சமீப பதிவுகள்

செய்தி பார்வை 17.02.2018

1.கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் எந்த முன்னேற்றமும் இல்லை – பென்டகன் அறிக்கை

2.அமெரிக்க படைகள் உத்திரவாதத்திரற்கு பின், எர்டோகன் அமெரிக்கா படையின்  கூட்டுப் பணியில் ஈடுபடுவதாக ஒத்துக் கொண்டுள்ளார்

3.சவூதி அரேபியாவிற்காக பாகிஸ்தான் போர் தடவாளங்களையும், போர் விமானங்களையும், தயார்படுத்துகிறது

1.கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் எந்த முன்னேற்றமும் இல்லை – பென்டகன் அறிக்கை

அமெரிக்காவின் நீண்ட நெடிய போர் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகிறது ஆனால் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதன் முக்கிய இலக்குகளை மாற்றியமைத்த போதிலும், முழு நாட்டையும் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. பதிலாக, முக்கிய நகரங்களைப் பாதுகாப்பதாலேயே அதன் சக்தியை இழக்கத் தொடங்கியது. இந்த மோசமான நிலைமையை அமெரிக்காவால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பென்டகன் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிகக் கவனமாக தனது அறிக்கையில்  தற்போதைய நிலைப்  பற்றி கூறியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட்டின் படி:

பென்டகன் கண்காணிப்புக் குழு மற்றும் ஆலோசனை குழு வெள்ளியன்று,  கடந்த ஆண்டு அமெரிக்க உயர் அதிகாரிகள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு சக்திகளுக்கு ஆதரவாக  சாதகமான சுழல் இருந்ததாகவும் சில மாதங்களுக்கு பிறகு டிரம்ப் நிர்வாகம் புதிய திட்டத்ததை  பின்பற்றுவதாகவும் கூறியுள்ளனர்.

தலிபான் போராளிகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 80 சதவீத மக்களை அரசாங்க கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கான ஆப்கானிய அதிகாரிகளின் இலக்கு 2017 ல் “குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடையவில்லை” என்று உள்துறை அமைச்சகத்தின் இன்ஸ்பெக்டர் ஜென்ட்ரல் கடந்த வெள்ளியன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஆப்கானிஸ்தானின் தலைமை அமெரிக்க தளபதியான ஜான் டபிள்யு நிக்கல்சன் ஜூனியர் மற்றும் பிற உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க மற்றும் அதன் அதரவு  துருப்புக்கள் தலிபானுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது வேகத்தை அதிகரித்தது. இதனால் தலிபான்களை  கட்டுக்குள் கொண்டுவர முயன்றது. அந்த முக்கியமான தருணத்தில், டிரம்ப் நிர்வாகம் சில மாற்றங்களை கடந்த கோடைகாலத்தில் அறிவித்தது.  புதிய திட்டத்தை அறிவித்து அதன்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இன்ஸ்பெக்டர் ஜென்ட்ரல், இருக்கின்ற தகவல்களையும் கள நிலவரத்தையும் வைத்து காணும்போது மிக விரைவாக இந்த புதிய உத்தி தலிபான்கள் மற்றும் பிற போராட்ட குழுக்களுக்கு எதிராக போராடும் அமெரிக்காவின் முடிவை தெரிவித்துவிடும் என்றார். மேலும் அவர் அறிக்கையின் துவக்கத்தில் கடந்த நான்கு மாதத்தில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுபட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையிலும், தலிபான்கள் கட்டுபட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையிலும் எந்த வித மாறுபடும் ஏற்படவில்லை அதாவது போராட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை, இருந்தபோதிலும் தலிபான்களுடன் எவ்வித சமரசமும் மேற்கொள்ளவில்லை என்றார்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமைகளில் “எந்த முன்னேற்றமும்” அடியவில்லை. ஐ நா கடந்த டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் சூழலை “மிகவும் கொந்தளிப்பானது” என்று குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிய மக்களில் 64 சதவிகிதம் “அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் அல்லது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்” வாழ்ந்து வருவதாக நிக்கல்சன் குறிப்பிட்டார். முந்தைய மாதங்களில் இருந்து சற்று சிறிய அளவிலான மாறுபாட்டையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை சம்பந்தமாக ஏதும் பதிலளிக்கவில்லை.

உண்மையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு பாகிஸ்தானின் ஆதரவும் இராணுவ உதவியும் இல்லாதிருந்தால், அது எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும்.

சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்கா இராணுவம் ஒரு மாபெரும் சக்தியாகும். அது தற்போதைய உலகளாவிய வல்லரசாக உள்ளது, ஆனால் உலகின் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்த முனைவதால் ஆப்கானிஸ்தான் நிலப்பகுதி முழுவதும் தங்களது அதிகாரத்தை செலுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்தானின் இந்த நிலைக்கே காரணம் பாகிஸ்தான்தான். துரோகித் தளபதி முஷாரஃப்பின் கீழ் பாக்கிஸ்தான் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான கதவு திறந்துவைத்து அவர்களை வரவேற்றது, மேலும் இப்பொழுதும் பாகிஸ்தான்தான் இந்த ஆக்கிரமிப்பை தொடர்ந்து ஆதரிப்பதில் உடந்தையாக உள்ளது. முஸ்லிம்கள் தங்கள் ஆட்சியாளர்களை ஏமாற்றுவதை அம்பலப்படுத்துவதற்கும், குஃபார்களின் தலைவர்களுக்கும் சேவை செய்வதை நிராகரிப்பதும் மிக அவசியம் ஆகும்.

2.அமெரிக்க படைகள் உத்திரவாதத்திரற்கு பின், எர்டோகன் அமெரிக்கா படையின்  கூட்டுப் பணியில் ஈடுபடுவதாக ஒத்துக் கொண்டுள்ளார்

கடந்த மாதம் மட்டும் துருக்கிய பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் சிரியாவில் 30,000 அமெரிக்க ஆதரவுடன் திட்டமிடப்பட்ட ஒரு படைப்பிரிவை அச்சுறுத்தினார் “உருவாவதற்கு முன்பே அதை அழித்து விட எண்ணினார்”.  ஆனால் இப்பொழுது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரக்ஸ் டில்லர்சன் விஜயம் செய்த பின்னர், சிரியாவில் அமெரிக்காவுடன் கூட்டு இராணுவப் பணியைப் பற்றி எர்டோகன் பேசுகிறார். ராய்ட்டர்ஸ் படி:

துருக்கி வெள்ளியன்று சிரியாவில் அமெரிக்க துருப்புக்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு கூட்டு நடவடிக்கையை நடத்த திட்டமிட்டுள்ளது. இரண்டு நேட்டோ நட்பு நாடுகளும் பலவீனமான நிலையிலிருந்து தங்கள் உறவைக்  முன்னேற்ற அமெரிக்கா ஒப்புக்கொள்ளும் ஒரு விரைவான இறுதிக் கட்டத்தை, ஒரு “நெருக்கடிப் புள்ளியை” அடைந்தது.

இது துருக்கிய அரசாங்கத்திலிருந்து அமெரிக்க எதிர்ப்பு குரலுக்கு பல வாரங்களுக்கு பின், அமெரிக்க ஜனாதிபதி செயலர் ரெக்ஸ் டில்லர்சன் குடியரசுத் தலைவர் டெயிலிப் எர்டோகனை இரண்டு நாள் பயணமாக சந்தித்தார்.

வாஷிங்டனுக்கும் நேட்டோவின் முக்கிய பிரதான முஸ்லீம் நட்புக்கும் இடையேயான உறவுகள் பல சிக்கல்களால் முறிந்துவிட்டன. சிரிய குர்திஸ் YPG போராளிகளுக்கு அமெரிக்க ஆதரவு தருவதே துருக்கியின் அனைத்து கோபங்களுக்கும் காரணம், மேலும் துருக்கி அமெரிக்காவை பயங்கரவாதிகளாக பார்க்கிறது.

சிரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள அட்ரியன் பிராந்தியத்தில், அதன் தெற்கு எல்லையில் இருந்து YPG ஐ அகற்றுவதற்கு துருக்கி கடந்த மாதம் ஒரு வான்வழி  மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, ஆயுத உதவிகள், பயிற்சி பெற்ற YPG போராளிகளுடன் விமான படை ஆதரவு மற்றும் சிறப்பு சக்திகளுடன் உள்ளது, இது இஸ்லாமிய அரசு(அமைவதற்)க்கு எதிரான அதன் பிரச்சாரத்தின் முக்கிய தளமாக உள்ளது.

டில்லர்சன் வியாழன் இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக  எர்டோகனுடன் விவாதத்தார். வெள்ளிக்கிழமை காலை வெளிவிவகாரதுறை அமைச்சர் Mevlut Cavusoglu சந்தித்த பின்னர் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், “அமெரிக்க துருக்கி இடையேயான உறவு ஒரு சிரிய நெருக்கடி புள்ளியில் பயணிப்பதை நாம் அறிவோம்” என்றார்..

“நாங்கள் இந்த சிக்கலான நிலையிலிருந்து முன்னோக்கி செயல்பட போகிறோம்”. நங்கள் ஆயுதங்கள் மூலமாக அல்லாமல், சிரமங்களை ஏற்படுத்தும் பிரச்சினைகளை, நாங்கள் தீர்க்க முயல்கிறோம்

அமெரிக்காவின் வார்த்தை ஜாலங்கள் கடுமையாக மயக்குவதாக  இருந்தபோதிலும், உண்மையில் எர்டோகன் அமெரிக்கா திட்டமிட்டபடி தொடர்ந்து கொண்டே இருக்கிறார். அமெரிக்கா சிரியாவில் சிக்கலான ஒரு விளையாட்டாக விளையாடுகின்றது, அதன்மூலம் நிலைமையை சமபடுத்த பல்வேறு உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளை எதிர்த்து நிற்கிறது. நம்முடைய தற்போதைய ஆட்சியாளர்கள் மேற்கு நாடுகளின் ஆதரவை எதிர்த்து நிற்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். முஸ்லீம்கள் துரோகிகளையும், குஃபார்களின் அடிமைகளாக செயல்படும் துரோக ஆட்சியாளர்களையும் நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவும், முஸ்லீம்கள் விழிப்புணர்வு கொண்டு உம்மாவிற்கும் அதன் தீனுக்கும் வழிவகுக்கும் உண்மையான சித்தாந்த தலைமைக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

3.சவூதி அரேபியாவிற்காக பாகிஸ்தான் துருப்புகளை (போர் தடவாளங்களையும், போர் விமானங்களையும்), தயார்படுத்துகிறது

சவூதி அரேபியாவிற்கு துருப்புக்களை அனுப்புவதை முன்பு எதிர்த்த பாகிஸ்தான், இப்பொழுது அது தன் துருப்புக்களை அனுப்பபோவதாக அறிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ்ன் செய்தியின் படி:

பாக்கிஸ்தான் இராணுவம் சவூதி அரேபியாவிற்கு “பயிற்சி மற்றும் ஆலோசனை” பணிக்காக இராணுவத்தை அனுப்புகிறது.

இது கவனிக்கத்தக்கது ஏனெனில் முன்னர் பாகிஸ்தான், ஏமனில்   திருப்தியில்லாமல் சவூதி உடனான இராணுவ நடவடிக்கைக்கு ஒத்துக்கொண்டது. இதனால் ஈரானுடனான உறவுகள்  சீர்குலைந்துவிடுவது பற்றி அச்சப்படுகிறது (யமனில் சவுதிகளை எதிர்த்துப் போரிடுகிறது). இதன்மூலம் யமனை நிலைகுலைய செய்துள்ளது. பாக்கிஸ்தான் இராணுவத் தலைமையகம் இராணுவம் பாகிஸ்தானில் இருப்பதையே விரும்புகிறது. இதன்மூலம் இழுத்தடிப்பதே (காலம்  தாழ்த்துவதே) பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் நோக்கம் ஆகும்.

சவூதிக்கு வெளியே பாகிஸ்தான் தனது துருப்புக்களை கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுத்தாது என்று எப்போதும் பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் யமனில் போரில் சண்டையிடுவதில் சவூதி தற்போது ஈடுபட்டுள்ளது, சவூதியின்  தரைப்படைகளின் பலவீனம் காரணமாக தனக்கு சாதகமாக பாகிஸ்தான் பார்கிறது. தரைவழி தாக்குதலுக்கு ஐக்கிய அரபு நாடுகளை சார்ந்து இருப்பதால்  சவூதி பெரும்பாலும் வான் தாக்குதல்களை தொடுக்கின்றனர். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் சவூதிக்கும் அதன் புரிந்துணர்வு மற்றும் நோக்கங்களில் வேறுபாடு இருப்பதால், சவூதி தனது சொந்த தரைப்படைகளை யுத்தத்திற்குள் அனுப்புவதில் நம்பிக்கையற்று உள்ளது. எல்லைக்கு அருகில் இருப்பினும், பாகிஸ்தானிய படையினர் இந்த இலக்கை அடைவதில் தெளிவாக உள்ளனர்.

இறுதியில், யமேனின் நடக்கும் யுத்ததில்  அமெரிக்க நோக்கங்களுக்காகப் பாகிஸ்தான் போராடுகின்றது. மேலும் அமெரிக்கா எவ்வாறு தனது நோக்கத்தை நிறைவேற்ற களத்தில் போராடுவதற்கு முஸ்லிம் நாடுகளின் படைகளை  முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியுள்ளது என்பதற்கு இது மற்றொரு உதாரணம் ஆகும். வலிமைக்கு அடையாளம் என்பதை விட, இது உண்மையில் அமெரிக்க பலவீனம் என்பதற்கான அடையாளம். முஸ்லீம்கள் தங்களுடைய சொந்த விவகாரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதையும், ஒற்றுமைக்கு உள்ளான மக்களின் ஆதரவின்றி அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான பலம் இல்லாத ஒரு வெளிநாட்டு சக்தியையும் இழக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது

Comments are closed.