சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

லெபனானின் மனிதநேயமற்ற (சிரியாவின் மக்களை குடியமர்த்த மறுக்கும்) கொள்கையால் ஷாம் பிரதேசத்தின் உறைப்பனி மலைகளில் மடியும் ஆண் பெண் சிறார் அகதிகள்

செய்தி:

பெய்ரூட்: சிரியா-லெபனான் எல்லையை கடக்க முயன்ற சிரியா அகதிகள் அங்கு ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி விபத்துக்குள்ளாயினர். அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக The Daily Star பத்திரிகையிடம் லெபனானின் பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று 13 சிரியா அகதிகள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு உடல்கள் சிரியா-லெபனான் நாடுகளை பிரிக்கும் மலைத்தொடரில் அமைந்துள்ள பீகா-சுவெரி பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுவெரி மாகாண மேயர் ஹுசைன் அலி ஆமீர் The Daily Star பத்திரிகைக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில், புதிதாக ஒரு பெண் உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இறப்பு எண்ணிக்கை 15 அல்ல வெறும் 14 மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

அமீர் மேலும் கூறுகையில் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள உயரம் அதிகமான இடங்களில் அந்நாட்டின் ராணுவம் தேடுதல் பணியை தொடர்வதாகவும் அதனால் மேலும் பல உடல்களை கண்டெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக லெபனான் ராணுவமும் உள்நாட்டு படைகளும் மேற்கொண்ட தேடுதலில் மூன்று ஆண்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் எட்டு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கடும் பனிப்பொழிவும் வாட்டும் நள்ளிரவு குளிருமே இறப்புக்கான காரணமாக கருதப்படுகிறது.

“இறந்து போனவர்கள் கடினமான மற்றும் கரடுமுரடான பாதையை கடும் குளிரில் கடந்து சென்றிருக்கிறார்கள்” என்று ஐ. நா. வின் அகதிகள் பிரிவு (UNHCR) வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது. மேலும் இவர்களோடு பயணித்த குழுவினரையும் அதில் ஒருவராய் இருந்த கர்பிணி பெண்ணையும் லெபனான் ராணுவமும் உள்ளூர்வாசிகளும் இணைந்து அவர்கள் இறந்து போவதற்கு முன்பாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இத்தகைய மரணங்களால் மிகவும் கலக்கம் அடைந்து போயிருப்பதாகவும், மக்கள் தங்களின் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பான வழித்தடங்களை அரசுகள் திறந்து விட வேண்டுமென்று அழைப்பு விடுத்திருப்பதாகவும் UNHCR அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக 2015ல், UNHCR அமைப்பு லெபனான் நுழையும் சிரியா அகதிகளை பதிவு செய்வதையும் கணக்கெடுப்பதையும் லெபனான் அரசு தடை செய்திருந்தது. இன்னும் சிரியா மக்கள் லெபனான் நுழைவதற்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்தது.

விளக்கம்:

தன் நாட்டு எல்லையை அடைத்து வைத்திருப்பதன் மூலம், சிரியா அகதிகளுக்கு எதிராக பஷார் அல் அசாத் அரசுடன் இணைந்து இந்த அநீதத்தை 2015 முதல் லெபனான் அரசு மேற்கொண்டுவருகிறது. பஷாரின் கொடுமைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வாழ்விடம் தேடி செல்லும் குழந்தைகளையும் பெண்களையும் லெபனான் அரசு எல்லையில் தடுக்கிறது. இதன் காரணமாக மாற்று பாதையாக அவர்கள் தேர்ந்தெடுக்கும் மலைப்பாதை இப்பொழுது 9 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் 3 ஆண்களின் உயிர்களை பறித்துள்ளது. மனிதநேயம் என்பது சிறுதும் இத்தகைய அரசுகளிடம் இல்லை என்பதையே இவை உலகிற்கு உணர்த்துகின்றன. சமூக வலைத்தளங்களில் பரவிவரும் பனியில் உறைந்துபோன 2 பெண் மற்றும் குழந்தையின் புகைப்படம் லெபனான் அரசின் குடியேற்ற கொள்கையின் கோர முகத்தை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறது.

மனிதநேயமற்ற இந்த கொள்கை சிரியா மக்களை அந்நிய நாட்டினரை போல் பாவித்து அவர்கள் நுழைவதை தடுக்கிறது. இதே லெபனான் பகுதியில்தான் தங்களின் முன்னோர்கள் நூற்றாண்டுகளாய் வாழ்ந்து இஸ்லாமை அங்கு நிலைநாட்டியிருந்தார்கள். போர்களாலும் தியாகங்களாலும் இந்நிலப்பரப்பை இஸ்லாத்திற்கெதிரான அந்நிய சக்திகளிடமிருந்து மீட்டெடுத்துள்ளனர். இது இவ்வாறிருக்க, 2015ல், லெபனான் அரசு தன்னுடைய நிலப்பரப்பிற்குள் யாரெல்லாம் வரலாம் என்று ஒரு புதிய வரையறையை கொண்டுவருகிறது. இத்தகைய விஷம குடியேற்ற கொள்கையானது நிச்சயம் பஷார் போன்ற கொடுங்கோலனுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் 1924ல் கிலாபத் அரசை வீழ்த்திவிட்டு பிரிட்டனாலும் பிரான்சாலும் செயற்கையாக வரையப்பட்ட எல்லை கோடுகளை பாதுகாக்கும் அவர்களின் அடிவருடியாய் இருப்பதற்கு சான்றாக இருக்கிறது.

லெபனானின் உள்நாட்டு அரசியலாகட்டும் அதன் கூட்டுமத ஆட்சியமைப்பு முறையாகட்டும் இவையாவும் உதுமானிய கிலாஃபா அரசை வீழ்த்தியதற்கு பின்னால் 1943 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசு வடிவமைத்தது. அதில் ஆட்சி அதிகாரத்தை தனக்கு கூட்டாளிகளாக இருந்த கிறிஸ்துவர்களுக்கு சாதகமாக 6:5 என்கிற அடிப்படையில் கிறிஸ்துவ குழுக்கள் மற்றும் முஸ்லீம் சுன்னி-ஷியா, அலவி, துரூஸ் குழுக்களிடையே பிரித்து கொடுத்தது. 1943 இல் பிரெஞ்சு வரையறுத்த இந்த கூட்டுமத ஆட்சியமைப்பு முறையை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இன்றைய லெபனான் அரசு கண்ணும் கருத்துமாய் இருக்கிறது. லெபனானின் மொத்த மக்கள்தொகையான 60 லட்சத்தில் 22 லட்சம் சிரியா அகதிகள். எனினும் 22 லட்சம் சிரியா அகதிகளில், 10 லட்சம் அகதிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகரிப்பது என்பது, உள்நாட்டு அரசியலிலும் அதன் கூட்டுமத ஆட்சியமைப்பு முறையிலும் பேரிடியாக விழும் என்று லெபனான் அரசு அஞ்சுகிறது. இந்த அச்சத்தின் காரணமாகவே சிரியா அகதிகள் விஷயத்தில் அவர்களுக்கு எதிராக கொடூர குடியேற்ற சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

எனவே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ வழி தேடி அகதிகளாய் வரும் நம் சகோதர சகோதரி சிரியா மக்களுக்கு எல்லைகளை திறந்து உதவுவது நம் கடமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இத்தனை துயரங்களுக்கும் காரணமான குஃப்பார்கள் நம்மை பிரித்தாள்வதற்காக வரைந்த இந்த எல்லை கோடுகளை உடைத்தெறிந்துவிட்டு முஸ்லீம்கள் யாவருக்குமான ஒரே அரசான கிலாஃபாவை இப்பூமியில் நிறுவ வேண்டிய நேரமிது. இதற்கான பணியில் நாம் நம் முயற்சிகளை தீவிரப்படுத்தவேண்டியுள்ளது. ஏனெனில், அல்லாஹ் (சுபு) இறக்கிவைத்த ஆட்சி அமைப்பு முறைதான் இன்று சிரியா மக்களின் துயரத்திற்கும் இன்னும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் அனுபவிக்கும் வேதனைகளுக்கும் நிவாரணம் தரும் அருமருந்தாக இருக்கிறது. இஸ்லாத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அரசு மட்டும் தான் உலகெங்கும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் முஸ்லீம்களை விடுவிப்பதற்காக எந்த தயக்கமும் தாமதமுமின்றி தன் ராணுவத்தை அனுப்பிவைக்கும். இன்னும் அது அவர்களின் மீது அக்கறை கொள்ளும், ஒரு தந்தை தன் பிள்ளையின் மீது அன்பு கொள்வது போல. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,

“நிச்சயமாக இமாம் (கலீஃபா) கேடயமாவார். அவர் பின்னால் நின்றே போர்புரிவீர்கள் இன்னும் பாதுகாப்பு தேடிக்கொள்வீர்கள்”

இன்னும் அல்லாஹ் (சுபு) நாளை மறுமை நாளில் சிரியா முஸ்லிம்களின் துயரம் குறித்து முஸ்லிம்களை கேள்வி கேட்பான்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,

“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்”

Comments are closed.