சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஷரீ’ஆ கட்டாயப்படுத்திய தங்கம் அல்லது வெள்ளியை நாணயமாக ஏற்று பயன்படுத்தாத வரை வர்த்தகத்தை டாலர் அல்லது யுவான் எதில் செய்தாலும் உள்ளூர் நாணய மதிப்பானது வலுவடையாது

செய்தி

டிசம்பர் 19, 2017 அன்று திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறைக்கான அமைச்சர் அஹ்சன் இக்பால் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் அனைத்திற்கான கட்டணத்திற்கும் டாலருக்கு பதிலாக ரென்மின்பியை (RMB or Yuan) உபயோகிப்பதற்கான சீனாவின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். அதேபோல் பாகிஸ்தானிய ஸ்டேட் வங்கியும் ஜனவரி 1, 2018 திங்களன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் மற்றும் நிதி முதலீட்டு செயல்பாட்டுக்காக சீன யுவானை உபயோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

கருத்து

தற்போதய நிலையில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளானது பெரும்பாலும் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் டாலரை அச்சடிப்பதற்கும் மற்றும் தயாரிப்பதற்குமான முழு உரிமையை அமெரிக்கா கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் வழக்கமாக தங்களது உள்ளூர் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்சம் சில பொருட்களையாவது இறக்குமதி செய்ய வேண்டியிருக்கின்றது இவ்வாறு செய்வதற்காக தற்போதய உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார அமைப்பின் பிரகாரம் அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றது. அதை அவர்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டிக்கொள்கின்றன. அங்ஙனம் இறக்குமதி செய்யும் அளவுக்கு தேவையான டாலர்களை ஏற்றுமதியன் மூலம் ஈட்டுவதற்கு முடியாத போது டாலர்களை தனியார் நிறுவனங்கள், உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் அல்லது நேரடியாக காலனியாதிக்க நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளிடம் வட்டிக்கு கடனாக பெற்றுக்கொள்கின்றன. நாடுகள் பெரும்பாலும் தங்களுக்கிடையே வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்களை கொண்டிருக்கின்றன அதில் இருக்கும் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அவர்களுடைய நாணயங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கான அனுமதியை வழங்குகின்றது.

இறக்குமதியில் சில பகுதியை டாலரில் அல்லாமல் மற்ற நாணயத்தில் மேற்கொள்வதன் பேரில் சீனாவுடன் யுவானில் வர்த்தகம் மேற்கொள்வது தமது கட்டண சமநிலைக்கு (balance of payment) உதவும் என்று பாகிஸ்தானுடைய ஆட்சி வட்டாரங்கள் வாதிடுகின்றன. ஆனால் இது பாகிஸ்தானுக்கு உதவப்போவதில்லை, ஏனெனில் 2017 வர்த்தக ஆண்டில் பாகிஸ்தான் சீனாவுக்கு 1.62 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது அதேவேளையில் 10.57 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்திருந்தது இது மாபெரும் ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கின்றது. ஆக பாகிஸ்தான் மீதமுள்ள யுவானை எங்கிருந்து கொண்டுவரும்? ஒன்று பாகிஸ்தான் சீனாவிலிருந்து செய்யும் தனது இறக்குமதிக்கு ஈடு செய்யும் அளவுக்கு சீனாவுக்கு தனது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் ஆனால் இன்னும் சில காலத்திற்கு அது நடைபெறப் போவதில்லை. அதைத்தவிர மற்றொரு வாய்ப்பானது சீன வங்கிகளிடமிருந்து யுவானை வட்டிக்கு கடன் வாங்குவது. ஆக உண்மையில் டாலர் அல்லது யுவானில் வர்த்தகம் செய்வதற்கு இடையேயான வேற்றுமை தான் என்ன? இரண்டுமே பாகிஸ்தானிய பொருளாதாரத்தை அந்நிய சக்திகள் பயன்படுத்த வழிவகுக்கிறது. தற்போது பாகிஸ்தான் டாலர்கள் மூலம் வட்டிக்கு கடன் வாங்கி வருகிறது இப்போதிலருந்து யுவானிலும் வட்டிக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். உண்மையில் அது ஏற்கனவே நடைபெற தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானுடைய நாணய பிரச்சனைகளுக்கு தீர்வானது தன்னகத்தே எந்தவொரு தார்மீக மதிப்பையும் கொண்டிராத ஃபீயட் நாணயத்தை கைவிடுவதிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படையில் தன்னகத்தே தார்மீக மதிப்பை கொண்டதொரு நாணத்தை ஏற்று செயல்படுவதில் தான் உள்ளது.

டாலரும் யுவானும் ஃபீயட் நாணய முறையை சார்ந்ததாக இருப்பதால் அமெரிக்கா அல்லது சீனா உட்பட சில பெரிய நாடுகள் செய்யும் மோசடிகளில் எப்போதும் சிரிய நாடுகள் பாதிப்படைந்து வருகின்றன ஏனெனில் ஃபீயட் நாணயங்கள் தனது பலத்தை அதை வழங்கும் நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ சக்தியின் மூலம் பெறுகின்றது. ஃபீயட் நாணத்தின் இருப்பானது சர்வதேச வர்த்தகத்தில் முறையற்ற பலனை அடைவதற்காக வேண்டி தமது நாணயத்தின் மதிப்பை கையாள்வதாக குற்றம் சாட்டி நாடுகளுக்கு இடையேயான நாணயப் போர் ஏற்படுவதற்கு வித்திடுகிறது. அதற்கு முரணாக தங்கம் மற்றும் வெள்ளி நாணய முறையானது சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துமேயானால் அது சர்வதேச வர்த்தகத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் மற்றும் அனைத்து பொருட்களும் சேவைகளும் மற்றும் நாணயங்களும் தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படும் காரணத்தால் சக்திவாய்ந்த ஃபீயட் நாணயத்தின் மூலமாக காலனியாதிக்க நாடுகள் முறையற்ற பலன்களை அடைவதை முடிவுக்கு கொண்டுவரும்.

ஆனால் தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட நாணய முறையை சர்வதேச அளவில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அது முஸ்லிம் உம்மத் கிலாஃபத் அரசை நிறுவினால் மட்டுமே முடியும். இஸ்லாம் தங்கம் மற்றும் வெள்ளியை நாயமாக கொண்டிருக்க கட்டாயமாக்கியுள்ளது ஆகவே கிலாஃபத்துக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளியை நாணயமாக அறிமுகப்படுத்துவது கடமையாக இருக்கின்றது. இறுதியில் கிலாஃபத்தானது உலகின் மாபெரும் மற்றும் பலமான அரசாகவும் மற்றும் மாபெரும் பொருளாதாரமாகவும் விளங்கும், அது மட்டுமே கடல், தரை மற்றும் வான் மார்க்கம் என அனைத்து மூலோபாய போக்குவரத்தை கட்டுப்படுத்தும் உலகின் வளமிக்க தேசமாக விளங்கும் காரணத்தால் அது சர்வதேச அளவில் தங்க மதிப்பளவை எளிதாக ஏற்றுக்கொள்ள வைக்கும். மேலும் தங்கம் மற்றும் வெள்ளியை உலகளாவிய நாணயமாக அறிமுகப்படுத்தும் கிலாஃபத்தின் முயற்சியானது சில காலனியாதிக்க சக்திகளை தவிர்த்து அனைத்து நாடுகளுக்கும் மாபெரும் அருட்கொடையாக அமையும் இதன்மூலம் அவர்கள் அமெரிக்க மற்றும் இதர காலனியாதிக்க நாடுகளிடம் நிதி மற்றும் பொருளாதார அடிமையாக இருப்பதிலிருந்து வெளியே வருவார்கள்.

ஆக நாம் இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் கடமைகளில் ஒன்றான தங்கம் மற்றும் வெள்ளியை நாணயமாக அறிமுகப்படுத்துவதை நிறைவேற்றும் நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத் உருவாவதற்கான தொடக்கப் புள்ளியாக பாகிஸ்தானை ஆக்குவதற்கு பாடுபட வேண்டும். இஸ்லாமிய பொருளாதார அமைப்பை நடைமுறைப் படுத்துவது மட்டுமே நம்மை பலப்படுத்துவதோடு நம்மை சுயசார்பு நிலையை அடையச் செய்யும் மற்றும் அனைத்து மனித இனமும் தற்போது மேற்கத்திய ஆதிக்கத்திலுள்ள நிதி மற்றும் பொருளாதார அமைப்புகளின் கீழ் சந்தித்து வரும் நிதி மற்றும் பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து விடுபடும்.

(وَيَسْتَجِيبُ ٱلَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ ٱلصَّالِحَاتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِ)

“அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
(அல்குர்ஆன் : 42:26)

Comments are closed.