சமீப பதிவுகள்

அமெரிக்க இருப்பானது இரத்தம் வடியும் இரணத்துக்கு சமமானது

அமெரிக்காவை இந்த பிராந்தியத்திலிருந்து வெறியேற்றுவது என்பது இந்த பிராந்தியத்துக்கான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுவதற்கு தொடர்புடையதாக இருக்கின்றது

பாகிஸ்தானிய தலைமை இராணுவ தளபதி கமர் பாஜ்வா காபூலுக்கான தனது சமீபத்திய விஜயத்தின் போது இராணுவ தளபதிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இந்த பிராந்தியத்திற்கான அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஆப்கானிஸ்தானை கடந்தே செல்கிறது என்று கூறினார். தளபதி பாஜ்வா முழுமையற்ற வாக்கியத்தை கூறியுள்ளார் ஏனெனில் இந்த பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கு ஆப்கானிஸ்தானில் இரணமாக இருக்கும் அமெரிக்காவை வெளியேற்றுவது அவசியம் என்பது குறித்து அதில் அவர் குறிப்பிடவில்லை.

இந்த பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவின் இருப்பை அகற்றாதவரை அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நம்மால் கற்பனையில் தான் பார்க்க முடியும் என்றும் யதார்த்தத்தில் அதை அடைய முடியாது என்றும் தற்போது பரவலாக கருதப்படுகிறது. உலகளாவிய அளவில் அமெரிக்காவின் தலையீடு எங்கெல்லாம் இருக்கின்றதோ அதன் இருப்பானது அப்பகுதியில் அல்லது அந்த நாட்டில் பேரழிவையும் நிலையற்ற தன்மையையும் தான் ஏற்படுத்தியுள்ளது. இது வரலாற்று ரீதியில் மறுக்கமுடியாத உண்மையாக இருக்கின்றது இந்த யதார்த்தத்தை பாகிஸ்தானிய முஸ்லிம்களும் அனுபவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுடைய மண்ணிலிருந்து வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தானிய அரசியல் மற்றும் இராணுவ தலைமையானது அமெரிக்காவிடம் புகார் அளித்து வரும் இவ்விஷயமானது இந்த பகுதியில் அமெரிக்கா காலடி பதித்ததற்கு முன் ஒருபோதும் நடந்ததில்லை அல்லவா? பாகிஸ்தானுடைய எதிரியான இந்தியாவுக்கு பாகிஸ்தானின் நலனுக்கு எதிராக அமையும் விதத்தில் ஆப்கானிஸ்தானின் வாசலை திறந்து விட்டது குறித்து பாகிஸ்தானிய அரசியல் மற்றும் இராணுவ தலைமையானது அமெரிக்காவிடம் புகார் அளித்து வருகிறது அல்லவா? ஆப்கானிஸ்தானுடைய மண்ணை பயன்படுத்தி இந்தியா பாகிஸ்தானுக்குள் நாசம் ஏற்படுத்தும் செயல்களை செய்து வருவதாக பாகிஸ்தானிய அரசியல் மற்றும் இராணுவ தலைமையானது அமெரிக்காவிடம் புகார் அளித்து வருகிறது அல்லவா? ஆனால் நமது ஆட்சியாளர்களிடம் இருந்து வரும் இவ்வனைத்து புகார்களும் அமெரிக்காவின் இருப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக பழங்குடி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆப்கானிய தாலிபான்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேடையில் அமர்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், நமது இராணுவ தளபதியோ அவமானகரமான அளவிலான தோல்வியை அடைவதிலிருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு மாநாட்டின் தலைவராக அமர்ந்துள்ளார். இதுபோன்ற செயல்கள் நமது பகுதிக்கு அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ளற்படுத்தாது மாறாக இரண்டு தசாப்தங்களாக ஏற்கனவே பரவியிருக்கும் பேரழிவை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

பாகிஸ்தானிய அரசியல் மற்றும் இராணுவ தலைமையானது நமது பகுதியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதும் மாறாக இரணத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் இருப்பை பாதுகாக்க தான் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. ஆகவே இந்த பகுதியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த வேண்டும் என்றால் தற்போதுள்ள அரசியல் மற்றும் இராணுவ தலைமையை வேரறுத்து நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை கொண்டு மாற்றியமைப்பது அவசியமாகும் ஏனெனில் கிலாஃபத் என்பது அமெரிக்க குஃப்பாரின் கட்டளைகளுக்கு அடிபணியும் அடிமையாக இருக்காது மாறாக அது அல்லாஹ் (சுபு) வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் சட்டங்களை நடைமுறை படுத்தக்கூடியதாக இருக்கும்.

(وَقَاتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ)

“அன்றி, (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள்.
(அல்குர்ஆன் : 2:193)

Comments are closed.