சமீப பதிவுகள்

செய்தி பார்வை 14.02.2018

1.சிரியாவில் ஜியோனிஸ்ட்களின் தாக்குதல்

2.சவூதி அராபிய தங்களுடைய சீர்திருத்தத்தை தொடர்கிறது

3.மேற்குலக அறக்கட்டளை மற்றொரு செக்ஸ் புகாரில் சிக்கியுள்ளது

சிரியாவில் ஜியோனிஸ்ட்(யூதர்கள்) தாக்குதல்

கடந்த பிப்ரவரி 10 அன்று, சியோனிச இராணுவம் அதன் வான்வெளி எல்லைக்குக்கு அருகே ஒரு ஈரானிய விமானத்தை கண்டுபிடித்து அதை சுட்டு வீழ்த்தியது. அந்த நடவடிக்கையில் ஒரு படி மேலே சென்று ஜியோனிஸ்ட் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய விமானம் சிரியாவிலிருந்து இயக்கப்பட்டதை கண்டுபிடித்து, அதை இலக்காக வைத்து அதிக திறன் கொண்ட போர்விமானத்தை சிரியாவின் அந்த பகுதியை நோக்கி அனுப்பியது. ஜியோனிஸ்ட் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஜியோனிஸ்ட் மீண்டும் மற்றுமொரு தாக்குதலுக்கு தயாரானது. இம்முறை அது சிரியாவிலுள்ள 12 சிரியன் மற்றும் ஈரானிய தளங்களை தாக்கியது. முதலாவதாக உள்நாட்டு பாதுகாப்பு தடவாளங்களை குறி வைத்தது.

குறுகிய காலத்துக்குள் அது நிறைய இடங்களை இலக்காக வைத்து தாக்க முனைத்தது. அதே நேரத்தில் ஜியோனிஸ்ட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இரண்டும் சாதாரணமாக நடக்ககூடிய நிகழ்வுகள் அல்ல.

ஆனால் ஜியோனிஸ்ட் தொடர்ச்சியாக லெபனான் மற்றும் சிரியாவின் வான் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்புகிறது. ஜியோனிஸ்ட் வழக்கமான சிரியாவின் இரசாயன ஆயுதத் திட்டம் அல்லது ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக நம்புவதைப் போன்ற அச்சுறுத்தல்களின் காரணமாக அந்நாட்டின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகிறது.

சிறியவை பற்றிய ஜியோனிஸ்ட்களின் பாதுகாப்புத் துறையின் மதிப்பீட்டு பார்வை மிகத் தெளிவானது. அவர்களுடைய விருப்பமெல்லாம் சிரியாவில் அசாத்யே பதவியில் நீடிக்க வேண்டும், வேறு யாராவது வந்தால் அது அவர்களுக்கு மரண அடியாக இருக்கும்.

ஆனால் அதே வேளையில் பாதிஸ்ட் ஆளுமையினால் சிரியா பலம் பொருந்திய நாடக அவர்களுக்கு விருப்பம் இல்லை அல்லது சிரியா ஈரானுடைய கட்டுபாட்டுக்குள் செல்வது அவ்வளவாக உகந்தது இல்லை.

பஷார் உல் அசாத் உம்மத்தை படுகொலை செய்த அதேவேளை, ஜியோனிஸ்டுகளை வெறுமனே அச்சுறுத்துகிறார், ஜியோனிஸ்டுகள் அவருக்கு எதிராக சிரிய அளவில் இருந்தபோதிலும் பஷார் உல் அசாதை அவமானப்படுத்துகிறது.

சவூதி அரேபியா தங்களுடைய சீர்திருத்தத்தை தொடர்கிறது

அரசின் உயர்ந்த மதக் குழுவின் மூத்த உறுப்பினரான செய்க் அப்துல்லாஹ் அல் முட்லாக், சவுதியில் பெண்கள் பொது இடங்களில் தளர்வான பர்தாக்களை அணிய வேண்டாமென கூறியுள்ளார்.

சவூதியின் முடி இளவரசர் முஹம்மது பின் சல்மான் நாட்டில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நாட்டில் பெண்கள் விசயத்திலும் தொடர்ச்சியான பல சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்த்தியுள்ளார்.

ஏனெனில் எண்ணெய் வளங்களை மட்டுமே நம்பியிருந்த ராஜாங்கம் தற்போது சீர்திருத்தத்திற்கு தயாராகி வருகிறது.. கடந்த மாதம் முதன்முறையாக பெண்கள் கால்பந்தாட்ட நிகழ்ச்சிகளை காண அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பானது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வெகு காலமாக பெண்கள் வாகனம் ஓட்ட விதித்திருந்த தடையை நீக்கிய அறிவிப்பிற்கு அடுத்தக்கட்ட அறிவிப்பாகும். நாட்டின் தீவிர பழைமைவாத சமுதாய ஒழுங்கிற்கு ஒரு பெரும் மாற்றமானது.

மேற்குலக அறக்கட்டளை மற்றொரு செக்ஸ் புகாரில் சிக்கியுள்ளது

விபச்சாரத்தில் ஈடுபடும் நாடுகளில் பாலியல் துஷ்பிரயோகத்தை மூடிமறைக்கும் நாடுகளையும் பிரிட்டிஷ் சார்ந்த உலகலாவிய ஒரு தொண்டு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

அவர்களின் இரகசிய அறிக்கை ஆக்ஸ்பாமின் இளவயது ஊழியர்களை விபச்சாரத்தில் பயன்படுத்தியதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

ஆக்ஸ்பாமின் ஹைட்டி நாட்டின் இயக்குனராக பணியாற்றிய ரோமாண்ட் வான் ஹவுவேர்மெய்ன், விபச்சாரத்தில் ஈடுப்பட்டதாலும், உழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அவரே ஒப்புக் கொண்டபோதும், அவர் கண்ணியமான முறையில் ராஜினாமா செய்ய அனுமதிக்கப்பட்டார்.
உலகின் அல்லது அரசின் மறைமுக ஆதரவுடன், பொது வெளியில் தெரியாமல் பார்வை மற்றும் செய்தி ஊடகத்திலும் வெளிவராமல், அனைத்து வகையான அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. ஆகியவை உலகின் மிகவும் அருவருப்பான குற்றங்களை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக செய்துள்ளன.

கொசோவோவில், ஐ.நா. தொழிலாளர்களின் பொழுதுபோக்குக்காக சிறுமியர் மற்றும் சிறுவர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். 2014 ஆம் ஆண்டில், மிகவும் வறுமையில் வாடும் மத்திய ஆபிரிக்க குடியரசில் பிரெஞ்சு படைகள் ஒரு வேலை உணவுக்காக கற்பழிப்பு திட்டத்தை வகுத்துள்ளனர். கடந்த வருடம் ஒரு செய்தி நிறுவன விசாரணையில் 100 இலங்கை ஐ.நா. அமைதிகாப்பாளர்கள் (அமைதி துதுவர்கள்) ஹெய்டியில் கடந்த ஒரு தசாப்தமாக குழந்தைகளை பாலியல் உறவுக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

Comments are closed.