சமீப பதிவுகள்

செய்தி பார்வை 21.02.2018

1.யூத நிறுவனம் எகிப்து நாட்டிற்கு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயுவாயுவை விநியோகிக்கவுள்ளது

யூத ஆக்கிரமிப்பு நிலத்தில் இயங்கும் நிறுவனங்கள் எகிப்து நாட்டிற்கு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயுவாயுவை விநியோகிக்க ஒப்பந்தமிட்டிருக்கிறது , இந்த ஒப்பந்தத்தை ‘இஸ்ரேலின் ஆட்சி கையோகப்படுத்தும் வழி’ என ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். கடந்த திங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் படி, இஸ்ரேலிய நிறுவனம் டெலெக் குழு மற்றும் டெக்சாஸ் நகரம் சார்ந்த நோபல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள், இஸ்ரேலின் பெரும் நிலப்பரப்பான லேவியதன் மற்றும் இரண்டாம் பெருமிடமான தாமார் ஆகிய நிலங்களில் தொடங்கி டோல்பிமஸ் ஹோல்ட்டிங்ஸ் எனும் எகிப்து நிறுவனத்திற்கு அடுத்த தசாப்தத்திற்கு எரிவாயு விநியோகிக்க உள்ளது.  யூத ஆக்கிரமிப்பு நிலத்தின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெட்டன்யாஹு , இந்த ஒப்பந்தம் மூலம் பல்லாயிரம் கோடி டாலர்கள் வருமானம் கிடைக்கும் என்றார். எகிப்து ஒரு காலத்தில் எரிவாயுவை ஏற்றுமதி செய்தனர், ஆனால் பல ஆண்டுகளாக நிலவும் நிலையற்ற அரசியல் சூழலால் தங்களுடைய தேவைக்கு எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது

2.சீனா பலோச் பிரிவினைவாதிகளோடு ரகசிய பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறது

பாக்கிஸ்தான் நாட்டின் பழங்குடி பிரிவினைவாதிகளோடு சீனா தன்னுடைய 60 பில்லியன் டாலர் மதிப்பிலான தன்னுடைய சீன பாக்கிஸ்தான் பொருளாதார பாதை எனும்  உட்கட்டம்மைப்பு திட்டத்தை பாதுகாக்க, ஐந்தாண்டிற்கும் மேலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையை பற்றி அறிந்த மூன்று நபர்கள் பிரிட்டன் நாட்டின் பைனான்சியல் டைம்ஸ் எனும் பத்திரிக்கைக்கு அளித்த பெட்டியில் தென்மேற்கு பகுதியிலுள்ள பிரிவினைவாதிகளோடு சீனா அரசு நேரடியான தொடர்பிலுள்ளதாக குறிப்பிட்டனர். சீன அதிகாரிகள் இதனை பற்றி கருத்து கூறவில்லையென்றாலும் , பாகிஸ்தானின் சீன தூதர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தங்களுக்கு இனி இந்த பொருளாதார பாதைக்கு அச்சுறுத்தலில்லை என கூறினார்.  ஒரு மாகாண தலைவர், அங்குள்ள இளைஞர்கள் பொருளாதார லாபத்திற்க்காக ஆயுதங்களை கைவிட்டனர் என கூறினார். இன்றுள்ள இளைஞர்கள் பத்தாண்டிற்கு முன்னிருந்த இளைஞர்களை போல கிளர்ச்சியாளர்களோடு சேர விரும்பவில்லை என்றார் . இந்த சீன பாக்கிஸ்தான் பாதை மூலம் அதிகமான மக்கள் செழிப்பை காண்கின்றனர் என்றும் கூறினார்.

3.கெளத்தாவில் நடைபெறும் படுகொலைகள்

பஷார் அல் அஸ்ஸாதின் ராணுவம் சிரிய தலைநகரின்  வட கிழக்கிலுள்ள புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலால் அதன் சுற்றளவில் உள்ள 4 லட்சம் மக்கள் இந்த முற்றுகையில் சிக்கிக்கொண்டுள்ளனர். டமாஸ்கஸ் புறநகர் பகுதியான கிழக்கு கெளத்தாவில்  போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்  வீடுகள் , மருத்துவனைகள் , சந்தைகள் மற்றும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து குண்டுகளை பொழியும் நேரத்தில் உயிர் தப்பியவர்களை காப்பாற்ற உதவியாளர்கள் அங்கு விரைகிறார்கள். இந்த புறநகர் பகுதியே கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள சக்திவாய்ந்த அரணாகும். குறைந்தது 250  பொதுமக்கள் இந்த 48 மணி நேர தாக்குதலில் உயிரிழந்துள்ளனர், அதில் 58 குழந்தைகள் அடங்குவர். இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இந்த கிழக்கு கெளத்தாவில் உள்ள நகரங்கள் , 2011  ஆம் ஆண்டு அஸ்ஸாதிற்கு எதிராக ஏற்பட்ட போராட்டத்திற்கு பிறகு, சுய ஆட்சி முறையை மேற்கொண்டு  அரசை மிரளவைத்தவை.  இந்த நகரங்களே, அனைத்து கிளர்ச்சியாளர்களையும் முட்டியிட உறுதிகொண்டிருக்கும் அஸ்ஸாதின் குறிக்கோளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் கடைசி நகரங்களாகும். அஸ்ஸாத் மற்றும் அவனின் நேச நாடுகள் , தாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதாக தொடர்ந்து சமாளிக்கின்றனர்.

Comments are closed.