சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஈரானிய எதிர்ப்புக்கள்: தேசிய அரசு அமைப்பு, சிறிய நாடுகளில் பாதுகாப்பின்மையை மட்டுமே ஏற்படுதியுள்ளது

ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஐ.நா.வின் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, ஈரான் புரட்சியாளர்களை பற்றி ஐ.நா.வில் விமர்சித்தார். மனித உரிமைகள் என்பது ஒரு அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட பரிசு அல்ல; அவை மக்களின் பிறப்புரிமை. “மேலும் ஈரானில் நடைபெறும் ஆட்சியை இன்று உலகமே உற்று பார்த்து கொண்டு உள்ளது”

ஈரான் உள் நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தலையிடுவது குறித்து பலநாடுகளும்கேள்வியெழுப்பின. ஈரான் உள் நாட்டு விவகாரம் “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலா” என்று பிரெஞ்சு தூதர் கேள்வி எழுப்பினார். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்க முயற்சியை “தீங்கு மற்றும் அழிவுவிளைவிக்கும் செயல் என்று குறிப்பிட்டார்”.

இதற்கு மாறாக, யூத அரசு – பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு உண்மையான அச்சுறுத்தலாக திகழ்கின்றது – பாலஸ்தீன மனித உரிமைகளைத் தொடர்ச்சியாக மீறுவதும், அதற்குரிய தண்டனைகளிலிருந்து தப்புவதும் வழக்கமாகக்கொண்டுள்ளது. ஒவ்வொரு கிரிமினல் நடவடிக்கைக்கும் ஐ.நா. கண்டனம் தெரிவிக்கும் போதும் அவை உடனடியாக அமெரிக்காவால் முடக்கப்படுகின்றது.

மனித உரிமை மீறல் என்ற போலிக்காரணங்களால் அமெரிக்கா படைத்த மோசமான சாதனைகள் பற்பல, அவற்றிற்கு பாக்கிஸ்தான், சூடான், சவூதி அரேபியா, வெனிசுலா போன்ற நாடுகள் ஒரு எடுத்துக்காட்டு. மனித உரிமைகளைக் காப்பதில்பெரும் அக்கறை கொண்டவர்கள் என்ற போலியான போர்வையில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின்மீது போர் தொடுத்தது அமெரிக்கா.

அமெரிக்கா தனது உள்நாட்டு விடயங்களில் மனித உரிமை மீறலை ஒரு பொருட்டாக கொள்வதில்லை. சூறாவளி கத்ரீனா அல்லது சமீப காலமாக கறுப்பின மக்கள் போராட்டம், அமெரிக்காவிலிருக்கும் கறுப்பின மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசாங்கத்தால் கையாளப்பட்ட பயங்கரமான செயல்கள், அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புக்கள் ஏறக்குறைய மூன்றாம் உலக நாடுகளில் மனித உரிமைகள் மீறல்களை விட மோசமாக உள்ளது. அமெரிக்க நகரங்களில் கறுப்பர்களின் சட்டவிரோதமான படுகொலைகளை விவாதிக்க ஐ.நா.வில் ரஷ்ய முயற்சிகளை சமீபத்தில் அமெரிக்க முடக்கியது.

சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தடையற்ற குறுக்கீடு தேசங்கள் அடிப்படையிலான அரசு என்ற மேற்கத்திய சித்தாந்தத்திற்கு முரணானது. ஒரு மாநிலத்தின் உள் விவகாரங்களில் மற்றொரு மாநிலம் தலையிடும் நிகழ்வுகள் வரலாற்றில் தடை செய்யப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகள் அவர்களின் இச்சட்டத்தை அவர்களே மீறிய நிகழ்வுகள் வரலாற்றில் நிரம்பியுள்ளது. வீட்டோ அதிகாரத்தின் கீழ் தங்கள் நாட்டு மக்கள் மீது செலுத்தும் அநீதங்களை மறைப்பது மட்டுமல்லாமல் மற்ற பிற சிறிய நாடுகளின் விவகாரங்களில் இராணுவரீதியில் ஊடுருவிச் செயல்படுவதன் மூலம்மேற்கத்திய சிந்தனையான “தேசிய அரசு அமைப்பு” தேசங்களை ஒருங்கிணைப்பதில் சிறிய மாநிலங்களுக்குசமாதான உத்தரவாதம் அளிக்காது என்பது நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் மற்றொரு பெரியபோரைத் தோற்றுவிக்கும் முன்னர் உலகம் விழித்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய பெரும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து அவர்கள் ஏற்படுத்திய இந்த மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை ஒழுங்குபடுத்தும் முறைலிருந்து சிறிய நாடுகள் அடைக்கலம் பெற முடியுமென்றால் அது இஸ்லாம் கூறும்வழிமுறையில் மட்டுமே சாத்தியமாகக் கூடும். இஸ்லாமிய அரசு மட்டுமே சர்வதேச ஒழுங்கை நிலைநாட்டி சிறிய மாநிலங்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பு வழங்கும்.

Comments are closed.