சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 17.01.2018

சிரியா எல்லை படையை அமெரிக்கா உருவாக்க இருக்கிறது

அமெரிக்க ராணுவ பேச்சாளர் கர்னல் ரியான் தில்லான் ஜனவரி 15 அன்று 30,000 நபர்கள் கொண்ட எல்லை ராணுவத்தை சிரியாவின் வடக்கில், சிரியா துருக்கி எல்லையில் உருவாக்க இருப்பதை உறுதி செய்தார்

இந்த படையில் அதிகமானோர் குர்திஷ் இனத்தவர்கள். இதற்க்கான பயிற்சி வகுப்பில் ஏற்கனவே 230 வீரர்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பலமிக்க குர்திஷ் ராணுவத்தை கொண்டு குர்திஷ் பகுதி பாதுகாக்கப்படும். இதனால் துருக்கி விரக்தி அடைந்ததோது இதனை ஏற்க முடியாதென கூறியுள்ளது. துருக்கி அமெரிக்காவுடன் சேர்ந்து சிரியா போராளிகளை ஆயுதங்களை கொண்டு வலுப்படுத்தி அவர்களின் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி உண்மையான மாற்றத்திலிருந்த அவர்களை வழி தவற செய்தாலும், அமெரிக்காவிற்கு துருக்கியை விட கூறிய இலக்குள்ளது. இந்த பாடத்தை துருக்கி மனதில் கொள்ள வேண்டும் .

அமெரிக்காவின் புதிய அணு ஆயுத யுக்தி

சீன மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக ஆக்ரோஷமாக டிரம்ப் மேற்கொண்ட தன்னுடைய தேசிய பாதுகாப்பு யுக்தியை தொடர்ந்து , பென்டகனில் அமெரிக்க அணு ஆயுத கொள்கையில் மற்றம் மேற்கொள்ளப்போவதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கொள்கையின் மூலம் புதிய வகையான அணு ஆயுதங்களை பெற்று, அணு ஆயுத தளவாடங்களில் உபயோகிக்க கூடிய ஆயுதங்களை பயன்படுத்துவதே குறிக்கோளாகும். இதனையே அமெரிக்க ராணுவங்களில் உள்ள சிலர் பல ஆண்டுகளாக வலியுறுத்தினர். இதன் மூலம் குறைந்த விளைவினை உருவாக்கும் அணு ஆயுத தாக்குதலை, அறிய சந்தர்ப்பத்தில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் புதிய அணு ஆயுதங்களை பெற்று அணு ஆயுத போர்களுக்கு தயாராகுவதோடு மட்டுமன்றி , இத்தகைய புதிய சட்டங்கள் அணு ஆயுத தாக்குதல்களுக்கு தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு பெரும் விலக்கினை ஏற்படுத்தும்.

துனிஸியாவில் ஏற்பட்ட மாற்றம் குறைவே

பல துனிஸிய மக்கள் ஜனவரி 14 அன்று அரப் எழுச்சி நாளாக குறித்து , தங்களுடைய நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு எதிரான போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த வட அமெரிக்க நாட்டில் சுலபமான அரசு மாற்றம் 14 ஜனவரி 2011 அன்று அன்றைய ஜனாதிபதி ஜைனுலாபிதீன் பெண் அல் அவர்களை 23 ஆண்டுக்கு பிறகு பதவி நீக்கம் செய்ததன் மூலம் ஏற்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுக்கு பிறகு அரசின் புதிய கொள்கையின் மூலம் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் போராட்டக்காரர்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு முழக்கத்தை உச்சரிக்கின்றனர். போராட்டக்காரர்கள் மீண்டும் வீதியிலிறங்கி அரசு மாற்றம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என போராட தொடங்கியுள்ளனர். ஏழு ஆண்டுக்கு முன் ஏற்பட்டது சாதாரண நில அதிர்வு தான் என்பதை உணர்த்துவது போல் மிகப்பெரிய பூகம்பம் தாக்கவிருக்கிறது.

Comments are closed.