சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ரோஹிங்கிய முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்றி, அவர்களை ஆதரவற்ற அகதிகளாக்கி, பின்னர் கட்டாய நாடு திரும்புதல் என்ற போர்வையில் மறுபடியும் பழைய நிலைக்கே தள்ளும் சுழற்சி நிலை மாற வேண்டும் என்றால் அது நேர்மையான கிலாஃபாவால் மட்டுமே சாத்தியமாக கூடும்

சென்ற வாரத்தில் மட்டும் நூற்றிற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், மியான்மரிலிருந்து பங்களாதேஷிற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். ரக்கன் பகுதியில் முஸ்லிம்கள் மீதான ராணுவ தாக்குதல் இன்னும் தொடர்வதாக கூறியுள்ளனர். பங்களாதேஷ் மியான்மார் எல்லையான நாப் நதியைக் கடப்பதற்கு மேலும் பலர் காத்துக் கொண்டுள்ளனர்.

மியான்மார் இராணுவம் எதிர்-கிளர்ச்சி நடவடிக்கை என்ற பெயரில் நடத்திவரும் இந்தத் தாக்குதல்களிலிருந்தது தப்பி பங்களாதேஷ் சென்ற 655,500 மக்களைக் கட்டாய நாடு திரும்புதல் என்ற அடிப்படையில், உடனடியாக அவர்களின் நாட்டிற்கே அவர்களைத் திருப்பி அனுப்பும் செயல்பாடுகள் துவங்கியுள்ளன.

பங்களாதேஷ் (டாக்காவில்) இருக்கும் மூத்த வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி, ராய்ட்டர்ஸ் பத்திரிகைக்கு இது குறித்து கூறுகையில், ரோஹிங்கிய மக்களை உடனடியாக நாடு திரும்ப செய்வது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் நாடு திரும்புவது என்பது தனிச்சையாகவும், பாதுகாப்பானதாவும், கண்ணியமானதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அதிகாரி மியான்மருடன் பேச்சுவார்த்தை நடத்திய 14 உறுப்பினர்கள்க் கொண்ட குழுவின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் மற்றும் மியான்மர்க் கிடையிலான ஒப்பந்தத்தின் படி, ஒரு வாரத்திற்கு 1500 ரோஹிங்யா மக்களை திரும்பப்பெற்று அவர்களை மியான்மரின் தற்காலிக முகாமில் இருந்து பின்னர் அவர்கள் விரும்பும் வீடுகளில் அவர்களை குடி அமர்த்துவது என்பதாகும்.

கருத்து:-

ரோஹிங்கியா பிரச்சினை உலகிற்கு புதியதல்ல, அது பங்களாதேஷிற்கும் புதியதல்ல. அண்டை நாடான மியன்மரில், கடந்த 40 ஆண்டுகளாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது செய்யப்படும் அட்டூழியங்களுக்கு பங்களாதேஷ் சாட்சியாக உள்ளது.

மேலும், “மனித உரிமை அமைப்புக்கள்” மற்றும் “ஐ.நா.” உட்பட உலகம் முழுவதும் ராக்கின் மாநிலத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர்க்கு எதிராக (அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்ட) மியான்மர் இராணுவத்தின் நிலைப்பாட்டையும், உண்மைகளையும் நன்கு அறிந்திருக்கின்றன. ராக்கின் மாநிலத்தில் வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேஷில் அகதிகளாவதும் பின்னர் அங்கிருந்து கட்டாய படுத்தி நாடு திரும்ப செய்வதும் ஒரு வேதனையான சுழற்சியாகவே தொடர்கிறது.

வங்கதேச அரசு இவர்களை நாடு திரும்ப செய்வதற்கு மிகவும் மோசமான மனிதாபிமானமற்ற தந்திரங்களை நடைமுறைப்படுத்தியுள்து. 1978 ஆம் ஆண்டில், 270,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். பங்களாதேஷில் தஞ்சம் அடைந்த இவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக பங்களாதேஷ் அரசாங்கம் அவர்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களை நிறுதியது. இதனால் 12,௦௦௦ ரோஹிங்கியா முஸ்லிம்கள் உயிர் இழந்தனர். பின்னர்மீண்டும் 1992 முதல் 1994 வரை, ஹசினா அரசாங்கம் மூன்று சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தடை செய்தது. ரோஹிங்கியா மக்களை அவர்களின் நாட்டிற்குக் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புவதால் முகாம்களில் வன்முறை வெடித்தது, இவற்றைக் கட்டுப்படுத்த அந்த மக்கள் மீது மிகவும் வன்மையான தாக்குதலை நடத்தியது ஹசினா அரசாங்கம்.

ஆகஸ்ட் 2017 , இம்முறை 650,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், இவர்களைத் திரும்ப அனுப்புவதற்கு ஓட்டைகள் நிறைந்த ஒப்பந்தம் ஒன்றைத் துரிதமாக மியான்மர் அரசுடன் பங்களாதேஷ் அரசாங்கம் கையேழுத்திட்டது. இதற்குக்கிடையில் இனவாதமும் பௌத்த தேசியவாதமும் தீவிர வடிவம் பெற்றுள்ள மியான்மரிற்கு, முஸ்லிம்களைத் திருப்பி அனுப்பும்போது அங்கு அவர்களுக்குப் பாதுகாப்பும், கண்ணியமும் உறுதி செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று கூறுவது நகைப்புக்குள்ளான ஒன்றாக உள்ளது. நூற்றுக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள், தங்களைக்கட்டாய படுத்தி நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இவர்கள் திரும்ப செல்வதற்குப்பாதுகாப்பு, குடியுரிமை மற்றும் உத்திரவாதத்தை மட்டுமே இவர்கள் கோரிக்கையாக கேட்டுள்ளனர்.

ஆனால் இந்த உலகில் நடந்துவரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளைத் தடுக்க ஏன் யாரும் முன்வரவில்லை, அவர்களை இவ்விரண்டு நாடுகளும் பந்தாடுவதை யாரும் கேட்காமல் இருப்பது ஏன்? 30 ஆண்டுகளுக்கு மேலாக மியான்மர் அரசாங்கம் ரோஹிங்கிய மக்களைக் குறிவைத்து தாக்குவது எப்படி சாத்தியமானது? இதற்கு மயங்கி சார்னி(இங்கிலாந்து அடிப்படையிலான பர்மிய இனப்படுகொலை அறிஞர் மற்றும், மனித உரிமை ஆர்வலர்) வங்காள நாளேடான ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது இப்படி கூறியுள்ளார் “இனப்படுகொலை முடிவுக்கு வருவது லாபம் அல்ல. கொலைகாரனுடன் சேர்ந்து வேலை செய்வது தான் லாபம்”. இந்தக் கொலையாளிகள் கைவசம் தான் இயற்கைவாயு, கடலோரப் பகுதியின் கட்டுப்பாடு, ஆழ் கடலின் கட்டுப்பாடு, விசாக்கள், முதலியன மீது ஏகபோக உரிமையைக்கொண்டுள்ளனர், ஆகவே சுய லாபத்தைச் சுற்றி தான் ஆனைத்தும் இயங்குகின்றது”.

இதனால் தான் சர்வேதேச அரசியல் கலத்தில், இந்த விடயம் குறித்த தீவிரத்தைக் குறைத்து காட்டக்கூடிய வார்த்தைகளைபயன்படுத்தி வருகின்றனர். அதனால்தான் மியான்மர் இராணுவத்தின் “படுகொலை” எனும் கொடூரமான நடவடிக்கைகளை விவரிப்பதற்கு மாறாக ஐ.நா அது “இன அழிப்பு” என்று குறிப்பிடுகின்றது. இதனால்தான் நேட்டோ அல்லது ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மியான்மர் மீது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” தொடுக்கவில்லை மற்றும் ஐ.நா.வின் மனிதக்குலத்தை பாதுகாக்கும் கோட்பாட்டின் கீழ் “பாதுகாக்க வேண்டிய பொறுப்பு (R2P)” ஐ.நா.வின்அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளது. ஐ.நாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் இனப்படுகொலை குற்றங்களில் இருந்து ரோஹிங்கியா மக்களைக் காப்பாற்றுவதற்கும் மியான்மர் அரசாங்கத்தைத் தண்டிப்பதற்குமான பொறுப்பைக்கொண்டுள்ளன.

உண்மையில்! “மனித உரிமைகள்”, “பாதுகாப்பதற்கான பொறுப்பு” இவை அனைத்தும் மலிவான கோஷங்கள் – இது ஆஃப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் இருந்ததைப் போலவே மேற்குலகிற்குச் சாதகமானதாக இருக்கும்போதுமட்டுமே பயன் படுத்தப்படும். ஆனால் முஸ்லீம் உம்மாவின் வாழ்வு, கண்ணியம் அல்லது ஆர்வத்தைப் பாதுகாக்க இந்தகோஷங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படாது.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).

எனவே, மியான்மரின் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வை அல்லது ஐ.நா.வின்மேற்பார்வையின் கீழ் தீர்மானமும் தேவையில்லை, வெட்கமில்லாத முஸ்லீம் ஆட்சியாளர்களின் முதலைக் கண்ணீரும்தேவையில்லை.

ரோஹிங்கிய முஸ்லீம்களின் முடிவில்லாத துன்பகரமான நிலையை மாற்ற வேண்டும். மியான்மர் மற்றும் அதன்கொலையாளி இராணுவத்தைத் தண்டிப்பதற்காக கிலாஃபா வலிமைமிக்க படையினரை ராகினின் மாநிலத்திற்கு அனுப்பும். ரசூல்லுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹிவஸலாம்) வழிமுறையில் நிறுவப்பட்ட இரண்டாம் கிலாஃபா ராஷிதாவின் கீழ் உமர் இபின் அல்-கத்தாப் போன்ற ஒரு கலீஃபா மட்டுமே அவர்களுக்குத் தேவை.

கிலாஃபாவின் வலிமை வாய்ந்த இராணுவம் ரக்கன் முஸ்லிம்களை விடுவிப்பது மட்டும்மல்லாமல், உலகம் முழுவதும்ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை விடுவிப்பதும், அல்லாவின் விருப்பத்தின் மூலம் உம்மாஹ்வின் கௌரவம், பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றை மீட்பதுமாகும்

Comments are closed.