சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 20.01.2018

அமெரிக்கா இராணுவம், தீவிரவாதத்தைக் காட்டிலும் ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தலுக்கு முன்னுரிமை அளிக்கிறது

அமெரிக்கா அதன் இராணுவ தளத்தை சிரியாவில் நிரந்தரமாக அமைக்க விரும்புகிறது

சிரியாவில் அமெரிக்காவின் திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் எர்டோகனின் எரிச்சல்

அமெரிக்கா இராணுவம், தீவிரவாதத்தைக் காட்டிலும் ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தலுக்கு முன்னுரிமை அளிக்கிறது

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இரு சகாப்தங்களாக கவனம் செலுத்திய சீனா மற்றும் ரஷ்யா இராணுவ வலிமையை எதிர்த்துஅமெரிக்க இராணுவம் முன்னுரிமை கொடுப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மாட்டிஸ் வெள்ளிகிழமை அன்று தெரிவித்தார். இதற்கான வரைவு திட்டத்தை வெளியிட்டு, அதை பெண்டகன் உயர் அதிகாரிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தயாரித்ததாகவும் கூறினார். உண்மையில், அமெரிக்காவிற்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கு ‘பயங்கரவாதத்தின்’ எந்த அச்சுறுத்தலும் இல்லை.

பெர்ல் ஹார்பர் பாணியிலான (பெர்ல் ஹார்பர் பாணி என்பது அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் 1941 டிசம்பர் மாதம் தாக்கியது. இதை சாக்காக வைத்துக்கொண்டு அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் நுழைந்தது) இஸ்லாமிற்கு எதிராக ஒரு பரந்த மற்றும் நீண்டகால பிரச்சாரத்திற்கான ஒரு சாக்குப்போக்காகவே மட்டுமே அமெரிக்கா மற்றும் இது மேற்கு உலகத்தினால் வடிவமைக்கப்பட்டது.

வெளிநாடுகளில் போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கான அடிப்படை நடவடிக்கைகளை வழங்குவதற்கும், உள்நாட்டில் உள்ள முஸ்லீம் சமூகங்களை வெளிநாடுகளில் போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கான அடிப்படைகளை வழங்குவதற்கும், உள்நாட்டில் உள்ள முஸ்லீம் சமூகங்களை (கருவருப்பதற்க்கு) இலக்காகக் கொண்ட உள் திட்டங்கள் நடத்துவதற்கும் மேற்குலகத்தில் எவ்விதமான பயங்கரவாத நிகழ்வுகளும் அமெரிக்காவால் ஏற்பட்டுள்ளன என்பதற்கு கணிசமான சான்றுகள் உள்ளன.

ஈராக், சிரியா, லிபியா, யமன் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பல முஸ்லீம் நாடுகளில் வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளது. மேலும், தன் சொந்த நாட்டிலும், மேற்கு நாடுகளிலும் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கான இஸ்லாமியக் கருத்தியல் அச்சுறுத்தலின் காரணமாக, குடியேற்ற கட்டுப்பாடு(விசா வழங்குதலில் பிரச்சனை), பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அரசியலில் முஸ்லிம்களை அன்னியப்படுத்தல்(தனிமைப்படுத்துதல்) உட்பட, முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கு நாடுகள் பரவலான முயற்சிகள் மேற்கொள்கின்றன.

அதே வேளையில் ரஷ்யா தனது பழைய நிலையான சோவியத் யூனியனை கட்டமைக்கும் பணியில் ஈடுப்படுள்ளது. வல்லரசான சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ அது கனவு காண்கிறது. அதேபோல் சீனாவும் பொருட்களை மலிவு விலையில் எற்றுமதி செய்வதிலிருந்து தனது கவனத்தை அரசியல் மற்றும் இராணுவத்தை பலப்படுத்துவதில் முன்னெடுத்துள்ளது. இதனால் உலக வல்லரசான அமெரிக்கா அதன் முடிவை நோக்கி பயணிக்கும் நேரம் அரம்பமாகியுள்ளது.

அமெரிக்கா அதன் திட்டங்களில் தோல்வி அடைந்தது வருகிறது. யாரும் இல்லாத மைதானத்தில் தனியாக கம்பு சுற்றும் வேலையைத்தான் அமெரிக்கா இது வரை செய்துவந்துள்ளது. போட்டிக்கு எதிரி இருக்கும்போதுதான் அதன் உண்மையான பலம் தெரியும். அரசியல் காலநிலை ஒற்றை தலைமையிலிருந்து பல வேறு தலைமைக்கு மாறுவதற்க்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அதை தடுத்து நிறுத்துவதற்க்கான அனைத்து முயற்ச்சிகளும் தோல்வியில் முடிகின்றன.மேற்க்குலகத்தினால் இஸ்லாம் மிக வேகமாக மறு எழுச்சி பெற்று வளர்ந்து வருகிறது.

அமெரிக்கா அதன் இராணுவ தளத்தை சிரியாவில் நிரந்தரமாக அமைக்க விரும்புகிறது

அமெரிக்கா அதன் நிரந்தர இராணுவ தளத்தை சிரியாவில் அமைக்க விரும்புகிறது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி Rex Tillerson – ரெக்ஸ் டில்லர்சன் கடந்த புதன் கிழமையன்று கூறினார். டிரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்க இராணுவம் நிரந்தரமாக சிரியாவில் தங்குவதை நியாயப் படுத்துகிறது.

டிரம்ப்பின் நிர்வாகமும் வெள்ளை மாளிகையும் இஸ்லாமிய அரசாங்கத்தை சிரியாவில் முன்னடுப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என கூறி தங்கள் வாதத்தை நியாயப்படுத்தி அதன்மூலம் போர்தடவாளங்களை அதிகபடுத்தியுள்ளது.

அரசாங்க உயர் அதிகாரி, நாங்கள் சிரியாவில் எங்கள் இராணுவத்தை நிலை நிறுத்துவதற்கு காரணத்தை தேடவில்லை. உண்மைக்கு மாறான எந்த ஒரு கட்டுகதையையும் ஐஎஸ்ஐஎஸ் மீது நாங்கள் கட்டவிழ்த்து விடவில்லை என வெள்ளியன்று கூறினார். ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறுதாகவும் அது கற்பனையல்ல உண்மை எனவும் கூறினார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு உலகம் பிரிட்டனால் வழிநடத்தப்பட்டது. அது தனது இராணுவத்தையும் அதிக்கத்தையும் திருப்பப் பெற்றுக்கொண்டது. பிரிட்டனால் தனது ஆதிக்கத்தை அரசியல் ஆளுமை மூலமும் மேற்க்கத்திய கலாச்சாரத்தை முஸ்லிம் உலகத்தில் புகுத்தியதன் மூலமும் வெற்றிகண்டது. ஆனால் இறுதிவரை இஸ்லாமை அதனால் வெற்றி கொள்ள முடியவில்லை.

ஆனால் அமெரிக்கா அதன் கலாச்சாரத்தை முஸ்லிம் உலகத்தில் கொண்டு சேர்ப்பதிலும் நம்பிக்கையான முகவர்களை (அமெரிக்க அடிமைகளை) அடைவதிலும் நம்பிக்கை இழந்தது. ஆதலால் அது தனது இராணுவ துருப்புகளை திருப்பப் பெற்றுக்கொண்டு பல முஸ்லிம் நாடுகளில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளது. இது அமெரிக்காவின் பலவீனத்தையும் கையாலாகததனத்தையும் கட்டுகிறது. இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் இவர்களின் பிடியிலிருந்து மீள் உருவாக்கம் பெறுவது வெகு தொலைவில் இல்லை.

சிரியாவில் அமெரிக்காவின் திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் எர்டோகனின் எரிச்சல்

அமெரிக்கா சிரியாவில் அதன் திட்டத்தை செயல்படுத்த எர்டோகனை (துருக்கியை) கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளது. எர்டோகன், அமெரிக்கா சிரியாவில் குருதிஸ்களுக்கு ஆதரவாக உள்ளதால் அதன் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளியன்று சிரியாவின் ஆப்ரின்(Afrin) பிராந்தியத்தில் துருக்கியின் பீரங்கிகள் மற்றும் இராணுவ தடவாளங்கள் தரைமட்டமாக்கபட்டன. துருக்கி உள்துறை அமைச்சர் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் போராளிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை அறிவித்தார். அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஏழு ஆண்டுகால யுத்தத்தால் சிதைக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தை இன்னும் நிலைகுலைய செய்ய அது அச்சுறுத்தியது.

சிரியாவில் அஸ்ஸாதின் தலைமையால் முழு சிரியாவையும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. எனவே அமெரிக்கா மீண்டும் ஒரு திட்டத்தை தீட்டுகிறது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அஸ்ஸாதிற்கு எதிராக போராடும் குழுக்களை கட்டுபடுத்துவதற்கு அமெரிக்காவிற்கு துருக்கியின் உதவி தேவைப்படுகிறது, ஏற்கனவே அலப்போவில் முஸ்லிம் போராளிகளை துருக்கி இராணுவம் அடக்கி ஒடுக்கி கொன்று குவித்ததால் இம்முறையும் அவ்வாறு செயல்பட அமெரிக்கா துருக்கியை உதவிக்கு அழைக்கிறது.

சிரியாவில் அஸ்ஸாதின் திறனற்ற செயலற்ற தன்மையால் ஈரானும் ரஷ்யாவும் அவர்களை(முஸ்லிம்களை) இடமாற்றம் செய்தது. குப்ரை தலைமையாக ஏற்றாலோ அல்லது குப்ர்க்கு ஆதரவாக செயல்படும்வரை முஸ்லிம்கள் ஒரு போதும் வெற்றி அடைய மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்கள் நாடுகளிலுள்ள காபிர்களுக்கு எதிராகவும் குப்ர்க்கு ஆதரவாக செயல்படும் அட்சியாளர்களை எதிராக உறுதியாக தீரத்துடன் போராட வேண்டும்.

இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டுமே உலக முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அவர்களை அமைதியாக வாழ வைக்கும். அத்தகைய அறிவார்ந்த தலைமைக்கு சத்திய பிரமாணம் செய்வதின் மூலம் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

Comments are closed.