சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

டாலருக்கு நிகரான யமனிய நாணயத்தின் மதிப்பு சரிந்து வருகிறது மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்பினருக்கு இடையே பொருளாதார யுத்தம் செய்வதென்பது யமனிய மக்களை கொல்வது போன்றாகும்

மூன்று வருடங்களுக்கு முன்னர் தொடங்கி இன்று வரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலின் காரணமாக டாலர் மற்றும் இதர அயல்நாட்டு நாணயங்களின் மதிப்பானது யமனில் பயங்கரமாக உயர்ந்து வருகிறது. அதேவேளையில் யமனிய ரியாலின் மதிப்பு சரிந்து வருகிறது. ஒரு டாலரின் மதிப்பு 500 யமனிய ரியாலையும் தாண்டி விஞ்சியுள்ளது; இதன் விளைவாக மோதல் நடைபெற்று வந்த போது இருந்த மதிப்பை விட இருமடங்கிற்கும் அதிகமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது குறிப்பாக அலி சாலிஹ் ஹவுதிக்களால் கொல்லப்பட்டதற்கு பின்பு அதன் உச்சத்தை அடைந்துள்ளது; அவர்கள் அலி சாலிஹிற்கு சொந்தமான அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு அவருக்கு விசுவாசமாக இருந்த நாணய பரிமாற்றிகள் மற்றும் தொழிளதிபர்களிடத்தில் ஹவுதி போராளிகளின் போர் முயற்சிகளுக்காக இந்த பணத்தை தர வேண்டும் என நிர்பந்தித்தனர். இது நாணய பரிமாற்றிகளையும் தொழிலதிபர்களையும் ஹவுத்திகளுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களிலிருந்து வெளியேறச் செய்தது.

யமனில் பிரிட்டன்-அமெரிக்க மோதலில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள் வருடக் கணக்கில் செய்துவரும் குரூரமான இராணுவப் போருக்கு கூடுதலாக பொருளாதாரப் போர் ஒன்றையும் செய்து வருகின்றனர். இதன்மூலம் பாதிப்படைவது என்னவோ பஞ்சம், உயிர்க்கொள்ளி நோய்கள், மற்றும் எவ்விதமான பொதுநல சேவைகள் அல்லது வருமானமும் இல்லாத நிலையில் வாழும் சபிக்கப்பட்ட யமனிய மக்கள் தான். இந்த போரானது அவர்கள் மீது பேரழிவு, நாசம் மற்றும் தடைகளை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மோதலில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள் இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி எவ்விதமான உரிமையும் இல்லாமல் இவர்களுடைய சொத்துக்களை பலவந்தமாக அபகரித்துக் கொண்டுள்ளனர். ஹவூத்தி போராளிகள் வலுக்கட்டாயமாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது அதிக அளவிலான கப்பம் மற்றும் வரியை விதித்துள்ளனர். ஹவுத்திக்கள் மக்களுடைய வலிமையை திருடி வருகிறார்கள் மற்றும் மக்களுக்கு அனுப்பப்படும் சர்வதேச உதவிகளை அவர்களுக்கு விசுவாசமானவர்களுக்கு மட்டுமே கொடுத்து வருகிறார்கள் அல்லது அவற்றை சந்தைகளில் விற்று வருகிறார்கள்.

பெட்ரோலியம், எரிவாயு, கடற்கரைகள் மற்றும் சர்வதேச பாதைகளை கொண்டு வளமாக இருக்கும் பகுதிகளில் ஆட்சிபுரிந்து வரும் ஹாதி மற்றும் அவருடைய அரசாங்கமும் குற்றவாளி தான் ஏனெனில் இவர்களுடைய பகுதியில் எரிவாயு மூலப்பொருட்களின் விலையானது மிகவும் அதிகமாக உள்ளது, இது ஹவுத்தி பகுதிகளை விட குறைவாக இருந்தாலும் அவை ஏறக்குறைய கிடைப்பதில்லை, மற்றும் ஹாதி அரசாங்கம் ரஷ்யாவில் 600 பில்லியன் அளவுக்கு யமனிய ரியாலை அச்சிட்டிருந்தாலும் அது அவர்களுடைய அரசாங்கத்திற்கு கீழ் வாழும் யமனிய மக்களையும் சேர்ந்த எவருக்கும் சம்பளம் வழங்கவில்லை அல்லது அவர்களுடைய துயரங்களையும் போக்கவில்லை! இவையனைத்தும் எவ்வித சந்தேகமுமின்றி மோதலில் ஈடுபட்டிருக்கும் இந்த குழுக்கள் யமனிய மக்கள் மீது ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்பதனை சுட்டிக்காட்டுகிறது.

விலைவாசிகள் மோசமான அளவில் உயர்ந்துள்ளன ஆகவே இந்த மோதலில் ஈடுபட்டிருக்கும் குழுவினர் மக்களுக்கு சம்பளத்தை வழங்கியிருக்க வேண்டும் ஆனால் ஒரு வருடத்துக்கும் மேலாக அவர்களுக்கு அது வழங்கப்படவில்லை, போர் மூலமாக ஏற்படுத்தும் பேரழிவுக்கு மேலாக இது ஒன்றே போதும் அவர்கள் இழைக்கும் குற்றத்திற்கும் பேரழிவிற்கும் உதாரணம்.

வளைகுடா மற்றும் ஈரானை பொறுத்தமட்டில் – அவர்கள் பெட்ரோலிய வளத்தை கொண்டு வளமாக இருக்கின்றனர் – அவர்கள் இங்கு மோதலில் இருக்கும் இரு தரப்பினருக்கும் ஆயுதங்கள் வழங்கி மக்களை கொன்று வருகின்றனர் மற்றும் அங்குமிங்குமாக பணத்தைக் கொண்டு விளையாடி மனிதஉரிமையை மீட்பதாக போலியாக கூறிவரும் தீங்கிழைக்கும் அமெரிக்காவின் தலைமையின் கீழான அவர்களுடைய காலனியாதிக்க முதலாளிகளுக்கு வழங்கி வரும் அதேவேளையில் யமனில் நடைபெறும் மனிதாபிமான நெருக்கடியை காரணம் காட்டி நிதியை திரட்டி வரும் ஐ.நா வின் கொள்ளையர்கள் யமனிய மக்களுக்கு சிறு துணுக்கை மட்டும் வழங்கி இந்த பணத்தை கொள்ளையடித்து வருகின்றன, கடந்த வருடம் இந்த மோசடியின் மன்றத்தின் கொள்ளையர்களால் திரட்டப்பட்ட 1.2 பில்லியன் டாலர்கள் எங்குள்ளது என்பதை அறியாமல் இருக்கின்றனர் யமனிய மக்கள்!!

யமனிய மக்கள் காத்துவரும் அமைதியானது விசித்திரமாக உள்ளது; அவர்கள் மீது நடைபெறும் அனைத்தின் மீதும் காத்துவரும் அமைதியானது மயான அமைதியை குறிக்கின்றது. ஏன் இந்த மக்கள் வெளியே சென்று மோதலில் ஈடுபட்டிருக்கும் இந்த குற்றவாளி தரப்பினர்களை தூக்கி எறியவில்லை?

“தனது வாழ்வாதாரத்தை தேட முடியாத ஒருவரை காண்கையில் ஆச்சர்யமாக உள்ளது: தனது வாளை மக்களிடத்தில் காண்பிப்பதற்கு ஏன் அவர் வெளியே செல்லவில்லை” எனும் வாக்கியம் ஸனா’அ மற்றும் இதர யமனிய நகரங்களில் உள்ள தெருக்களில் தொங்கவிடப்பட்டிருந்தது. இந்த வாக்கியமானது அதிபர் ஹாதி தப்பியோடுவதற்கு முன்பு இந்த எழுச்சியை சரிசெய்வதை நியாயப்படுத்துவதற்காக வேண்டி அமைதி மற்றும் கூட்டணி குறித்தான அளவுகோலை அரசு முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹவுத்திகள் போராட்டம் செய்யும் போது எழுப்பப்பட்டதாகும் – யதார்த்தத்தில் அவர்கள் அதிகாரத்திற்காகவும் எழுச்சிக்காகவும் போட்டியிடவே நாடுகிறார்கள்!!

ஓ யமனிய மக்களே! உங்களது ஈமானும் ஞானமும் எங்கே?! உங்களுடைய பணத்தாலும் செல்வத்தாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த போராட்டக் குழுக்களுக்கு அடிபணிந்து பட்டினியால் நீங்கள் மரணிப்பது என்பது அவமானகரமான செயலாகும். ஒரு மனிதனாக எழுந்திருங்கள் பணிவையும் அச்சத்தையும் துடைத்தெரிந்து இந்த போராட்டக் குழுக்களை தூக்கி எரிந்து நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபா ராஷிதா அரசை (நேர்வழி பெற்ற கிலாஃபத்) நிறுவுவதற்கும் முயற்சி செய்யுங்கள் அதில் தான் உங்களுக்கு தன்னிறைவும், பெருமையும் அல்லாஹ்வின் திருப்பொறுத்தமும் இருக்கின்றது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, பாதுகாப்பில்லாத, பத்திரமல்லாத மற்றும் வாழ்வாதாரத்திற்கும் வாழ்விற்கும் எவ்விதமான கூறுகள் இல்லாத உங்களுடைய இழிவான வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன?!

Comments are closed.