சமீப பதிவுகள்

செய்தி பார்வை 28.02.2018

1.சவூதி அரேபியா பொழுதுபோக்கு துறையில் $ 64 பில்லியன் முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது

2.சிரியாகெளத்தாவின் படுகொலை

3.சவுதி அரேபியாவை பாதுகாக்க துருப்புக்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது

4.துருக்கிக்கு இஸ்லாமை விட குஃபுரே மிகத் தேவை –  எர்டோகன்

1.சவூதி அரேபியா பொழுதுபோக்கு துறையில் $ 64 பில்லியன் முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது

சவுதி அரேபியாவின் ஜெனரல் கேளிக்கை  மற்றும்  பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவரான அஹ்மத் பின் அகெய்ல் அல்காதிப், அடுத்த பத்தாண்டுகளில் தனது கேளிக்கை  மற்றும் பொழுதுபோக்கு துறையில் 64 பில்லியன் டாலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதை தெரிவித்தார். தலைநகர் ரியாத்தில் ஒரு ஓபரா ஹவுஸில் ஏற்கனவே கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆண்டு 5,000 பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்க பாப் இசை மேருன் 5 மற்றும் உலகின் மிகப்பெரிய நாடக தயாரிப்பாளரான சர்கியூ டூ சோலீல் ஆகியவை அதில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்

2.சிரியாகெளத்தாவின் படுகொலை

பிப்ரவரி 18 அன்று, அசாத் ஆட்சி ரஷ்ய ஆதரவுடன், டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கெளத்தாவை பீரங்கிகள், வான்வழி தாக்குதல்கள் மற்றும் பீப்பாய் குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. ஏற்கனவே நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது அரசு இராணுவப் படைகள் தரைவழி தாக்குதல் மூலம் முன்னேற தயாராகிவிட்டது. அரசாங்கத்தின் புலி படைகளின் தலைவரான ஜெனரல் சுஹைல் அல் ஹசன் ஒரு வீடியோவில்:

நான் சத்தியம் செய்கிறேன், போரிலும் நெருப்பிலும் அவர்களுக்கு பாடம் கற்பிப்பேன் . நீங்கள் ஒரு மீட்பரை காண முடியாது. நீ மீட்பரால் மீட்கப்பட்டால் தண்ணீரால் மட்டுமே மீட்கப்படுவாய் அது கொதித்த எண்ணெயைப் போல் இருக்கும். நீங்கள் இரத்தம் கொண்டு மீட்கப்படுவீர்கள். ” என்று கூறினார்.

டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகள் அரசாங்க கட்டுப்பாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், கெளத்தா அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இன்னும் வராத  எஞ்சிய புறநகர் ஆகும். உலகளாவிய செய்தி ஊடகம் இருந்தபோதிலும் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் அங்கு நடக்கும் அநியாயங்களையும்  ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றன.

3.சவுதி அரேபியாவை பாதுகாக்க துருப்புக்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது

ஒரு முன்னணி பாக்கிஸ்தான் செய்தித்தாள் அதை ஒரு மர்மம் என்று அழைத்துள்ளது. ஆனால் சவூதி அரேபியாவிற்கு 1,000 புதிய துருப்புக்களை அனுப்புவதாக பாகிஸ்தான் அறிவித்த சில நாட்களுக்கு பின்னர், அரசியல்வாதிகள் இது சம்பந்தமான ஒரு விவாததிற்கு அழைப்பு விடுத்தனர். பாதுகாப்பு அமைச்சர் அழைக்கப்பட்டார். அவர்கள் என்ன செய்வதென்பதையும் அவர்கள் ஏன் அனுப்பப்படுகிறார்கள் என்பதையும் பற்றிய விவரங்கள் இருண்டதாக இருக்கின்றன. அனுப்பப்பட்ட பாகிஸ்தான் துருப்புகள்   “பயிற்சியளிப்பதற்கும், அறிவுரை செய்வதற்கும்பொறுப்பாக இருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன், சவூதிக்கு வெளியே, குறிப்பாக யமனில் நமது படைகள் இல்லை எனவும் கூறியுள்ளார். நாட்டில் ஏற்கனவே 1,600 ஊழியர்கள் உள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் குர்ராம் தஸ்தீர் தெரிவித்தார்.

இந்த எடுக்கப்பட்ட தீர்மானத்தால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை வெறும் கண்துடைப்புஎன்று செனட் சபை தலைவர் ராசா ரப்பாணி தஸ்தகீர் பதிலளித்தார். “நான் இந்த நிலையைப் பற்றி வருந்துகிறேன், அறிக்கை சரியில்லை.” அரைகுறையாக அவசரமாக எடுக்கப்பட்ட முடிவாக கருதுகிறேன், சில மாதங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான சவூதி அரச குடும்பத்து செல்வந்த குடிமக்களும், உறவினர்களும் ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்காகிவிட்டனர் பாக்கிஸ்தானிய துருப்புகளின் உண்மையான நோக்கம், சவுதி அரச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

4.துருக்கிக்கு இஸ்லாமை விட குஃபுரே மிகத் தேவை –  எர்டோகன்

துருக்கி இஸ்ரேலின் தேவையை உணர்ந்து அதை ஏற்க வேண்டும், என்று ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் சனிக்கிழமை கூறினார், இரு நாடுகளும் உறவுகளை ஒரு ஒப்பந்தம் மூலம் இயல்பான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் எனவும். “இந்த பிராந்தியத்தில் இஸ்ரேல்க்கு துருக்கி போன்ற ஒரு நாடு அவசியத் தேவை எனவும்  எர்டோகன் சனிக்கிழமை முன்னணி நாளேடுகளில் வெளியிட்ட துருக்கிய செய்தியாளர்களிடம் கூறினார்.

நாங்கள் இஸ்ரேலின் தேவையை அவசியத்தை (அது துருக்கிக்கு தேவை என்று) உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும், இது இப்பிராந்தியத்தில் தற்போது கட்டாய அவசியம்என்று எர்டோகன் கூறினார்.

நேர்மையின் அடிப்படையில் பரஸ்பர நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினால், சாதாரணமயமாக்கல் பின்பற்றப்படும்.” 2010 ஆம் ஆண்டு மாவி மர்மரா சம்பவம் எர்டோகன் என்பவர் சியோனிஸ்டு எதிர்ப்பாளராக இருந்ததை உலகிற்கு காட்ட இந்த நிகழ்வை பயன்படுத்தினார். ஆனால் உண்மை இது தற்காலிகமானது, அவர் எப்போதும் யூத நிறுவனத்துடனும் யூத நாடுகளுடனும் உறவுகளை வலிமையாக்க முயற்சிகளை மேற்கொள்வார். ஆவர் மீது யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் அவர் தன் உண்மையான முகத்தை தற்போது கட்டியுள்ளார். அதை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

Comments are closed.