சமீப பதிவுகள்

செய்தி பார்வை 16.02.2018

எதிர்ப்புகளுக்கிடையே மேக்ரான் பிரான்சில் இஸ்லாமிய சீர்திருத்தத்தை மேற்கொண்டு வர திட்டமிட்டுள்ளார்

காதலர் தினம் ஒரு சாதகமான சமூக நிகழ்வு – சவூதி மதத்தலைவர்

அமைதி(பேச்சு வார்த்தை)க்கு தலிபான்களுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறதா?

எதிர்ப்புகளுக்கிடையே மேக்ரான் பிரான்சில் இஸ்லாமிய சீர்திருத்தத்தை மேற்கொண்டு வர திட்டமிட்டுள்ளார்

பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இஸ்லாமிய கட்டமைப்பை தேசிய ஒற்றுமையைக் காப்பாற்றுவதற்காகவும், “லாயிட்சே” யின் உண்மையான அர்த்தத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தாம் பணியாற்றி வருவதாக அறிவித்துள்ளார் பிரான்சின் உண்மையான அடையாளம் மதச்சார்பின்மை ஆகும் அதாவது – மனித வாழ்விலிருந்து மதத்தை பிரிப்பது (சமய மற்றும் குடிமை வாழ்க்கை முறையைப் பிரிப்பது) இது லாயிட் என்றழைக்கப்படும் மூன்று முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவை மனசாட்சி சுதந்திரம், மதத்திலிருந்து அரசை பிரிப்பது, எந்தவொரு நம்பிக்கையையும் கடைப்பிடிக்க சுதந்திரம்.

ஆனால் பிரான்சில் இஸ்லாமிற்கு சீர்திருத்தம் செய்வதற்கான பிரெஞ்சு ஜனாதிபதியின் திட்டமானது, 1905 சட்டத்தையும் மதத்தையும், அரசையும் பிரிக்கும் அடிப்படை சித்தாந்தமான மதசார்பின்மை தத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என பிரான்சின் தீவிர இடது கட்சியின்(de Gauche (PG) ) செய்தித் தொடர்பாளர் திங்கட்கிழமை தெரிவித்தார்.

அரபு நாட்டினரின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும், தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கும், சிறந்த இஸ்லாமை விளக்கி, தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கும், பிரான்சில் இஸ்லாமியம் சீர்திருத்தப் பணிபுரிந்து வருவதாக பிரான்சின் வார பத்திரிகையான Le Journal du Dimanche பத்திரிகைக்கு அவர்  கூறினார்: “லாயிட்சேயின் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன மற்றும் அதன் குறிக்கோள் என்ன என்பதை மீண்டும் அலசி ஆராய்வதே என் குறிக்கோள்.” என்றார்.

1905ல் நடைமுறைப்படுத்தப்பட்ட லாயிட்சே சட்டமுறைப்படி, பிரஞ்சு குடியரசானது “எந்த வகையிலும் ஒரு மதத்திற்கு ஆதரவாகவோ அதனை அங்கீகரிக்கவோ கூடாது எனவும், அதற்கு எந்தவிதமான மானியம் அளிக்ககூடாது” என்று வெளிப்படையாக கூறுகிறது.

பிரெஞ்சு மக்களது மத விவகாரங்களில் தலையிடுவதன் மூலம் மத்திய அரசாங்கத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளை பாதிக்கும் என்று வாதிட்ட இடதுசாரிக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் திரு மக்ரோனின் சீர்திருத்த திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

PG செய்தித் தொடர்பாளர் Benoît Schenckenburger ஒரு அறிக்கையில் கூறியது: “பிரான்சில் இஸ்லாத்தை மறுசீரமைப்பதற்கான ஜனாதிபதியின் திட்டங்கள், அரசிலிருந்து மதத்தை பிரிக்கும் 1905 சட்டத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன.

“இஸ்லாமிய அமைப்புக்களின் விவகாரங்களில் அரசு தலையிடாது, இமாம்களின் பயிற்சிக்கும் பிரான்சில் இஸ்லாத்திற்கு எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது என்பதற்கும் அரசு வரையறையை கொண்டிருக்க முடியாது.

பிரான்சில் இஸ்லாத்தை மறுசீரமைப்பதற்கான ஜனாதிபதியின் திட்டங்கள், அரசிலிருந்து மதத்தை பிரிக்கும் அடிப்படை சித்தாந்தமான மதசார்பின்மை யிலிருந்து அதாவது எந்த மதத்தையும் சாராமல் இருக்கும் நடுநிலையிலிருந்து தடம் மாறி மாதம் சார்ந்த நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்படும்.

பிரான்சின் வலதுசாரிகளான குடியரசு கட்சி, ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய சீர்திருத்தத்தை வரவேற்றுள்ளது. அதன் தலைவர் நதினே மோரானோ, மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர் லாரன்ட் வௌகுயீஸ் ஆகியோர் திங்களன்று யுரோப்-1 ரேடியோவில் நமது நாட்டிற்கு இஸ்லாத்தினால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆம் உண்மையாகவே இஸ்லாத்தினால் நாட்டில் பிரச்சனைகள் உருவாகியுள்ளன.

இஸ்லாமிய பழமைவாதிகளினால் இஸ்லாத்திற்கும் நமக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. அந்த பழமைவாத சிந்தனைகளை அடியோடு வீழ்த்த வேண்டும். அதனால் தற்போது ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய சீர்திருத்தம் என்பது தவிர்க்க முடியாத ஓன்று.
(ஆதாரம் : டெய்லி எக்ஸ்பிரஸ்)

குருசேடர் காலத்திலிருந்து இன்று வரை மேற்குலகம் இஸ்லாத்தை சீர்குலைக்க முயர்ச்சிக்கிறது. ஆனால் இஸ்லாம் அவர்கள் விருப்பத்திற்கு மாற்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. அவர்கள் நாட்டிலும் மற்ற நாடுகளிலும் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கண்டு அவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

காதலர் தினம் ஒரு சாதகமான சமூக நிகழ்வு – சவூதி மதத்தலைவர்

புதனன்று ஒரு பிரபல சவுதி மதத்தை காதலர் தினம் ஒரு “சாதகமான சமூக நிகழ்வு” என்று அழைத்ததோடு அதனை மதத்துடன் இணைத்துப் பார்க்க தேவையில்லை என்றார்.

புனித நகரான மக்காவின் மதக் காவல்துறையின் முன்னாள் தலைமைச் செயலரான அஹ்மத் கசீம் அல் கம்டி, 32 வயதான இளவரசர் முகமது பின் சல்மான் பழமைவாத பாரம்பரியத்திற்கு எதிராக முற்போக்கான தாராளமயமாக்கல் கொள்கையும் தொடர்ந்து அறிமுகப் படுத்தி நடைமுறைப் படுத்தி வருகின்றார்..
மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், “இது ஒரு சாதகமான சமூக நிகழ்வு ஆகும், இது ஷரியா சட்டத்திற்கு எதிரானது அல்ல,” என்று கம்மி சவுதிக்கு சொந்தமான அல் அரேபியா தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

மற்றவர்களுடன் சிவப்பு ரோஜாக்களை பரிமாற்றம் செய்து அன்பை பரிமாறிக் கொள்ளுதல், அமைதி கொண்ட மக்களுக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக அல்லது முஸ்லீம்களுடனான போரில் ஈடுபடாத வரை காதலர் தினம் உட்பட “மேற்கத்திய தேசிய மற்றும் சமூக விடுமுறை நாட்களில் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்ளுதல் ஒரு மரியாதை நிமித்தாமான சம்பிரதாயமிக்க ஒரு செயலாகும்.

சமீபத்திய ஆண்டுகளில், சவுதி அரேபியா தொடர்ச்சியான பல சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. இளவரசர் சாலமன் நவீன காலத்திற்கு ஏற்றவாறு இஸ்லாமை பின்பற்றுவதற்கு தொடர்ச்சியான மாற்றங்களை செய்து வருவதாக கூறியுள்ளார். சவூதி அரேபியாவின் இந்த வரலாற்று ரீதியான மறுமலர்ச்சிக்கு ஏற்றவாறு மதகுருமார்களின் அரசியல் பாத்திரத்தை(ஆளுமைகளை அல்லது பார்வைகளை) மேலும் முடுக்கிவிட்டுள்ளார்.

புதன்கிழமை ஜித்தா நகரங்களில் சிவப்பு ரோஜாக்கள் மற்றும் காதலர் தின நினைவுகளுக்கான மலர் விற்பனை வெளிப்படையாக விற்றதன் மூலம் இதை அறியலாம் இளவரசர் முஹம்மது பின் சல்மான் வெளிப்படையாக மேற்குலகத்தின் சிந்தனைகளையும் அவர்களது சித்தாந்தங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இஸ்லாத்திற்கு எதிரான மதசார்பின்மையை நோக்கி திரும்பியுள்ளார். ஆனால் உலமாக்களும் வெட்கமின்றி வெளிப்படையாக மேற்குலகத்தின் சிந்தனைகளையும் அவர்களது சித்தாந்தங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் துளியும் வெட்கமோ குட்சமோ படவில்லை.

அமைதி (பேச்சு வார்த்தை)க்கு தலிபான்களுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறதா?

ஆப்கானிஸ்தானில் மிருகத்தனமான, நீடித்த போரை இரத்தக்களரியை முடிவுக்கு கொண்டுவர தாலிபன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண ஒரு கடிதத்தை வெளியிட்டது.

பாகிஸ்தானின் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதும் போராளிக் குழுக்கள் மீது அமெரிக்க தொடுத்து வரும் வான் தாக்குதல்களுக்கு இது ஒரு பிரதிபலிப்பாகும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஒரு அசாதாரணமான நடவடிக்கையில், ஆப்கானிய தலிபான் புதன்கிழமை நேரடியாக “அமெரிக்க மக்களுக்கு” வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டது, அதில் அமெரிக்க மக்கள் தங்கள் அரசாங்கத்திற்கு மோதலுக்கு உட்பட்ட ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

“அமெரிக்க மக்களுக்கு, தற்சார்பு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் அதிகாரிகள், சமாதானத்தை விரும்பும் காங்கிரஸ் உறுப்பினர்கள்” ஆகியோருக்கு என்று கடிதம் அனுப்பப்பட்டது.
உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் வெளித்தோற்றத்தில் முடிவற்ற போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக போராளி குழுக்கள் தெரிவித்துள்ளது.

ஆனால் ஜிகாதிஸ்ட்டுகள் “மிரட்டலுக்கு அடிபணிய முடியாது” என்றும், சமாதானத்தைத் தேட விரும்பும் விருப்பம் உள்ளவர்களை அவர்கள் புறக்கணிப்பதாகவும் அல்லது சண்டையிடுவதில் அவர்கள் உறுதியாக உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

அந்த கடிதத்தில் தலிபான் மீண்டும் ஆயுதமேந்திய பிரச்சாரத்தை தொடர்ந்து “ஆப்கானிய நாட்டினரின் பிரதிநிதிகளாக” தங்களை முன்வைத்து, உழலில் திளைத்து சட்டவிரோதமாக காபூலில் “அமெரிக்காவால் வழிய திணிக்கப்பட்ட அமெரிக்க கைப்பாவையான அரசாங்கம்” என்று மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் தங்கள் கூற்றை நியாயப்படுத்துகிறது.

ஃபைஸ் முகம்மது ஸலாண்ட், காபூல் பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் தலிபான் நிபுணர் ஒருவர் கூறும்போது, “இந்த கடிதம் தலிபான் ஒரு தனிப்பட்ட நடவடிக்கை ஆகும், இது குழுவானது சமாதான பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும், அமெரிக்காவின் மக்களை சமாதானத்திற்கான தங்களது அரசாங்கத்தை தூண்டுமாறு அழைப்பு விடுத்துள்ளது தலிபான் என்றார்.ஆனால் ஆப்கானிய அரசாங்கம் தலிபான் இந்த முயற்சியை நிராகரித்தது,

டேவிட் வால்ஷ் அளித்த பெட்டியில் “ஆப்கானிஸ்தானில் போரைத் தொடர காரணம் அவைதான்(தலிபான்கள்).” ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் தாலிபன் உண்மையான நம்பிக்கை வைத்திருந்தால், அவர்கள் முதலில் சண்டைக்கு முடிவு கட்ட வேண்டும், ஹெஸ்ப் இ இஸ்லாமி கட்சியின் [ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புகளில்] இணைந்து பணியாற்ற வேண்டும் “என்று ஆப்கானிய ஜனாதிபதி அஷ்ரஃப் கானி சார்பாக அதன் செய்தித் தொடர்பாளர் ஷா ஹுசைன் முர்டாசிவி கூறினார்.

இதுவரை ஆப்கானிய போர்க்குணமிக்க அமைப்பான ஹெஸ்-இ-இஸ்லாமிதான் ஆயுதங்கள் தாங்கி போராடியதை நிறுத்தி தற்போது பிரதான அரசியலில் இணைந்துள்ளது.

தலிபான்களின் சமீபத்திய நடவடிக்கையை காணும்போது, தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா தனது வான் வழி தாக்குதல்களை அதிகப் படுத்தியுள்ளதும், அவர்களை அழிக்க பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதற்கு எதிர்வினையாகவும் பார்க்கப் படுகிறது.

காபூலை தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் யோனஸ் பாகுர், டஐட்ஷே வில்லி பத்திரிக்கையிடம் “தலிபான்கள் பாகிஸ்தானின் அழுத்தத்தை குறைத்து, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வான் தாக்குதல்களுக்கு எதிராக போராதுவதற்கு தேவையான நேரத்தை இதன்மூலம் பெற்றுக் கொள்கிறது. என்றார்.

மேலும் அவர், இந்த கடிதத்தின் அடிப்படையில் வாஷிங்டன்(அமெரிக்கா) அதன் கொள்கையை மாற்றிவிட போவதில்லை. “போராட்ட களத்தில் தலிபான்களுக்கு சாதகமான சுழல் வந்தால் மட்டுமே, அமெரிக்கா மட்டுமே தாலிபனுடன் பேசுவதாக நான் கருதுகிறேன்.” என்றார்.

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதன் காரணமாக தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. எவ்வாறிருந்தாலும் தலிபான்களை அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் அமெரிக்கா அதன் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் உதவியை நாடியது மூலம் பாகிஸ்தானின் பலமும் அமெரிக்காவின் பலவீனமும் மிகத் தெளிவாக தெரிகிறது.

பாகிஸ்தான், அமெரிக்கா விற்கு அடிமையாக இருப்பதை விட இஸ்லாமிற்கு உண்மையாக இருக்கலாம். அதன்மூலம் அவர்கள் தலிபான்களுடன் கைகோர்த்து அவர்களை வலுப் படுத்தி அமெரிக்காவை ஓட ஓட விரட்டியடிக்கலாம். இதன்மூலம் அமெரிக்கா இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதை முடிவிற்கு கொண்டு வரலாம்

Comments are closed.