சமீப பதிவுகள்

மறுவுலகின் தண்டனையை விட இவ்வுலகத்தின் தண்டனையை சுமப்பது சுலபம்

கஃபன் இடப்பட்ட குழைந்தைகள் மற்றும் பெண்களின் படங்கள், சிக்கித்தவிக்கும் தாய்மார்களின் வீடியோ பதிவுகள் அனைத்தும் நாம் அவர்களுக்கு உதவி அளிக்காமல் அவர்களை கைவிட்டுவிட்டோம் என்று உலகிற்கு காட்டுகின்றது. மேலும் அவர்கள் அல்லாஹ் ஒருவனின் மீது மட்டும் தான் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நிகழ்வு, ஒரு மோசமான சோகத்தை எதிர்கொள்ளும் போது ஃபிர்அவ்ன் மகளின் சிகையலங்கார நிபுணர் காட்டிய தைரியத்தை நமக்கு நினைவூட்டுகின்றது

எது உண்மையான தைரியம் என்பதை அறிந்துகொள்வது மிக அவசியமாகும். மேலும் எப்படி கெளத்தாவில் இருக்கும் முஸ்லிம்கள் இதற்கு எடுத்துக்கட்டாய் விளங்குகிறார்கள்  என்பதை  புரிவதும் மிக அவசியமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்:

(‏لَمَّا كَانَتْ اللَّيْلَةُ الَّتِي ‏‏أُسْرِيَ ‏‏بِي فِيهَا، أَتَتْ عَلَيَّ رَائِحَةٌ طَيِّبَةٌ، فَقُلْتُ: يَا ‏جِبْرِيلُ‏،‏ مَا هَذِهِ الرَّائِحَةُ الطَّيِّبَةُ؟ فَقَالَ: هَذِهِ رَائِحَةُ ‏‏مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ ‏‏وَأَوْلادِهَا، قَالَ: قُلْتُ: وَمَا شَأْنُهَا؟ قَالَ: بَيْنَا هِيَ تُمَشِّطُ ابْنَةَ ‏‏فِرْعَوْنَ ‏‏ذَاتَ يَوْمٍ، إِذْ سَقَطَتْ ‏‏الْمِدْرَى ‏‏مِنْ يَدَيْهَا، فَقَالَتْ: بِسْمِ اللَّهِ، فَقَالَتْ لَهَا ابْنَةُ ‏ ‏فِرْعَوْنَ:‏ ‏أَبِي؟ قَالَتْ: لا، وَلَكِنْ رَبِّي وَرَبُّ أَبِيكِ اللَّهُ، قَالَتْ: أُخْبِرُهُ ‏‏بِذَلِكَ! قَالَتْ: نَعَمْ، فَأَخْبَرَتْهُ، فَدَعَاهَا فَقَالَ: يَا فُلانَةُ؛ وَإِنَّ لَكِ رَبًّا غَيْرِي؟ قَالَتْ: نَعَمْ؛ رَبِّي وَرَبُّكَ اللَّهُ، فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاسٍ فَأُحْمِيَتْ، ثُمَّ أَمَرَ بِهَا أَنْ‏ ‏تُلْقَى هِيَ وَأَوْلادُهَا فِيهَا، قَالَتْ لَهُ: إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً، قَالَ: وَمَا حَاجَتُكِ؟ قَالَتْ: أُحِبُّ أَنْ تَجْمَعَ عِظَامِي وَعِظَامَ وَلَدِي فِي ثَوْبٍ وَاحِدٍ وَتَدْفِنَنَا، قَالَ: ذَلِكَ لَكِ عَلَيْنَا مِنْ الْحَقِّ، قَالَ: فَأَمَرَ بِأَوْلادِهَا فَأُلْقُوا بَيْنَ يَدَيْهَا وَاحِدًا وَاحِدًا إِلَى أَنْ انْتَهَى ذَلِكَ إِلَى صَبِيٍّ لَهَا مُرْضَعٍ، وَكَأَنَّهَا تَقَاعَسَتْ مِنْ أَجْلِهِ، قَالَ: يَا ‏‏أُمَّهْ؛‏ ‏اقْتَحِمِي فَإِنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الْآخِرَةِ، فَاقْتَحَمَتْ)

நான் மிஃராஜ் இரவின் போது ஒரு அழகான வாசனையை நுகர்ந்தென். அப்போது ஜிப்ரீலிடம் நான் அது யாருடையது என்று கேட்டேன். அதற்கு அவர் இது, ஃபிரௌனுடைய மகளின் சிகை அலங்காரி மற்றும் அவளுடைய குழந்தைகளுடைய வாசனையாகும் என்று கூறினார். அதற்கு நான் அவர்களுடைய வரலாறு என்ன என்று வினவினேன். அவர் கூறினார்: ஒரு நாள் ஃபிரௌனுடைய மகளின் தலைமுடியைக் வாரிகொண்டிருக்கும்போது, ​​இரும்பு கவசம் கீழே விழுந்தது; அவள் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூறினார். ஃபிரௌனின் மகள், “நீ என் தந்தையை தானே குறிப்பிட்டாய் ? என்று கேட்டாள் அதற்கு அவள்: இல்லை என் இறைவனும் உங்கள் தந்தையின் இறைவனுமான அல்லாஹ்வின் பெயரை சொன்னேன் என்று அவள் சொன்னாள்: அதற்கு அவள் நான் இதைப்பற்றி என் தந்தையிடம் சொல்லுவேன் என்று கூறினாள். அதற்கு அவர் சரி என்று சொன்னார்கள்.

அவள் தன் தந்தை ஃபிர்அவ்னிடம் கூறினால். ஃபிரவ்ன் அந்த பெண்ணை அழைத்து கேட்டான். உனக்கு என்னை தவிர வேறு இறைவன் உள்ளான என்ன?.

அதற்கு அவர்கள் கூறுனார்கள், ஆம் என்னுடைய இறைவன் உன்னையும் என்னையும் படைத்த அந்த அல்லாஹ் தான். அதை கேட்ட ஃபிரவ்ன் ஒரு பெரிய பாத்திரத்தில் தீமூற்றி அந்த பெண்ணையும் அவர்களின் குழந்தைகளையும் போடுமாறு கட்டளையிட்டான். அதற்கு அந்த பெண் ஒரு வேண்டுகோள் ஒன்றை விடுத்தால், என்ன வேண்டுகோள் என்று கேட்டபோது, அதற்கு அவர்கள் எறிந்த பிறகு  என்னுடைய எலும்பையும் என் குழந்தையின் எலும்பையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி புதைக்குமாறு கேட்டால், அதற்கு அவர்கள் சரி அப்படியே செய்கிறோம் என்று கூறினார்கள்.

ஃபிரவ்ன் அவர்கள் குழந்தைகளை முதலில் அந்த பெண்ணிற்கு முன்னாள் தீயில் போடுமாறு கட்டளையிட்டான். அவ்வாறு ஒருவர் பின் ஒருவராக தீயில் போடபட கடைசியில் அந்த பெண் தன் கை குழந்தையுடன் நின்றாள். அப்போது அவள் சற்று தடுமாற்றம் அடைந்த நிலையில் இருக்கும் போது, அந்த குழந்தை தன் தாயை பார்த்து பேசியது. அம்மா மறுஉலகின் தண்டனையை விட இவ்வுலகின் தண்டனை மிக சுலபமானது எனவே தைரியமாக செல்லுங்கள் என்று கூறியது. அதனால் அந்த பெண்ணும் அந்த கைகுழந்தையும் எரிக்கப்பட்டார்கள்.

கெளத்தா ஏமன் மியான்மாரில் உள்ள நம்முடைய பெண்கள் மேலே பார்த்த ஃபிரவ்னுடைய மகளின் சிகை அலங்காரிப்பெண்ணின் உதாரணத்தை போன்றவர்களே.

ஹக்க்கில்(உண்மையில்)நிலைத்து நிற்பதற்கு இவர்கள் தான் உம்மத்திற்கு எடுத்துக்காட்டு.

இந்த குழந்தையின் வார்த்தைகள் இந்த உமமத்தின் ஆட்சியாளர்களின் முதுகுக்குப் பின்னால் சென்று அவர்களை எச்சரிக்கை செய்வது தான் இந்த பெரும் ஹதீத்தின் நோக்கமாகும்.

மேலும் நம் ஒவ்வுருவரையும் இந்த நிகழ்வுகள் திடுக்கிட வைத்து நம்மை இவர்ககுக்கு எதுவும் உதவி அளிக்காத நபர்களாய் உள்ளோமே என்று அச்சம் அடைய செய்யும் விஷயமாக அமைந்துள்ளது.

முஸ்லீம் ஆட்சியாளர்களே!! அஞ்சிக்கொள்ளுங்கள். இந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பை தாங்க முடியாமல் குமுறும் தாய்மார்களின் கதரல்கள் மற்றும் தந்தைமார்களின் அழுகைகள் உங்கள் காதுக்குள் விழவில்லையா? அல்லாஹ்(சுபு) கூறியதை மறந்துவிட்டீர்களா?

اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

(சூரா மும்தஹினஹ்: 60:9).

முஸ்லீம் ஆட்சியாளர்களே! உங்களுடைய செயல்களில் இருந்து , நீங்கள் முஸ்லீம் சகோதர சகோதரிகளின் பாதுகாவலர்கள் இல்லை மாறாக நீங்கள் எதிரியின் பாதுகவளர்களாக இருக்குறீர்கள்.

முஸ்லீம் நாடுகளின் உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் மார்க்க அறிஞர்களே!! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். முஸ்லீம் உம்மத் சந்திக்கும் பிரச்சனைகளை இன்னும் புறக்கணிக்க முடியாது. சிரியா போன்ற நாடுகளில் முஸ்லீம் உம்மத் சந்திக்கும் நிகழ்வுகள் அதிமுக்கிய வாழ்வா சாவா பிரச்சனை. இவை அணைத்தனையும் மற்ற பகுதியில் வாழும் முஸ்லிம்ககுக்கு எடுத்து சொல்வது உங்களுடைய கடமை. நீங்கள்தான் நபிமார்களின் வாரிசுகள் என்பதால் உம்மத்தில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி நம்முடைய கடைமையை பற்றி நினைவூட்டுவது உங்களது கடமை.

ரஸூலுல்லாஹ்(ஸல்) கூறினார்கள்:

إن العلماء ورثة الأنبياء

நிச்சயமாக மார்க்க அறிஞ்சர்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்

ஓ உலமாக்களே! முஸ்லீம் உம்மதாகிய நாங்கள் எங்களுடைய துன்பத்திற்கான பதில்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்காக உங்களை நோக்குகிறோம். எங்களுக்கு சரியான பாதையை காண்பிப்பதற்கும் எங்களைச் சுற்றியுள்ள பெரிய முன்கரை(தீமைகளை) அகற்றுவதற்கும் எங்களை வழிநடத்தும் பொறுப்பை நீங்கள சுமந்துள்ளீர்கள் எனவே எங்களை அல்லாஹ்வின் ஷரியத்தை கொண்டு நேர்வழிபடுத்தி எங்களுடைய கடமையை பற்றி கூறுங்கள்.

முஸ்லீம் நாடுகளின் இராணுவ தலைவர்களே!!! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். சிரியாவில் நடக்கும் பிரச்சனையை தீர்ப்பது வெறும் அந்த நாட்டு மக்களின் மீது மட்டும் கடமையில்லை மாறாக உலகில் இருக்கும் அனைத்து முஸ்லீம் இராணுவ தலைவர்களாகிய உங்கள் அனைவரின் மீதும் கடைமையாகும்.மேலும் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் வெறும் மில்லியன் கணக்கில் இராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதங்களை மட்டும் வைத்திருக்கவில்லை மாறாக இதையெல்லாம் விட மிக பலமான ஆயுதமான அல்லாஹ்(சுபு) வின் உதவி உங்களிடம் உள்ளது.அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًا‌ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِ‌ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏

நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் – எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் – (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

(சூரா அன்ஃபால் : 8:66).

முஸ்லீம் உம்மத்தார்களே! அல்லாஹ்(சுபு) நமக்கு விதித்த பொறுப்பை சற்று நினைவுகோருவோம், அல்லாஹ் (சுபு) கூறுகிறான்:

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

(சூரா ஆல இம்ரான் : 3:110)

உம்மத் சந்திக்கும் பல பிரச்சனைகளை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். முஸ்லீம்  ஆட்சியாளர்கள் உம்மத்தை கைவிடும் செயல்பாடுகளை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். முஸ்லீம் உம்மத்திற்கு நடக்கும் அட்டூழியங்களை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம்.

எனவே, நம்முடைய நேரம், பணம், ஆற்றல் ஆகியவற்றை கொடுப்பது நமது பொறுப்பு. நம்முடைய உம்மாமிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயங்களைப் பற்றி பேசி கலந்துரையாடி ஷரியத் சொல்லும் சரியான தீர்வை நோக்கி உழைப்பது நம்முடைய பொறுப்பாகும்.

எனவே எல்லா பிரச்சனைகளின் தீர்வான இஸ்லாத்தை நடைமுறைப்படுதும் கிலீஃபாவை நியமித்து கிலாஃபத்தை நடைமுறை படுத்த அல்லாஹ்(சுபு) உதவி அளிப்பானாக.

Comments are closed.