சமீப பதிவுகள்

54 வது மியூனிச் பாதுகாப்பு மாநாட்டு உரை

இல்லை, தளபதி பாஜ்வா கிலாஃபத் என்பது அதற்காக ஏங்கி கிடக்கும் ஒரு விஷயம் கிடையாது! அதுவொரு கடமையாகும் அதன் மீளுருவாக்கம் குறித்த நற்செய்தியை இறுதித்தூதர் (ஸல்) வழங்கியுள்ளார்கள்

பிப்ரவரி 17, 2018 அன்று நடைபெற்ற 54வது மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில், தளபதி பாஜ்வா “கிலாஃபத் எனும் கருத்தானது ஏக்கத்தின் வெளிப்பாடே அன்றி வேறெதுவும் இல்லை” எனக் கூறினார், அதனோடு “பாகிஸ்தானில், கிலாஃபத் எனும் கருத்து எவ்விதமான காலடித்தடத்தையும் கொண்டிருக்கவில்லை” எனவும் கூறினார். இவ்வாறு தசாப்தங்களாக உம்மத்தின் மீது போர் தொடுத்து வரும் பெரும் காலனியாதிக்க சக்திகள் நடத்திய மாநாட்டில் உலகின் மாபெரும் முஸ்லிம் இராணுவ தளபதி கிலாஃபத் எனும் கருத்தை வலுவிழக்கச் செய்துள்ளார்.

நிச்சயமாக, கிலாஃபத் என்பது அது வரும் வரை வெறுமனே ஏங்கிக்கிடப்பது கிடையாது; அதை ஏற்படுத்துவது முஸ்லிம்கள் மீதுள்ள கடமையாகும், அதை நிராகரிப்பது என்பது மரணத்திலேயே மிகவும் மோசமான நிலையான இஸ்லாம் அல்லாத நிலையில் மரணிப்பது போன்றதாக இருக்கின்றது.

ரசூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள்,

«مَنْ مَاتَ وَلَيْسَ فِي عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً»“

பைஆ [சத்தியப்பிரமாணம்] செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜாஹிலியாவில் மரணமடைந்தவரை போன்றவராவார்.” (முஸ்லிம்).

ஒவ்வொரு காலகட்டத்திலும் கிலாஃபத்தின் கீழ் வாழ்வது நம்மீது கடமையாக இருக்கின்றது அது குறித்து இறுதித்தூதர் (ஸல்) கூறினார்கள்

«وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَسَتَكُونُ خُلَفَاءُ فتَكْثُرُ»قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ فَالْأَوَّلِ وَأَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ»

“எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. கலீஃபாக்கள் உருவாகுவார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! [அது தொடர்பாக] எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர்களிடத்தில் ஒருவர் பின்னர் ஒருவருக்காக உங்களுடைய பைஅத்தை [சத்தியப்பிரமாணம்] நிறைவேற்றுங்கள்.அவர்களுக்குரிய கடமையை அவர்களுக்குச் செலுத்தி விடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் (சுபு) அவர்களுடைய பொறுப்பு குறித்து அவர்களிடம் விசாரணை செய்வான் என்று பதில் கூறினார்கள். (புஹாரி)

மேலும் நபிமார்களின் தலைவர் (ஸல்) அடக்குமுறை ஆட்சிக்கு பிறகு அதன் மீண்டும் வருவது குறித்த நற்செய்தியை வழங்கியுள்ளார்கள், அது குறித்து அவர் கூறினார்கள்,

«ثُمّ تكونُ مُلْكاً جَبريَّةً، فتكونُ ما شاءَ الله أنْ تكون، ثُمّ يرفعُها إذا شاءَ أنْ يرفعَها. ثُمّ تكونُ خِلافةً على مِنهاج النُّبُوَّة، ثم سكت»

“பின்னர் அடக்குமறையை ஆட்சி நடைபெறும், அல்லாஹ் எதுவரை நாடியிருக்கிறானோ அதுவரையிலும் அது நீடித்திருக்கும். பிறகு அல்லாஹ் (சுபு) அதை உயர்த்த நாடும்போது உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழிமுறையிலான கிலாஃபத்தின் ஆட்சி ஏற்படும்.” (அஹமது)

மேலும் நிச்சயமாக கிலாஃபத்துக்கான கோரிக்கையானது காலடித்தடத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை அது தற்போது இராணுவ வீரர்கள் உட்பட முஸ்லிம்களுடைய பிரதானமான கோரிக்கையாக இருக்கின்றது. இதன் காரணமாகவே பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் அதன் பெயரை பயன்படுத்தி உரையாற்றும் நீர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர், அதேவேளையில் அவர்களுடைய சிலுவையுத்த முதலாளிகளை பல நூற்றாண்டுகளாக பயமுறுத்தி வந்தது போல் மீண்டும் பயமுறுத்த வராது என்று உறுதிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே தான் பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் கிலாஃபத்திற்காக வாதாடுபவர்கள் மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளுதல், அடக்குமுறையை கையாளுதல், சிறைபிடித்தல், சித்திரவதை செய்தல் மற்றும் கடத்துவது போன்ற செயல்முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹிஸ்புத்தஹ்ரீரின் பாகிஸ்தானிய விலாயத்தின் வாயிலாக அனைத்து முஸ்லிம்களையும் அதனுடன் இணைந்து கிலாஃபத்தின் கடமையை நிறைவேற்ற பாடுபட்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். மேலும் முஸ்லிம் நிலப்பரப்புகளில் சத்தியத்தின் மார்க்கத்தை மீண்டும் நிலைநாட்டிட இராணுவ படையிலுள்ள அதிகாரிகளிடத்தில் எங்களுக்கு உங்களுடைய நுஸ்ராவை (ஆதரவை) உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Comments are closed.