சமீப பதிவுகள்

செய்தி பார்வை 10.02.2018

1.ஒலிம்பிக் போட்டியை பயன்படுத்தி இரு கொரிய நாடுகளும் அமைதியை ஏற்படுத்த முனைகின்றன. ஆனால் அமெரிக்கா போரை விரும்புகிறது

2.அமெரிக்கா அஃபார்லிருந்து விமானப் படைகளை பயன்படுத்தி சிரியாவிலுள்ள தேர்அல்ஜோரை தாக்குவதன் மூலம் நுணுக்கமான (நுட்பமான) போரை தொடர்கிறது

3.எகிப்து தங்கள் குடிமக்கள் மீது மிருகத்தனமான இராணுவப் படைகளை பயன்படுத்தும் மேற்கத்திய நடைமுறைகளை ஏற்று நடைமுறைப் படுத்துகிறது

ஒலிம்பிக் போட்டியை பயன்படுத்தி இரு கொரிய நாடுகளும் அமைதியை ஏற்படுத்த முனைகின்றன. ஆனால் அமெரிக்கா போரை விரும்புகிறது

வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகியவை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை பயன்படுத்தி தென் கொரியாவால், கூட்டு கொரிய அணியை களமிறக்குவதன் மூலம் உறவுகளை சமாதானப்படுத முயலுகிறது. ஆனால் எதிர்வினையாக அமெரிக்கா அந்தப் பகுதியில் மோதலை தூண்டுகிறது.

சிகாகோ ட்ரிப்யூன் செய்தியின் படி இந்நிலையில் வடகொரியா மற்றும் தென் கொரியாவிற்கும் இடையேயான உறவுகளில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட இன்னும் எதிரெதிரான இரண்டு போரிடும் நாடுகள் இணைந்துள்ளன என்றார்.

மேலும் அவர், வெள்ளியன்று துவக்க விழாக்களுக்கு அமெரிக்கத் தூதுக்குழுவை வழிநடத்த பியோங்ஹாங்கிற்கு வழிவகுக்கும் வகையில், வட கொரியாவின் பயங்கரமான மனித உரிமை மீறல் மற்றும் அணுஆயுத ஆக்கிரமிப்புக்கு கவனத்தை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டு அடையாளங்களை பென்ஸ் மேற்கொண்டார்.

உறுதியான வார்த்தைகளுடன் – வட கொரியாவிற்கு எதிரான “ஆக்கிரோஷ” பொருளாதார தடைகள் பற்றிய வாக்குறுதியையும் வட கொரிய அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளை மறுபரிசீலனை செய்யும் என்றார்.

டோக்கியோவில் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே சந்திப்பிற்குப் பின்னர் புதன்கிழமை செய்தியாளர்களிடம்: “தங்கள் மக்களை அடிமைப்படுத்தவும், பரந்த பிராந்தியத்தை அச்சுறுத்தும் வகையிலும், வட கொரியா ஒலிம்பிக் என்ற போர்வைக்குள் ஒளிந்து நின்று செயல்பட அனுமதிக்க மாட்டோம், என்று கூறினார்.

சிபிஎஸ் நியூஸின் படி:

அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் யூன் சகோதரி ஒலிம்பிக் திறப்பு விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட போதிலும் கூட அவர்களுடன் எந்த தொடர்பு இல்லை என்றார். தென் கொரிய ஜனாதிபதி மன்டே ஜெய்சில் மற்றும் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அகியோருக்கு நடுவில் பென்ஸ் அமர்ந்து கொண்டார் சர்வாதிகாரியின் சகோதரி கிம் யோ ஜோங் மற்றும் நாட்டின் 90 வயதான பெயரளவிலான தலைவரான கிம் யோங் நம் வரிசையில் பின்னால் அமர்ந்துள்ளனர்.

வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட ஒரு சர்வதேச நிலைப்பாட்டின் கீழ் இந்த விளையாட்டு நடைபெறுகிறது, பெயர் குறிப்பிடப்படாத வெள்ளை மாளிகையின் அதிகாரி, பென்ஸ், அமெரிக்கக் குழுவிற்கு மட்டும் தான் நிற்கிறார், மற்றவர்கள் அனைவரும் கொரியாவில் இருந்து விளையாட்டு வீரர்கள் ஒன்றாகக் கலந்துகொண்டபோது, கை தட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.

அமெரிக்கா உலக வல்லரசாக இருக்க தகுதி இல்லை. அதன் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவின் அடித்தளம் அதன் நிலப்பகுதிகளின் அடக்குமுறை, கொலை மற்றும் அகற்றுதல் ஆகியவற்றின் மீது கட்டப்பட்டது மேலும் அதன் சக்தி மற்றும் செல்வாக்கு ஆகியவை உலகெங்கிலும் விரிவுபடுத்தப்பட்டதன் காரணமாக இதே நிலைப்பாட்டை உலகம் முழுவதும் எடுத்துள்ளது. சீன எல்லையில் அமெரிக்க இராணுவ இருப்பை நியாயப்படுத்தவும் சீனாவின் அண்டை நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை மிரட்டுவதற்கும் சீனாவின் எல்லையில் மோதலை உருவாக்கும் பொருட்டு வட கொரியர்கள் மீண்டும் மீண்டும் தூண்டிவிடப்பட்டுள்ளனர். சீன மக்கள் தொடர்ந்து அமைதியான சமூக பொருளாதார வாழ்வை கைவிட்டு, இராணுவமயமாக்கல், பிராந்திய மேலாதிக்கத்தை மற்றும் உலகளாவிய அபிலாசைகளைப் பின்தொடர்வதைத் தொடர்ச்சியாக அமெரிக்கா தூண்டிவிட்டுள்ளது.

அமெரிக்கவிற்கு அழிவு அரம்பமாகியுள்ளது, அதன் ஆட்சி முடியப் போகிறது. இஸ்லாம் உலக வல்லரசாக இருந்தபோது, ​​உலகம் முழுவதும் அமைதி மற்றும் செல்வ செழிப்பு நிலவியது, இராணுவ மோதல்கள் மிகக் குறைவாக இருந்தன. அல்லாஹ்வின் அனுமதியுடன், உலக அரங்கில் இஸ்லாமின் மறு உருவாக்கம், மற்றும் மனிதகுலத்தின் சமாதான மற்றும் நீதிக்கான ஒரு புதிய விடியல் ஆகியவை விரைவில் மலரும் இன்ஷா அல்லாஹ்

அமெரிக்கா அஃபார்லிருந்து விமானப் படைகளை பயன்படுத்தி சிரியாவிலுள்ள தேர்அல்ஜோரை தாக்குவதன் மூலம் நுணுக்கமான (நுட்பமான) போரை தொடர்கிறது

நேரடியாக சிரியாவில் போர்தொடுக்க அச்சமுற்று, அமெரிக்கா அஃபார்லிருந்து (தூரத்திலிருந்து) விமானப் படைகளை பயன்படுத்தி நுணுக்கமான (நுட்பமான) போரை உக்கிரமாக தொடர்கிறது, பல படைகளுக்கான வீரர்களை உருவாக்கி, சிலர் விட்டு வெளியேறினாலும் தொடர்ச்சியாக மற்ற படைகளை பயன்படுத்துகிறது.

சிஎன்என் கருத்துப்படி:

பிராந்திய-சார்பு சக்திகளின் (போராளி குழுக்களின்) முயற்சிகளுக்கு ஒரு வலுவான பதிலடியாக வடகிழக்கு சிரியாவில் அமெரிக்காவின் வான் வழி தாக்குதல்கள் புதனன்று இரவு முழுவதும் அதன் நட்பு நாடுகளின் கூட்டு ராணுவப் படையால் நடத்தப்பட்டது. யூப்ரடிஸ் நதியின் கிழக்கு பிராந்தியத்தில் சிரிய அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சியை மீட்க எல்லாவிதமான முயற்சியும் மேற்கொண்டு சக்திவாய்ந்த பதிலடி தருவதற்கு அதன் மணலில் எல்லை வரையறுக்கப் பட்டது.

500 க்கும் மேற்பட்ட துணை-இராணுவ துருப்புக்களின் உதவியுடன் 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அதிகரப்பூர்வ சிரிய அரசு செய்தி நிறுவனம் SANA, மீதமுள்ள யூப்ரடீஸ் நதிக் கரை முழுவதும் இரவில் தாக்குதல் “பழங்குடி போராளிகள்” தாக்கியதாக அறிவித்தது.

கிழக்கு யூப்ரட் பள்ளத்தாக்கு கிழக்கு சிரியாவில் ஒரு முறைசாரா எல்லைப் பிரிவாக விளங்குகிறது, SDF மேற்கு பகுதியையும் அரசாங்கம் கிழக்குப் பகுதியையும் கட்டுப்படுத்துகிறது. இது சிரியா ஆட்சி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் மற்றும் அமெரிக்க ஆதரவு சிரியா ஜனநாயகப் படைகளுடைய (SDF) யூப்ரடீஸ் 23% சிரியா நிலப்பகுதிக்கும் இடையே ஒரு எல்லைகளாகிவிட்டது – இப்பகுதி குர்திஸ் மற்றும் அரபு போராளிகளின் கலவையாகும். கிழக்கில் டீர் எஜோரிலிருந்து ரக்காவிற்கும் மேலும் துருக்கிய எல்லை வரைக்கும் அவர்கள் அனைத்து வழிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

அசாத் சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்காவின் ஒரு கைக்குலி ஆவார், அவர் மக்கள் புரட்சிக்கு எதிராக அமெரிக்காவல் ஆதரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில், அசாத்தின் அதிகாரம் அமெரிக்காவால் கட்டுபடுத்தப் படுகிறது, பிரிட்டன் மற்றும் பிரான்ஸுக்கு இடையேயான Sykes-Picot ஒப்பந்தத்தை ரஷ்யாவை வைத்து நிறைவேற்றியது போல சிரியா மற்றும் அதன் பிராந்தியத்தில் மற்ற பிரிவினரின் அதிகாரம் ஆகியவற்றிற்கான வரம்புகளையும் அமெரிக்கா தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளது.

சிரியாவில் அமெரிக்காவிற்கு பல கூட்டாளிகளும் ஏஜெண்ட்களும் இருந்தும் அமெரிக்காவின் நிர்வாகம் அதன் வலிமையை அங்குக் காட்ட முடியவில்லை, இது அமெரிக்க பலவீனத்தின் அறிகுறியாகும். சிரிய யுத்த அரங்கில் தனது சொந்த இராணுவ சக்திகளுடன் நேரடியாக நுழைவதற்கு அமெரிக்கா அஞ்சுகிறது, மற்றும் அதன் சொந்த இராணுவ நடவடிக்கைகளை கோழைத்தனமான விமான தாக்குதல்களுக்கு அல்லது எல்லைக் கோடுகளிலிருந்து தொலைவில் உள்ள ‘ஆலோசகர்களின்’ ஆலோசனை பேரில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே நிறுத்தி வைத்துள்ளது. இன்னும் நம் ஆட்சியாளர்கள் அமெரிக்கத் தலைமைக்குக் கீழ்ப்படிகிறார்கள். இந்த அடிமைகள் அமெரிக்கக் கட்டளைக்கு இணங்க அமெரிக்க பலவீனத்தை உணர முடியாமல் அவர்களுக்கு அடிமைகளாக சேவகம் செய்ய சுலைமான் (அலை) அவர்களின் ஜின்களைப் போல் தயாராகிவிட்டர்கள். ஆனால் வெகுகாலம் அவர்களால் கட்டளை பிறப்பிக்க முடியாது.

எகிப்து தங்கள் குடிமக்கள் மீது மிருகத்தனமான இராணுவப் படைகளை பயன்படுத்தும் மேற்கத்திய நடைமுறைகளை ஏற்று நடைமுறைப் படுத்துகிறது

மேற்கத்திய நாடுகளுக்கு அதன் நாட்டு மக்களை வதைப்பது சாதாரணமாகிவிட்டது, மனிதகுலத்திற்கு கருணை கட்டாமல், பொதுமக்களுக்கு எதிராக இணையற்ற இராணுவ சக்தியைப் பயன்படுத்துவது எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது முஸ்லிம் நாடுகளின் மேற்கத்திய கைக்குலி ஆட்சியாளர்களும்கூட அவர்களது சொந்த மக்களிடமும் இதே நடைமுறையை பின்பற்றுவது சாதாரணமாகி வருகிறது. இதன் சமீபத்திய உதாரணம் எகிப்திய ஆட்சி தனது சொந்த குடிமக்கள் மீது முரட்டு இராணுவப் படைகளை பயன்படுத்துகின்ற முறையை காணலாம்.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி:

எகிப்தின் சினாய் பெனுசிலா பகுதியில் அதிபர் அப்துல் பத்தா அல் சிசி யால் கடந்த வெள்ளியன்று ஒரு கொடுரமான தாக்குதல் நடைப் பெற்றது. இஸ்லாத்திற்காக போராடும் போராளிக் குழுக்கள் மீது பிப்ரவரி மாத கடைசியில் கொலைவெறி தாக்குதல் நடைப் பெற்றது தனது பேஸ்புக் பக்கத்தில் சிசி, “எகிப்தின் பயங்கரவாத சக்திகளின் பகுதியை அழிக்க ஆயுதப்படை மற்றும் பொலிஸில் எனது மகன்களின் வீர செயல்களை கண்டு நான் பெருமையுடன் பின்பற்றுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

சினாயின் பகுதிகளில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதாகவும், ஆனால் நைல் டெல்டா மற்றும் மேற்கு பாலைவனம் ஆகியவற்றில் சில போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் சிலர் லிபியாவில் இருந்து வெளியேறி வந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது என்றும் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக் குழுக்கள் வியாழனன்று, ஆயிரக்கணக்கான துருப்புகளை உள்ளடக்கிய, இராணுவ குழுக்கள் அதன் இலக்கு, ஒருங்கிணைப்பு ஆகியவை திட்டமிடப்படாத வகையில் இருந்தது, ஆனால் இன்னும் விவரங்களை முழுமையாக வழங்கவில்லை.
“பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காகவும் சட்ட அமலாக்க படைகள் நெருக்கமாக ஒத்துழைக்கவும், நாட்டை பாதுகாக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை அச்சுறுத்தும் எந்த நிகழ்வையும் உடனடியாக அறிவிக்கவும், எகிப்திய மக்கள் அரசுக்கு நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும்” என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் டேமர் அல்- ரிபாய், ஒரு தொலைக்காட்சியில் கூறினார்.

வடக்கு மற்றும் மத்திய சினாயில் மறைந்துள்ள குழுக்களை இலக்காக வைத்து விமானப் படை முன்னேறுவதாகவும், கப்பற்படையும் அவர்களை சுற்றி வளைத்து அவர்களுக்கு எந்தவித பொருளும் உதவியும் கிடைக்காமல் தடுக்கும் வேலைகளை செய்வதாகவும் தனது இரண்டாவது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வியாழனன்று ராய்ட்டருக்குத் தெரிவித்த செய்தியின் படி சினாயயின் வடக்கு மாகாண தலைநகர் அல்-அரிஷில் பாதுகாப்புப் பணிகளை அதிகரித்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மற்றும் அவர்களின் குடியிருப்பு பகுதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

அனைத்து பள்ளிகளும் சனிக்கிழமை முதல் அறிவிக்கப்படும் வரை முடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அரசு சார்பில் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை கூறியது.

முஸ்லீம் ஆட்சியாளர்களால் இராணுவ சக்தியை அதிகரித்ததன் மூலம் அவர்களின் அரசியல் அதிகாரத்தின் சரிவை அது சுட்டிக்காட்டுகிறது. இந்த கேடுகெட்ட அடிமை ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகவும், மேற்கத்திய எஜமானர்களின் நலன்களுக்காகவும் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். முஸ்லீம் உம்மா இந்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்து, நேர்மையான சித்தாந்த ரீதியிலான இஸ்லாமிய கிலாஃபத் அரசை மறுபடியும் மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புவதற்கு அல்லாஹ்வின் அனுமதியுடனான நேரம் நெருங்கிவிட்டது. முஸ்லிம்கள் அதற்காக உண்மையாக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அயராது உழைத்து நபி (ஸல்) அவர்களின் சுன்னா மூலம் ஆட்சியை நிறுவி உலகம் முழுவதும் அதன் ஒளியை பரவச்செய்வார்கள்.

Comments are closed.