும்!

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்,

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.(ஆல இம்ரான் 3:160)

Comments are closed.