சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டு கிரெம்ளின் கவலை கொண்டுள்ளது

செய்தி:
15ஆம் ஜனவரியில், ரஷ்யா நாட்டினுடைய 2017ஆவது ஆண்டின் சர்வதேச உறவுகளின் முடிவுகளை பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடபட்டன. ரஷ்யாவின் வெளியுரவு அமைச்சரான செர்ஜி லவ்ரவ் பத்திரிகையாளர்களிடம் கொடுத்த பதில்கள் மற்றும் அறிக்கைகள் வெளியுரவு அமைச்சகத்தின் இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் எழுப்பப்பட்ட இரு கேள்விகள்,

முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்த 5 மத்திய ஆசிய குடியரசு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்காவின் மாநில செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் சந்தித்து, இந்த 5 நாடுகளில் ஒரு நாட்டில் “5 + 1” வடிவத்தில் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்கவின் இந்த ஏற்பாட்டிற்க்கான முன்முயற்சி மற்றும் நோக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அமெரிக்கர்களின் இந்த நடவடிக்கையில் மத்திய ஆசிய பகுதியில் ரஷ்யாவுக்கு எதிரான சதி ஏதாவது நிச்சயமாக உள்ளதா?

செர்ஜி லவ்ரவின் பதில்:

எங்களுடைய மத்திய ஆசிய அண்டை நாடுகள் மற்றும் கூட்டாளிகள், வெளிப்புற கூட்டாளிகளுடன் உறவுகளை வலுபடுத்துக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் நிச்சியமாக இல்லை. இந்த உறவுகள் நம் நாடுகளுக்கிடைய இருக்கும் CIS, CSTO, SCO மற்றும் EEU ஆகிய கூட்டமைப்புகளின் கடமைகளை முற்றிலும் மதிக்கும் என்பதை நாம் உணருகிறோம்

இந்த வடிவமைப்பை தவறாக விமர்சித்து, முந்தைய நிர்வாகங்களின் கீழ் உருவான “பிரமாண்டமான மத்திய ஆசியா”(Great Central Asia) என அழைக்கப்பட்ட திட்டத்தின் சம்பந்தமான கருத்துக்களை ஊக்குவிக்கும் விதத்தில் இப்பொழுது அமெரிக்க விருப்பம் காட்டுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். இத்திட்டத்தின் சாராம்சம், உங்களுக்கும் தெரியலாம் அதாவது, மத்திய ஆசியாவை உள்ளடக்கிய அனைத்து திட்டங்களையும் ரஷ்யாவின் பங்கு இல்லாமல் ஆப்கானிஸ்தானை நோக்கி தெற்கு பகுதியில் அனுப்புவதாகும்.

நான் கூறுவது போல் இருக்குமானால், நம் அமெரிக்க சக ஊழியர்கள் மத்திய ஆசிய நண்பர்களுடனான வரும் சந்திப்புகளில் இதே போன்ற திட்டங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை எடுப்பார்கள். அவர்கள் அனைவரும் அத்தகைய முயற்சிகளின் தாழ்வுகளை காண்பார்கள், ஏனெனில் அவை பொருளாதார அபிவிருத்தி நலன்களுக்காக எடுக்கப்படவில்லை, போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் இல்லை மாறாக முழுக்க முழுக்க (geopolitics) பூகோளஅரசியலின் நோக்கத்திற்காக மட்டுமாகும்.

“பெரிய யுரேஷிய திட்டம்” (Great Eurasian Project) என்ற நம்முடைய திட்டத்தின் சித்தாந்தம் இவர்களின் திட்டத்தை விட மாறுபட்டது. இந்த திட்டம் யூரேசிய கண்டத்திலிருந்து சிலரை அகற்றி சிலரை மட்டும் இணைக்காமல், திறந்த மனதுடன் எல்லோரையும் இணைத்திருக்கிறது. ஆனால், ஒருங்கிணைப்பு செயல்முறைகளின் முன்னேற்றம் படிப்படியாக முன்னேறி இறுதியில் முழு யூரேசிய கண்டத்தையும் இணைக்கும், பிறகு மற்ற வெளி கூட்டாளர்களையும் இணைப்பதற்காக இந்த திட்டம் வழிவகுக்கும்.

கருத்து:
கடந்த நூற்றாண்டின் 1990 களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்குப் பின், மத்திய ஆசியாவில் ஐந்து “சுதந்திர குடியரசுகள்” உருவாக்கப்பட்டன. புதிய நாடாக தோன்றிய ரஷ்யா முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்த இந்த புதிய குடியரசுகள் மீது இயல்பாகவே செல்வாக்கு பெற்றது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முதல் செயலாளர்களே புதிதாக அமைக்கப்பட்ட இந்த குடியரசுகளின் ஆட்சியாளர்களாக ஆனார்கள். ஆனால் இந்த சூழ்நிலைகள் எந்த வகையிலும் மேற்கை குறிப்பாக அமெரிக்காவைத் இப்பிராந்தியத்தில் தன் காலனித்துவ திட்டங்களை நிறைவேற்றுவதில் தடுக்கவில்லை,

உடனடியாக இந்த நாடுகளுடன் அமெரிக்க நெருங்கி நட்பான உறவை ஏற்படுத்தியது, மேலும் சிலவற்றில் அதன் இராணுவ தளங்களையும் நிறுவியது. காலப்போக்கில் இப்பிராந்தியத்தை விட்டு அமெரிக்க வெளியேற வேண்டியிருந்தது, அதன் பின் ரஷ்யா முழு நம்பிக்கையுடன் இதில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த வளங்கள் நிறைந்த பகுதியை காலனித்துவப்படுத்தும் திட்டத்தை அமெரிக்க ஒருபோதும் நிறுத்தவில்லை, ஆனால் அமைந்த சூழ்நிலைகளால் தன் திட்டத்தை கைவிட்டு மறைத்து வைத்தது. இன்று சர்வதேச அரங்கில் அமெரிக்க தைரியத்துடன் ஆதிக்கம் செலுத்தும் ​​இந்த நேரத்தில் தன் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வர முயல்கிறது. சர்வதேச அரங்கில் இந்த பிராந்தியத்தில் செல்வாக்கு கொண்டிருக்கும் ரஷ்யா, நடைமுறையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இப்பொழுது, இந்த பகுதியில் உள்ள தன் நலன்களை அமெரிக்க விடமிருந்து பாதுகாத்து கொள்ளுவதே ரஷ்யாவுக்கு இருக்கின்ற ஒரே வழி.

ரஷ்யாவின் ஆதிகத்தை இப்பகுதியிலிருந்து அகற்றி, தனக்கு கீழ் காலனித்துவபடுத்தும் அமெரிக்காவின் திட்டங்களில் ஒரு திட்டம் தான் இந்த “பிரமாண்டமான மத்திய ஆசியா”,இதை ஏற்கனவே நடைமுறையில் கொண்டுவர முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டன. தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை செயலாளரான டேனியல் ரோஸன்ப்லம், கூறியதாவது:

“அமெரிக்க அரசுத்துறை C5 + 1 வடிவமைப்பில் உறவுகளை உருவாக்க ஒவ்வொரு முயற்சியையும் எடுக்கும்.” (https://www.golos-ameriki.ru/a/danilrosenblum/3439625.html).

நவம்பர் 2015 ல், ஜான் கெர்ரி அனைத்து மத்திய ஆசிய குடியரசு நாடுகளுக்கு பயணித்தார், பயணத்தின் முடிவில் எல்லா குடியரசுகளின் தலைவர்களை உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்டில் கூட்டி உரையாடினார். இந்த கூட்டம் தான் “C5 + 1” வடிவத்திலான புதிய உறவின் தொடக்கமாக இருந்தது, இதில் “5” என்பது ஐந்து மத்திய ஆசிய நாடுகளும், “1” என்பது அமெரிக்க ஆகும். (https://www.currenttime.tv/a/27340925.html).

இந்த உறவு தொடர ஆகஸ்ட் 2016 ல் ஜான் கெர்ரி திரும்பவும் மத்திய ஆசிய குடியரசுகளின் வெளிநாட்டு அமைச்சர்களை வாஷிங்டனில் கூட்டினார். (https://eng.azattyq.org/a/sammit-central-asia-usawashington/27898411.html).. இந்த நேரத்தில் இருவருக்குமிடையில் அனைத்து விஷயங்களும் நன்றாக அமைந்துவிட்டன.

ரஷ்ய வெளியுறவு அமைச்சரான லவ்ரவ், இந்த பிராந்தியத்தை அடைய நினைக்கும் அமெரிக்காவின் இலாபம் மற்றும் சக்தியின் தடையில்லா தாகத்தை பார்த்து, ரஷ்ய தன் செல்வாக்கை இழந்துவிடும் என்று பயந்து பதட்டமானார். மேலும், மத்திய கிழக்கு நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் பார்த்தாலே புரியும் அமெரிக்கா தன் ஆதிகத்தை உருவாக்க பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் எவ்வளவு இரத்தத் தாகம் மற்றும் இரக்கமற்ற நிலையில் போட்டிபோடுகிறது என்று. பிரிட்டன் மத்திய கிழக்கில் தன் திட்டங்களை அடைய அமெரிக்காவை பயன்படுத்த முடிவு செய்த அந்த நாளை இன்றுவரை சபித்துக்கொண்டே வருகிறது.

அப்பொழுது என்ன நடந்தது என்பது நமக்கே தெரியும். அந்த பிராந்தியத்தில் என்னென்ன செல்வம் இருந்தது என்பதை அமெரிக்க அறிந்த பின், இந்த நிலங்களை காலனித்துவப்படுத்த பிரிட்டிஷ் நலன்களுக்காக வேலைப் பார்க்காமல் சுயமாக தன் கொள்கையைத் தொடர முடிவு செய்தது. காலப்போக்கில், பிரிட்டனுக்கு கீழ்படிந்து வந்த எகிப்து, சிரியா, சவூதி அரேபியா, ஈராக் மற்றும் மற்ற நாடுகள் அமெரிக்க கொள்கையின் முழு செல்வாக்கின் கீழ் வந்தடைந்தன.

மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிய நிலையில் மத்திய ஆசியாவின் பக்கம் தன் பார்வையை அமெரிக்கா திருப்பியது. அதன் இலக்கை அடைய வெவ்வேறு வழிகளைப் அமெரிக்க பயன்படுத்தும் என்பது தெரிந்த விஷயம்.

உதாரணமாக, அமெரிக்க அரசுத்துறை சமீபத்தில் மக்கள் மற்றும் மக்களுடைய மத உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலை மேம்படுத்தியது. ஆச்சரியமாக, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டன. மக்களின் சுதந்திரங்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் என போலிக்காரணத்தின் கீழ் நாட்டில் நுழைந்து சுயநல நோக்கங்களுக்காக மட்டுமே ஆர்வம் கொண்ட அமெரிக்க, இந்த நாடுகளின் அதிகாரிகளை சில சீர்திருத்தங்களை செயல்படுத்தவும், ஆட்சியை தளர்த்தவும் முதலில் கட்டாயப்படுத்தும். இதையொட்டி தன் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல்வாதிகளை நாட்டினுள் வளர்த்து தனக்கு சாதகமாக சரியான திசையில் அரசியல் போக்கை மாற்றிவிடும்.

இப்பிராந்திய நாடுகளின் பொக்கிஷ வளங்களை உலக நிதி மற்றும் பொருளாதார நிகழ்வுகளோடு சேர்த்து, மேலும் மத்திய ஆசியாவில் வர்த்தக மற்றும் போக்குவரத்து தொடர்புகளின் வளர்ச்சிக்காகவும் இன்னும் பல நோக்கங்களை இந்த நாடுகளிலிருந்து அடையலாம். அமெரிக்க இதற்கு ஆதாரங்களைக் கொண்டுள்ளது ஆனால் G8 நாட்டுக் கழகத்தில் (G8 Country Club) இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது.

எனவே, மத்திய ஆசியாவில் ரஷ்யா தன் செல்வாக்கை இழந்துவிடும் என்று பயப்படுவதற்கு கிரெம்ளினுக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்துள்ளது. இது ரஷ்ய சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணியாக கூட இருக்கலாம்.

அல்லாஹ் நம் மீது கிருபையை வழங்கி வரும் எதிர்காலத்தில் இரண்டாவது நேர்மையான கிலாஃபத்தின் மறுமலர்ச்சியை வெற்றியின் வடிவத்தில் வழங்குவானாக. ஹிஸ்புத் தஹ்ரீர் இரவு பகலுமாக அயராது உழைத்துக்கொண்டிருக்கும் நபி (ஸல்) வழிமுறையின் படி கிலாஃபாவின் மறுமலர்ச்சியை அல்லாஹ் சீக்கிரமாக வழங்குவானாக. அல்லாஹ்வின் விருப்பத்தின் கீழ் கிலாஃபாவின் மறுமலர்ச்சி மூலம் நாம் நமது நிலங்களை விடுவிப்போம், குறிப்பாக மத்திய ஆசியாவின் நிலங்களை மேற்கு மற்றும் கிழக்கு காலனித்துவவாதிகளின் செல்வாக்கை அகற்றி நம் படைப்பாளனின் சட்டங்களின் படி நீதியுள்ள ஆட்சியை நிலைநாட்டுவோம்.

இதற்காக அல்லாஹ் நமக்கு உதவி செய்யட்டும். ஆமீன்.

Comments are closed.