சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 02.02.2018

தேர்தலை புறக்கணிப்பவர் பாவியாவார் – தாருல் இஃப்தா

உழலை ஒழித்ததன் மூலமாக 100 பில்லியன் டாலர் அரசுக்கு வருவாய் – சவூதி அரேபியா

தலிபான்கள் கட்டுப்பாட்டில் 70% ஆப்கானிஸ்தான் – பிபிசி செய்தி

தேர்தலை புறக்கணிப்பவர் பாவியாவார் – தாருல் இஃப்தா

தாருல் இஃப்தா அல் மிஸ்ரியா என்பது எகிப்து அரசால் நிறுவப்பட்ட ஒரு அரசாங்க அமைப்பாகும். (சவூதிஅரேபியாவில் உள்ள மதீனா பல்கலைக்கழகம் போல) இஸ்லாமிய சட்ட ஆராய்ச்சிக்கான ஒரு மையமாக இது செயல்படுகிறது. அவ்வபோது இஸ்லாம் குறித்த குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு தேவையான நேரத்தில் சில பத்வாக்களை வழங்கும். இவர்களுடைய பத்வாக்கள் உலக பிரசித்தி பெற்றவை.

எகிப்தில் வரும் மார்ச் மாதம் தேர்தல் நடப்பதும், தேர்தல் கள நிலவரமும் அப்துல் பத்தா அல் சிசி தன்னை முன்னிறுத்த மீண்டும் வெற்றி பெறும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தாருல் இஃப்தா அல் மிஸ்ரியா சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளது. தேர்தலை புறக்கணிப்பவர் பாவியாவார் என்பதே அந்த பத்வாவாகும்.

கடந்த திங்களன்று தாருல் இஃப்தா அல் மிஸ்ரியா இஸ்லாமின் பார்வையில் எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்காத எந்தவொரு குடிமகனும் “நேர்மையற்ற முறையில் செயல்படும் ஒரு பாவி” என்று கருதப்படுகிறார் என்று பத்வா வெளியிட்டுள்ளது.

மேலும் தாருல் இஃப்தா இந்த பத்வா குர்ஆன் சுன்னாவின் ஆதார அடிப்படையிலும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல்படியும் வரையறுக்கப் பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய கொள்கையின்படி முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையை வாழ உதவுவதற்காக ஆராய்ச்சி செய்து முடிவு வெளியிட்டதாகவும் கூறுகின்றனர்.

தேர்தல்களில் வாக்களிக்காமல் ஒதுங்கி நிற்பவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஒரு வாக்கெடுப்பு நடக்கும் போது இஸ்லாம் முஸ்லிம்களை நேர்மையானவர்களாகவும் உண்மையாளர்களாகவும் இருந்து சூராவை பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.

சூராவின் மூலம் இஸ்லாமிற்கு ஜனநாயகம் அவசியமானதாக கருதப்படுகிறது. வரும் மார்ச்சில் நடக்கவுள்ள தேர்தலில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது ஆட்சியாளரை தேர்ந்தேடுக்க கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

தற்பொழுது இரு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போதய ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி மற்றொருவர் கடந்த திங்களன்று வேட்புமனு தாக்களின் இறுதி நேரத்தில் கடைசி சில நிமிடங்களுக்கு முன்னால் தன் வேட்புமனுவை தாக்கல் செய்த காட் கட்சியின்(Ghad Party) தலைவரான மூஸா முஸ்தபா மௌசா.

தாருல் இஃப்தாவின் இந்த பத்வாவினால் ஹலால் ஹராம் என்ன என்பது தெளிவாகிறது. இஸ்லாத்திற்கு எதிரான சித்தாந்தத்தை உடைய முதலாளித்துவ கொள்கையின்பால் செயல்படும் ஜனநாயகம், மன்னராட்சி, சுயாட்சி ஆகியவற்றின் மூலமாக பதவியை அடைவதற்கு நடத்தப்படும் தேர்தல்களில் பங்கெடுப்பது, அதற்கு உதவுவது, வாக்களிப்பது மேலும் அது சார்ந்த அனைத்தும் ஹராம் என்பது தெளிவு.

ஆட்சியைப் பற்றி அல்லாஹ் (சுபு)வின் சட்டம் மிகத் தெளிவானதாகும்

இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்டதிட்டத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பு செய்வீராக; அவர்களுடைய மனோ இச்சைகளை பின்பற்றாதீர்கள்; (அல் குர்ஆன் – 5:49)

மேலும் அல்லாஹ் (சுபு) இஸ்லாம் அல்லாத வேறு வழிகளை பின்பற்றுபவர்களை மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றான். அது மிக அர்ப்பமான சிரிய விசயமாக இருந்த்தலும் சரியே.

அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மை திருப்பி விடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால் சில பாவங்களின் காரணமாக அவர்களை பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். (அல் குர்ஆன் – 5:49)

மனித மூளையினால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவ கொள்கையின்பால் செயல்படும் ஜனநாயகம், மன்னராட்சி, சுயாட்சி ஆகியவற்றின் மூலமாக பதவியை அடைவதற்கு நடத்தப்படும் தேர்தல்களில் பங்கெடுப்பது, அதற்கு உதவுவது, வாக்களிப்பது மேலும் அது சார்ந்த அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகும்.

உழலை ஒழித்ததன் மூலமாக 100 பில்லியன் டாலர் அரசுக்கு வருவாய் – சவூதி அரேபியா

உழலை ஒழித்ததன் மூலமாக 100 பில்லியன் டாலர் அரசுக்கு வருவாய் வந்துள்ளதாக சவூதி அரேபியா கூறியுள்ளது. 56 ராஜ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் விடுதலை அடைவதற்கு தங்கள் செல்வங்களை அரசிடம் ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

செவ்வாயன்று காலை, அட்டனி ஜென்ரல் ஷேய்க் சவூது அல் முஜீப் மூன்று மாத விசாரணை முடிவை வெளியிட்டார். அதில் அரச குடும்பத்தில் அறியப்பட்ட சில நபர்கள் நாட்டின் வருவாயிலிருந்து சில பில்லியன்கள் உழல் செய்து தங்களுக்காக ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரியாத்தில் உள்ள ரிட்ச் கெல்டன் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 325 பேருக்கு 400பில்லியன் ரியால் வழங்கப்பட்டதாக அவர் கூறப்பிட்டார். அங்கு அவர்கள் தங்கள் சொந்த நிதிகளை கணக்காளர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் , வணிகம், வர்த்தக பங்குகள், ரொக்கம் மற்றும் இதர சொத்துகளின் மதிப்பை சரிபார்க்க இயலாது. பேச்சுவார்த்தையின் போது கையெழுத்திட மறுத்த பலர் கைது செய்யப்பட்டனர்.

மன்னர் சல்மானால் உத்தரவிடப் பட்டு அவரது மகனும் இளவரசருமான முஹம்மது பின் சல்மானால் வழிநடத்தப்படும் உழல் எதிர்ப்பு திட்டத்தின் ஆரம்ப நாட்களில் மூத்த சவூதி அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்பட்ட தோராய மதிப்புகளின் இரு மடங்கை விட இது மிக அதிகமாகும்.

உழலை ஒழிக்கும் இவர்களது திட்டமானது பாரம்பரியமிக்க ராஜியத்தை இதன்மூலம் ஸ்தாபிப்பதற்கும் பல சகாப்தகளாக ஆட்சி கையாளும் வணிக செயல்பாடுகளாலும், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் வணிக ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் ஆட்சியின் அனைத்து மட்டங்களிலும் நீண்ட காலம் பயனடைந்த சக்தி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆட்சியை பாதுகாத்து அவர்களை அகற்றும் சூழ்ச்சி ஆகும்.

கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டில் காவலில் வைக்கப்பட்டு இருந்த உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அல்வலேட் பின் தாலால், அரசுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வார இறுதியில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் .

ராய்ட்டருடன் ஒரு நேர்காணலில், நியூஸ் கார்ப், ஆப்பிள் மற்றும் ட்விட்டரில் உள்ள முக்கிய முதலீட்டாளர் இந்த சூழ்நிலையை ஒரு “தவறான புரிந்துணர்வு” என்றும், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

அவரை தொடர்ந்து சவூதி அரச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர், காலித் அல்-துய்யஜீரி உட்பட அவரது கூட்டாளிகளும், ஆளும் சவுதி குடும்பம் மற்றும் பல சக்தி வாய்ந்த குலங்கள் (குழுக்கள்/குடும்பங்கள்) ஆகியோருக் கிடையில் உள்ள தொடர்புகளை அழமாக பரிசோதித்தனர்.

உழலுக்கு எதிரான இவர்களின் இந்த நடவடிக்கையானது குருசேடர்களின் நடவடிக்கைக்கு ஒத்துள்ளது. முஹம்மது பின் சல்மான் அவர்களை பின்தொடருவதாகவும் தெரிகிறது. இவருக்கும் வழிப்பறி கொள்ளையர்களுக்கும் மாபியக்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

முஹம்மது பின் சல்மான் தனது சக ஊழியர்கள் மற்றும் ஊழல் கமிட்டி என்று அழைக்கப்படுபவர்கள் மற்றவர்களின் உழல்களை தோண்டி துருவி அலசி ஆராய்கிறார்கள், இதன்மூலம் தங்கள் ஊழல் செய்து சேர்த்து வைத்த செல்வத்தை வசதியாக காப்பாற்றிக் கொள்கின்றனர்.

இந்த நேர்மையற்ற தான்தோன்றித் தனமான நடவடிக்கை மேலும் முஹம்மது பின் சல்மானின் ஆட்சியை பலவீனப் படுத்தும். சாதாரண மக்கள் அரசிடமிருந்து தங்கள் செல்வத்தை மறைக்க முயலும்.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் 70% ஆப்கானிஸ்தான் – பிபிசி செய்தி

அமெரிக்கத் தலைமையிலான படைகள் பில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்தும் தலிபான்களை தோற்கடிக்க முடியவில்லை ஆனால் இப்பொழுது 70% தலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தானில் வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றனர். பிபிசி தனியார் நிறுவனம் நாடெங்கிலும் இதைப் பற்றிய ஆராய்ச்சியை செய்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் வெளிநாட்டுத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின் தலிபான்கள் நடமாட்டம் நாடு முழுவதும் வியப்பித்திருப்பதும் தலிபான்கள் தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்படுத்துவது அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்ததுள்ளது.

தலிபான்கள் தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்படுத்துவதாக பிபிசி கூறியுள்ளதால் ஆப்கானிய அரசாங்கம் அந்த அறிக்கையை குறைத்து மதிப்பிடுகிறது. ஆனால் கள எதார்த்தம் என்னவோ பிபிசி செய்தியை உண்மை படுத்துகிறது. காபூலில் நடைபெற்ற சமீபத்திய தாக்குதல்களுக்கு தலிபான் மற்றும் இஸ்லாமிய அரசின்(Islamic State) போராளிகள் பொறுப்பேற்றுள்ளன. காபூல் மற்றும் ஏனைய இடங்களில் தாக்குதலும் நடத்தி இருக்கிறார்கள் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.

ஆப்கானிய அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாலிபனுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க இராணுவம் காலவரையின்றி ஆப்கானிஸ்தானில் தங்குவதாக அறிவித்தார்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் 399 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் பிபிசி செய்தியாளர்களின் ஒரு செய்தி சேகரிக்கும் குழு 1,200 க்கு அதிகமான உள்ளூர் நபர்களிடமிருந்து ஆதாரங்களைக் திரட்டியது.

இந்த உரையாடல்கள் தனி நபர் அல்லது தொலைபேசி மூலம் நடந்தது, மேலும் அனைத்து தகவல்களும் குறைந்தபட்சம் இரண்டு மற்றும் ஆறு முறை சோதிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் பிபிசி நிருபர்கள் அங்குள்ள உள்ளூர் பேருந்து நிலையங்களுக்கு சென்று அங்குள்ள சூழ்நிலைகளை இருமுறைக்கும் மேலாக சரிபார்த்துள்ளனர். தொலைதூர மற்றும் அணுக முடியாத மாவட்டங்களில் இருந்து மக்களையும் கண்டறிந்து அவர்களிடமும் தகவல்களை சேகரித்தனர்.

சுமார் 15 மில்லியன் மக்கள் – அதாவது நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்ப்பட்ட மக்கள் – தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கின்றனர். தாலிபன் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தும் இடங்களிலும் வாழ்கின்றனர் பிபிசி ஆராய்ச்சியின் முடிவின் படி இப்போது மொத்தமுள்ள 399 மாவட்டங்களில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் 14 மாவட்டங்கள் முழுமையாக உள்ளது (இது நாட்டின் 4% ஆகும்). மேலும் அவர்கள் வெளிப்படையாக மற்றும் சுதந்திரமாக செயல்படுவது 263 மாவட்டங்களில் ஆகும். (இது நாட்டின் 66% ஆகும்).
வெளிப்படையாக மற்றும் சுதந்திரமாக இருப்பதாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில், தீவிரவாதிகள் ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிராக அடிக்கடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.  பெரிய இராணுவத் தளங்கல், இராணுவக் காவலாளிகள் மற்றும் காவல்துறை சோதனைச்சாலைகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடைப்பெற்று வருகின்றன.

அமெரிக்காவும் அதன் நட்பு(அடிமை)நாடுகளும் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தங்கள் தோல்வியைப் பற்றிய உண்மையான தகவலை வெளிவராமல் தடுத்து வந்தன. ஆப்கானிஸ்தானின் அதிமுக்கிய நகரான காபூலின் அடிக்கடி நிகழும் தாக்குதல்கள், அமெரிக்கா தனது கட்டுப்பாட்டை அங்கு இழந்து வருகிறது. மேலும் அமெரிக்காவிற்கு அங்கு சிக்கல் அதிகமாகியுள்ளது இதன்மூலம் நிரூபணமாகிறது.

Comments are closed.