சமீப பதிவுகள்

கெளத்தா அழிக்கப்பட்டு வருகிறது அதன் பெண்கள் ஆயுதங்களை ஏந்தியுள்ளனர்

முஸ்லிம் இராணுவங்கள் எங்கே இருக்கின்றது?!

அதிகாரப்பூர்வ ஊடக மற்றும் சமூகவலைத்தளங்கள் கிழக்கு கெளத்தாவில் உள்ள 400,000 முஸ்லிம்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது, அவர்களுடைய உடைமைகளை எரித்தது மற்றும் அவர்கள் அழிக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை வெளியிட்டன. சிரிய ஆர்வலரான ஹாதி அல்-அப்துல்லாஹ் தனது முகநூல் பக்கத்தில்: “ஷஹீது ஆனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று எண்ண முடியவில்லை என்றும் இரண்டு நாட்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் ஷஹீது ஆகியுள்ளனர்” எனவும் கூறினார்.

கருத்து

கிழக்கு கெளத்தா:  பெரும் யுத்தத்தின் பூமி என ரசூலுல்லாஹ் (ஸல்) விவரித்த பூமியாகும், மேலும் அது இந்த அரசுடைய உணவுக்கூடமாகவும், அதன் விநியோகத் தடங்களை பாதுகாக்கவும் மற்றும் போராட்டக்காரர்களின் வெடிகுண்டு தாக்குதலிலிருந்து டமாஸ்கஸின் விமானத்தளத்தை பாதுகாப்பதற்காகவும் வேண்டி பல வருடங்களாக கட்டுப்படுத்துவதற்காக முற்படும் ஒரு மூலோபாய இடமாக விளங்குகிறது. அது  யுத்தத்தின் பூமியாகும், செச்சன்யாவின் குரோஸ்னியில் சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யர்கள் நிகழ்த்தியது போன்று அதன் மக்கள் கொடூரமான முறையில் அழிக்கப்பட்டு வருகின்றனர்.

அலெப்போவின் காட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றதா?  குரோஸ்னியில் நடந்ததை போன்ற ஒன்றை மீண்டும் நடத்துவதற்கான திட்டமா இது? போன்ற தலைப்புகள் மூலம் அல் ஜசீரா நடப்பவைகளை கண்டு வியப்படைந்துள்ளது. இந்த கொடூரங்கள் உம்மத்தின் இதர உறுப்புகள் மீது நிகழ்த்தியது அதற்கு போதுமானதாக இல்லாததை போன்று இதுபோன்ற தலைப்புகளின் மூலம் அதன் மன உறுதியை குலைத்து வருகிறது, இது தோல்வியடைவதற்கு முன்னரே  திட்டவட்டமான தோல்வி அடைந்துள்ளதாக வெளிப்படுத்துகிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது!

அலெப்போ மற்றும் ஹோம்ஸ் போன்று துக்கம் வரவழைக்கும் புகைப்படங்கள் கெளத்தாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இம்முறை இந்த அரசு மற்றும் அதன் சேவகர்களின் கொடூரங்கள் இதற்கு முன்பை விட அதிகமாக இருக்கின்றது, என ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.  தீயில் கருகிய தாயின் கரு ஒன்று தாயின் தோல் கிழிந்ததால் உருக்குலைந்து கருகி  உலகத்துக்கு மரணித்த நிலையில் வந்தது. பீப்பாய் வெடிகுண்டு ஒன்று பத்து வயதைக் கூட அடையாத ஒரு குழந்தையின் நெஞ்சை துளைத்துச் சென்றது, அந்த குழந்தையின் குற்றம் என்னவென்றால் முஸ்லிமாக இருந்தது தான், இதன் மீது தான் பூமியிலுள்ள கிறுத்துவ, நெருப்பு வணங்கிகள் மற்றும் யூதர்கள் தங்களது காழ்ப்புணர்வை கொட்டி வருகிறார்கள்…

ஆனால், இவ்வனைத்து துக்ககரமான திகிலூட்டும் காட்சிக்கு மத்தியில் அஷ்-ஷாமுடைய மக்கள் மீது ரசூலுல்லாஹ் (ஸல்) கொண்டிருந்த நம்பிக்கை உண்மைபடுத்தப்பட்டு வருகிறது, அல்லாஹ்வின் ஆணைப்படி, அவர்கள் தான் ரபாத்தின் மக்கள் மற்றும் இந்த பூமியின் மிகவும் சிறப்புவாய்ந்த மற்றும் அல்லாஹ் மிகவும் நேசித்த பகுதியின் மக்களாவார்கள். இவர்கள் தான் மகத்தான யுத்தத்தின் மக்காளாவார்கள்.

கவலை படுவதற்கும் பலவீனம் அடைவதற்கும் ஒன்றுமில்லை. ஆக நாம் அவர்களை மதிக்கின்றோம் அல்லாஹ் அவர்களுடைய கணக்காளராக இருக்கின்றான். பெண்கள் ஆயுதம் ஏந்தி படையை உருவாக்கி ஆண்களுடன் இணைந்து சண்டையிட்டு வரும் காணொளிகளும் மற்றும் சற்றுமுன் தனது அன்பு மகனை பறிகொடுத்த தாய் ஒருவர் சண்டை களத்துக்கு செல்லும் காணொளிகளும் நமக்கு காணக்  கிடைத்துள்ளன.

இந்த உறுதிப்பாடானது, யதார்த்த நிலையை உண்மையாக கூறுகின்றது, அது உண்மைகளை பொய்யாக்கவில்லை மற்றும் அஷ்-ஷாமுடைய மக்களின் சக்திக்கு மீறி அவர்களுக்கு பாரங்களை சுமத்தவில்லை. ஆம், அவர்கள் திடமாக, உறுதியுடன் ஜிஹாதை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களை  மீட்காமல் அதற்கு மாறாக அந்த கொலைகாரர்களின் செயலை கண்டு  அமைதி காத்து அடிபணிந்து அம்மக்களுடைய கண்ணியத்தையும் சதையையும்  குலைக்கும் கொலைகாரரனின் கரங்களில் ஒப்படைத்து துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில் அவர்களை விட்டுவிட்ட இராணுவங்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மீது வெட்கப்பட்டு கொண்டிருக்கும் மாபெரும் உம்மத்தின் ஒரு பகுதியாகவும் இவர்கள்  இருக்கின்றனர்.

ஆயுதங்களை ஏந்தி வெளியில் வந்த பெண்கள், நாங்கள் உம்மத்தே முஹம்மதியாவின் மகள்கள், நாங்கள் முஸ்லிமான பெண்கள், உம்மத்தே இஸ்லாமியாவின் மக்கள் எங்கே முஸ்லிம்களுடைய படைகள் எங்கே?  என்று கோஷமிட்டவாறு வெளிவந்தனர்!

வேதனையால் வடித்த கண்ணீரானது அது பற்றி பேசுவதற்கு மட்டுமே முடிந்த முஸ்லிம்களின் இதயங்களை கலங்கச் செய்தது. இங்கே நாங்கள் கெளத்தாவை தீயிலிட்டதின் காரணமாகவும் மற்றும் அதை ஒப்படைத்ததன் காரணமாகவும்  வேதனையில் இருக்கன்றோம்: கெளத்தாவின் பெண்களுடன் சேர்ந்து முஸ்லிம் இராணுவத்தினரிடம் மன்றாடுகிறோம்… அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிமடுத்து அவனுடைய அடியான்களுக்கு ஆதரவளிப்பீர்களாக என்று. ஏனெனில் இதன்மூலம்  அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் கண்ணியத்தை வழங்கலாம் அவ்வாறு இல்லையெனில்  இவ்வுலகில்அவமானத்தையும் இழிவையும் மறுமையில் துன்புறுத்தும் வேதனையையும் நீங்கள் பெறுவீர்கள்:

(إِلا تَنْفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلا تَضُرُّوهُ شَيْئًا وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)

“(உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லா விட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (அன்றி, உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் : 9:39)

Comments are closed.