சமீப பதிவுகள்

செய்தி பார்வை 07.02.2018

புதிய அணுஆயுத நிலைப்பாடு

டிரம்ப் அவர்களின் நிர்வாகம் அணுஆயுத நிலைப்பாடை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது , அது தங்கள் நாட்டின் ஆயுத பலத்தை மதிப்பேடு செய்வதாகும். சமீபத்தில் டிரம்ப் போர் காலத்தில் திட்டமிட்ட அணுஆயுத தாக்குதலுக்கு அணு ஆயுதத்தை பயன் படுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டில் பெரும் பகுதியில் வட கொரியா தலைப்பு செய்தியில் வந்தது, குறிப்பாக அமெரிக்க எல்லையை தாக்க கூடிய அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. அமெரிக்க ராணுவம் எப்போதும் மற்ற அனைவரையும் விட அதிக ராணுவ பலம் கொண்டவர்களாக தாங்கள் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பர். ரஷ்யா அல்லது சீன போன்ற நாடுகள் தங்கள் நாட்டை அச்சுறுத்தும் வகையில் ராணுவ திட்டங்கள் மேற்கொள்ளும்போது அமெரிக்க ராணுவத்திற்கும் அரசாங்கம் சார்பாக அதிகமான நிதி ஒதுக்கப்படும். அனால் இந்த அறிக்கையில் மறைக்கப்பட்டதென்னவெனில், ஸ்டேட்டஸ்-6 என்கிற ரஷ்ய ஆயுதம், உலகத்தை அழிக்க கூடிய புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும், அணு ஆயுத சக்திபெற்ற, கடலுக்கடியில் செல்ல கூடிய கருவியாகும். டிரம்ப் ஆட்சியில் உலக பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண முடியாத நிலையில், தங்கள் ராணுவத்தை உபயோகித்து தீர்வை நாடுகின்றனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் அவர்கள் மேற்கொண்ட சீர்குலைவிலிருந்து அமெரிக்க இந்த உலகத்தை பற்றிய நிலைப்பாடை இன்னும் மாற்றி கொள்ளவில்லை.

கிரிப்டோ நாணயம் எனும் மாயை அழிய தொடங்கியது

கடந்த வருடம் பிட் காயின் போன்ற சில கிரிப்டோ நாணயங்கள் அசுர உயர்வை கண்டது. 1990 களில் வலைத்தளம் எனும் புதிய வாஸ்து பல வரைமுறைகள் இல்லாமல் அசுர வளர்ச்சி பெற்றது போல் பிட் காயின் போன்ற நாணயங்களும் வரைமுறைகள் இல்லாமல் அதனுடைய மதிப்பு உயர்ந்தது. வரக்கூடிய பிரச்சனை தெளிவாக உள்ளது, ஏனெனில் இந்த டிஜிட்டல் டோக்கன்கள் ஜனவரி 2018 மாதத்தில் இருந்ததை விட 50 சதவீதம் குறைந்துள்ளது. பெப்ரவரி 6 ஆம் தேதி நிலவரப்படி இத்தகைய நிஜமற்ற நாணயங்களின் மொத்த மதிப்பு 400 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹக்கெர்கள் ஒன்லைன் பரிமாற்றங்களிலிருந்து நிதி இருப்பை சுரண்டுகினறனர். அரசாங்க கட்டுப்பாட்டாளர்களால் கிரிப்டோ நாணயங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பெரும் பரிமாற்ற நிலையங்கள் முதல் வலைதள அரட்டை அறைகள் வரை அணைத்து நிலைகளிலும் பிரச்சனைகளின் அறிகுறிகளை காண முடிகிறது. பிட்காயின் அதனுடைய நிலையிலிருந்து இறங்கும் நிலையில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் வெளிப்பட தொடங்கியுள்ளது. பல போலி திட்டங்கள் வளர்ச்சி பெற தொடங்கியுள்ளது ஏனெனில், அவைகள் வங்கி கணக்குகளை உபயோகிக்கவுமில்லை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமும் செயல் படவில்லை. மாறாக இந்த நிஜமற்ற டிஜிட்டல் நாணயங்கள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றது. இத்தகைய நிஜமற்ற டிஜிட்டல் நாணயங்களின் பரிமாற்றங்கள் வங்கி அல்லது பெபால்(PayPal) மாற்றங்கள் போல திரும்பி பெறவும் முடியாது.

Comments are closed.