சமீப பதிவுகள்

கிழக்கு கெளத்தாவில் உள்ள குழந்தைகள் அழிக்கப்பட்டு வருகின்றனர்! அவர்களுடைய உயிர்களை பாதுகாப்பது யார்?

கடந்த 5 நாட்களில் கிழக்கு கெளத்தாவில் கொடூரமான சிரிய மற்றும் ரஷ்ய படைகள் மூர்க்கத்தனமான தாக்குதல்கள் நடத்தியதன் காரணமாக 150 குழந்தைகள் உட்பட 400 நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்தை மையமாக கொண்ட சிரியாவில் மனித உரிமைகளுக்கான ஆய்வுமையம் பிப்ரவரி 22ம் தேதி அன்று அறிவித்தது, அவர்கள் பாகுபாடின்றி வீடுகள், கடைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகள் என இவ்விடங்களில் இருக்கும் வெகுஜனங்களை குறிவைத்து இத்தாக்குதல்களை நடத்தியதன் மூலம் குழந்தைகளை உயிரோடு கட்டிடங்களின் இடிபாடுகளில் புதைக்கப்படும் நிலைக்கு தள்ளினர். குழந்தைகள் குகைகளிலும், பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்ட குழிகளிலும் அல்லது அவர்களுடைய வீடுகளிலுள்ள அடித்தளங்களிலும் ‘மரணிப்பதற்கான அவர்களுடைய தருணத்திற்காக காத்திருந்து’ தஞ்சம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் கடுமையான குளிரின் காரணமாக மரணத்தை தழுவும் நிலையிலுள்ள முதிர்ச்சியடையாத மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தைகளை பாதாள அறைகளில் இன்குபேட்டரில் வைத்து கவனித்து வருகின்றனர். ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் இங்கு நிலவும் சூழ்நிலையை “பூமியில் இருக்கும் நரகம்” என விவரித்துள்ளார். அதோடு சிரிய அரசு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் இந்த கொடூரமான முற்றுகையினால் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் தட்டுப்பாடு கடுமையான அளவில் ஏற்பட்டுள்ளது, அது பெருமளவிலான மக்கள் பட்டினியாக இருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக அது குழந்தைகளை மிகவும் பாதித்துள்ளது. ஐ.நா வெளியிட்டுள்ள செய்தியின் படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 12% கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருக்கின்றனர். சூழ்நிலை எந்தளவிற்கு மோசமாக இருக்கின்றது என்றால் அல்லாஹ் தங்களுடைய குழந்தைகளின் உயிரை எடுத்துவிட வேண்டும் அல்லது தங்களது குழந்தைகளுக்கு மரணம் ஏற்படும் போது (இத்தொடர் குண்டை மழை பொழிவின் காரணமாக அது தவிர்க்கமுடியாத என அவர்கள் கருதுகிறார்கள்) வயிறு நிறைந்துள்ள நிலையில் அவர்கள் இறக்க வேண்டும் என்பது மரணித்தை தழுவும் தாய்மார்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

அழிவை எதிர்நோக்கும் கிழக்கு கெளத்தாவின் பட்டினியோடு இருக்கும் குழந்தைகளின் தலைகளின் மீது குண்டு மழைகள் பொழிவதை நாம் பார்க்கின்றோம். கொல்லப்பட்ட குழந்தைகள் இரத்தக்கறை படிந்த கஃபன் துணிகளில் சுற்றப்பட்டு வரிசை வரிசையாக வைக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். இறக்கும் தறுவாயில் உள்ள தங்களுடைய பிஞ்சு குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக ஒரு கவளை உணவுக்காக ஏங்கி தவித்து கண்ணீர் சிந்தும் தாய்மார்களை நாம் பார்க்கின்றோம். மேலும் இந்த புனித பூமி முற்றிலும் அழிக்கப்படுவதையும் அலெப்போவில் நடைபெற்றவதை விட மோசமான அளவில் அசாதுடைய கொலைகாரர்களின் தரைப்படைத் தாக்குதலுக்கு உட்பட்டு நமது சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். இவ்வாறு இந்த கொடூரங்கள் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச சமூகமும், ஐ.நா வும், முஸ்லிம் உலகிலுள்ள அரசுகளும் இதை கண்டும் காணாமலும் இந்த இரத்தக்களரியை பொருட்படுத்தாமல் இருக்கின்றனர், மேலும் குழந்தைகளின் கொலைகாரர்களானஅசாதுக்கும் அவனுடைய குற்றவாளி கூட்டணிகளுக்கும் தண்டனைக்கு ஆளாக்கப்படாதவர்களாக தொடர்ந்து கொல்வதற்கு உரிமத்தை வழங்கி வருகின்றன. அவர்கள் மனித உயிர், மனித உரிமை, மற்றும் குழந்தைகளின் உரிமையை பாதுகாப்பது குறித்து அவர்கள் மேற்கொண்டு வரும் அனைத்து மாநாடுகளையும் கேலிக்கூற்றாக ஆக்கியுள்ளனர்! தெளிவாகத் தெரிகிறது, இந்த ‘வாழும் நரகமும்’ இவர்களுடைய மனசாட்சியை உலுக்குவதற்கு போதுமானதாக இருக்கவில்லை என்று! அவர்களை பொறுத்தவரை, கெளத்தாவின் குழந்தைகளிலிருந்து உருவான இந்த இரத்த வெள்ளமானது இந்த பகுதியில் இரத்தக்கறை படிந்த அவர்களுடைய அரசியல் நலன்களுக்கான விலையாக இருக்கின்றது! நிச்சயமாக, அவர்களுடைய தன்னலமிக்க நோக்கங்களை பாதுகாப்பதற்காக வேண்டி இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டுகளிப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் விருப்பத்திற்கு அளவே இல்லை என்பதாக தெரிகிறது.

நிச்சயமாக கெளத்தாவுடைய குழந்தைகளை மரணிக்கச் செய்யும் அளவுக்கு அவர்களை கைவிட்டுவிட்டு தங்களுடைய சுயநலத்திற்காக சேவை புரிந்துவரும் மனசாட்சியில்லாத மேற்கத்திய அரசுகள், ஐ.நா அல்லது முஸ்லிம் உலகிலுள்ள அரசுகள் சிரியாவிலுள்ள உம்மத்தை பாதுகாக்கும் என்று சிறிதளவு நம்பிக்கையை கூட கொள்ளக்கூடாது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரங்கள் தேவையில்லை, மேலும் அவர்களுடைய பெயரளவிலான அமைதிக்கான முயற்சிகள், தலையீடுகள் மற்றும் அவர்கள் முன்மொழிந்த தீர்வுகள் கொலைகார அசாதிற்கு முஸ்லிம்களை முடமாக்குவதற்கும், கற்பழிப்பதற்கும் கொலை செய்வதற்கும் நேரத்தை வழங்கியது. கடந்த ஆண்டு ஆஸ்தானா அமைதி மாநாட்டில் “தீவிரத்தை குறைக்க வேண்டிய மண்டலம்” என வகைப்படுத்தப்பட்ட கிழக்கு கெளத்தாவின் கொடூரங்களை நாம் நமது திரைகளில் காண்பது என்னவென்றால், ரஷ்யா, துருக்கி, ஈரான் மற்றும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் ‘அமைதி முயற்சி’ என்று கூறப்பட்டதின் உண்மை முகமாகும்!

கெளத்தாவில் நாம் காண்கின்ற இதயத்தை உருகவைக்கும் அட்டூழியங்களின் வெளிச்சத்தில் ஹிஸ்புத்தஹ்ரீரின் ஊடக அலுவலகத்தின் மகளிர் பிரிவு “கெளத்தாவின் குழந்தைகளை பாதுகாப்பது யார்?” (who will defend the children of Ghouta?) எனும் தலைப்பின் கீழ் இணையத்தள பிரச்சாரம் ஒன்றை துவக்கியுள்ளோம். அதன்மூலம் உம்மத்தை குறிப்பாக முஸ்லிம் இராணுவத்திலுள்ள அதிகார வர்க்கத்தினரிடத்தில் உடனடியாக நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறோம், ஏனெனில் இந்த இஸ்லாமிய தலைமைத்துவம் மட்டுமே மனித உயிர் கொண்டுள்ள புனிதத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டிருக்கும் மேலும் அது நம்பிக்கையாளர்களின் கேடயமாகவும், இந்த நரகமாக இருக்கும் வாழ்வுக்கும் அதேவேளையில் உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் மீது நடைமுறைப்படுத்தப்படும் படுகொலைகள் மற்றும் அடக்குமறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

﴿وَمَا لَكُمْ لاَ تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاء وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَـذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا﴾

“பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) “எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்.(அல்குர்ஆன் : 4:75)

Comments are closed.