சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

முஸ்லிம்களுக்கு எதிரான தனது அடக்குமுறையை சீனா உய்குர்களை மட்டுமல்லாமல் இப்போது ஹூய் முஸ்லிம்கள் மீதும் விரிவாக்கியுள்ளது

செய்தி:

ஹூய் இனத்தின் முஸ்லிம் சிறுபான்மையினர் பலர் வசிக்கும் கான்ஸி மாகாணத்திலுள்ள லிங்ஸியா மாவட்டத்தில் மத போதனைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ளும் விதமாக பள்ளி மாணவர்கள் குளிர்கால விடுமுறை நாட்களின் போது சமய ஈடுபாடுடைய கட்டிடங்களில் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட கல்வி பியூரோ அறிவித்தது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தங்களுடைய வகுப்பறைகள் அல்லது சமய ஈடுபாடுடைய கட்டிடங்களில் வேதங்களை படிக்கக்கூடாது எனவும் இந்த பியூரோ கூறியுள்ளது. அதோடு இந்த சீன அரசின் கொள்கை மற்றும் பிரச்சாரத்தை பலப்படுத்த இந்த அறிவிப்புக்கு அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டுப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

சீனா அரசின் உதவியுடன் செயல்படும் சமூக அறிவியல் அகடமியின் மார்க்ஸிய அறிஞரும் சீனாவில் அதிகரித்து வரும் இஸ்லாமிய செல்வாக்கின் மீது வெளிப்படையாக விமர்சித்து வருபவரான ஜீ வுயீ என்பவரால் இந்த அறிவிப்பை கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பகிரப்பட்டது. சமூக வளைத்தளமான வீபோவில் பதிவிடப்பட்ட ஒரு பதிவில் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வெளிப்படையான நடவடிக்கைகளை வரவேற்றார். இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மையை அறிவதற்காக லிங்சியா கல்வி பணியகத்தை தொலைப்பேசி மூலம் ராய்ட்டர்ஸ் அணுகிய போது அந்த தொலைப்பேசியில் பேசியவர் எந்த பதிலும் கூறாமல் அழைப்பை துண்டித்து விட்டார், அமேபோல் மாவட்ட கல்வி இயக்குனரகத்தில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார்.

கருத்து:

ஜிங்ஜியாங் முஸ்லிம்கள் மீது முதன்மையாகவும் சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் பரவலான அடக்குமுறைகளானது வெறுமனே இன அல்லது புவி அரசியலின் காரணமாக அல்லாமல் முக்கியமாக இஸ்லாம் மீதான காழ்ப்புணர்ச்சி மற்றும் இஸ்லாம் சீனாவில் வளர்ந்து வருவதை கண்ட அச்சத்தின் காரணமாகவே என்பது தெளிவாகத் தெரிகிறது. தற்போது நிங்ஜி(Z)யா மாகாணமும் இஸ்லாமிய போதனையை தடுப்பதற்கான இலக்காகி வருவதென்பது அதை ஊர்ஜிதப்படுத்துகிறது, கடினமான அரசியல் மற்றும் சமூக கட்டுப்பாட்டை விதித்து வரும் அவர்களுடைய அதிகாரப்பூர்வ நாத்தீக கம்யூனிச கட்சியில் இஸ்லாம் செல்வாக்கு பெற்றுவிடக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள்.

உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஹூய் முஸ்லிம்களின் நிலையின் வேற்றுமை குறித்து வலுவான கதை ஒன்று ஊடகங்களில் உலாவிடப்படுகிறது, அதாவது இனப் பிரச்சனைகள் மற்றும் புவி அரசியல் நலன்களின் காரணமாகவே சீனாவின் அதீதமான அடக்குமறை நடத்தைக்கு காரணம் என்று. 11 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்ட ஹூய் முஸ்லிம்கள் நிங்ஜி(Z)யா ஹூய் தன்னாட்சி உரிமையுடைய பகுதியில் வசித்து வருகின்றனர். நிறத்தாலும் இரத்தத்தாலும் ஹூய் மக்கள் தங்களது ஹான் சகோதரர்களுடன் சிரிய அளவில் மாறுபட்டு இருக்கின்றனர், இருவரும் மாண்டரீனை தாய் மொழியாக கொண்டிருக்கின்றனர். இதுநாள் வரை, உய்குர்களை விட ஹூயிக்கள் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் என கூறப்பட்டு வந்தது. ஹூயிக்களை போன்றல்லாமல் துருக்கிய மொழியை பேசக்கூடியவர்களாகவும் அரபு எழுத்துக்களை எழுதக்கூடியவர்களாகவும் மற்றும் பெரும்பாலும் ஜிங்ஜியாங் உய்குர் தன்னாட்சி உரிமை பெற்ற பகுதியில் வாழ்ந்து வரும் உய்குர்கள் பயங்கரமான அளவிலான பாகுபாட்டை அரசு மேற்கொள்வதை சந்தித்து வருகின்றனர். அது பரவலான முறையில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக இன பாகுபாட்டை மேற்கொண்டு அவர்களுடைய மத மற்றும் கலாச்சார வெளிப்படுத்துதலை கடுமையான அளவில் கட்டுப்படுத்தி வருகிறது.

எனினும், சீனாவில் முஸ்லிம்களின் வேறுபட்ட இவ்விரு கதைகளானது தற்போதய நிலையில் பொருந்தாது. சமூகத்தில் இஸ்லாமிய செல்வாக்கை கண்டு அஞ்சும் சில அறிஞர்களின் கண்காணிப்பின் கீழ் ஹூய் முஸ்லிம்களும் சேர்ந்துள்ளார்கள். சிறுமி ஒருவரின் குர்’ஆன் ஓதும் காணொளி இணையத்தில் பரவலாகியதற்கு பின்னர் 2016ல் கான்சூ மாகாண அரசாங்கம் தொடக்க நிலை பள்ளிக்கூடங்களில் மதங்கள் போதிக்கபடுவதற்கு தடை விதித்தது. கான்சூ மாகாணம் 16 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியாகும், இது சீனாவிலுள்ள மாகாணங்கள் மற்றும் பகுதிகளில் ஜிங்ஜியாங் மற்றும் நிங்ஜி(Z)யாவுக்கு அடுத்து மூன்றாவது அதிக முஸ்லிம் மக்கள்தொகையை கொண்ட பகுதியாகும்.

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பிரம்மைபிடித்த இந்த செயலானது – அது உய்குர் அல்லது ஹூய் எவர் மீதானாலும் – நிஜத்தில் இஸ்லாமிய அகீதாவின் சக்திக்கு எதிராக அவர்களது சக்தியற்ற வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகும். சீன அரசாங்கம் தமது அரசு 7ம் நூற்றாண்டில் அனுபவித்து வந்த இஸ்லாமிய சித்தாந்தத்துடைய சக்தியின் மகத்துவத்தை நன்கறிந்துள்ளனர், எவ்வாறெனில் அது அம்மக்களை பாதித்து கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்கு அவர்களை மாறச்செய்தது என்பதை கண்டுள்ளார்கள். இஸ்லாமிய கிலாஃபத்தில் அல்-வலீத் பின் அப்துல் மலீக் அவர்களுடைய காலத்தில் ஹிஜ்ரி 86 / 705 ஆம் ஆண்டு தொடங்கி சீனப்பகுதி உட்பட மத்திய ஆசிய பகுதியை குதைபா பின் முஸ்லிம் எனும் தளபதியின் கீழ் கைப்பற்றி வந்தார். அப்போது சீனா ஆசிய நிலப்பரப்புகளை ஆண்டு வந்த அதன் ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு அந்நிலப்பரப்புகளை கைப்பற்றுவதில் வெற்றி கண்ட முஸ்லிம்களின் சக்தியை கண்டது. குறிப்பாக குதைபா அவர்கள் வெற்றிகரமாக காஷ்கர், சமர்கந்து நகரை கைப்பற்றியதோடு சினாவுக்கும் உலகுக்கும் மிகமுக்கிய வழித்தடங்களான மத்திய ஆசியாவிலுள்ள பட்டுச்சாலை (silk road) வர்த்தக தடங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது உட்பட இதுபோன்ற அனுபவங்கள் சீன வரலாற்றின் நினைவுகளில் பொறிக்கப்படும் அளவுக்கு மிகப்பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பி’இத்னில்லாஹ் இந்த வரலாறு மீண்டும் நடைபெறும், சீனாவின் இந்த கொலைகார அரசு மீண்டுமொரு முறை இஸ்லாமிய கிலாஃபத்தின் ஆணையின்படி இரண்டாவது குதைபாவை எதிர்கொள்ளும். குதைபா போன்ற படைத்தளபதி இஸ்லாமிய கொடியின் கீழ் உய்குர் முஸ்லிம்களை விடுவித்து அனைத்து முஸ்லம்களின் உயிர், சொத்துக்கள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படும் விதத்தில் மத்திய ஆசியாவில் இஸ்லாத்தின் புவி அரசியல் பலத்தை மீண்டும் நிலவச்செய்வார்.

Comments are closed.