சமீப பதிவுகள்

இந்த நூற்றாண்டின் படுகொலை…கிழக்கு கெளத்தாவிலிருந்து மருத்துவர்கள் சாட்சியம் அளிக்கின்றனர்

செய்தி

அஷ்ரக் அல்-அவ்ஸத்: “நாம் நமது மிகவும் மோசமான நாட்களை கெளத்தாவில் கழித்துக் கொண்டிருக்கின்றோம்” என்பது தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கில் அமைந்திருக்கும் கெளத்தாவில் அமையப்பெற்றிருக்கும் அமானப் பலேர் மருத்துவமனையின் இயக்குனர் அளித்த சுருக்கமான விளக்கமாகும், அங்கு கடந்த ஞாயிறன்று துவங்கி சிலநாட்களாக நடத்தப்பட்ட தீவிரமான வெடிகுண்டு தாக்குதல்களினால் 275 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் மனித உரிமை ஆணையத்தின் சிரிய கண்காணிப்பகம் பலியானவர்களில் 58 குழந்தைகளும் 42 பெண்களும் அடங்குவர் என்றும் அதனுடன் 1200 நபர்கள் காயமுற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கருத்து

அஷ்-ஷாமுடைய மக்கள் மீது ஏழு மோசமான ஆண்டுகள் கடந்துள்ளது, குழந்தைகள் மற்றும் பெண்களின் கதறல்களும், கண்ணீரும் மலைகளை நடுங்கச் செய்துவிடும், முதியோர்களின் அழுகுரல்கள் கற்களையும் கண்ணீர் சிந்தவைத்து விடும் அது எதனால் என்றால் சில கற்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதாக இருக்கின்றன, ஆனால் முஸ்லிம் உம்மத்தின் இராணுவ வீரர்களும் தளபதிகளும் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை, இந்த அழுகுரல்கள் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தவில்லையா? அல்லது நடப்பவைகளை அவர்கள் கேட்கவில்லையா அல்லது பார்க்கவில்லையா அல்லது அவர்களுடைய உணர்வுகள் மரணித்துவிட்டனவா?! முஸ்லிம் உம்மத் மீது நிகழ்பெற்று வருவது பற்றி அவர்கள் படிக்கவில்லையா, எழுதவில்லையா அல்லது பார்க்கவில்லையா? என்பது போன்ற ஒவ்வொரு முஸ்லிமும் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒருவராவது முன்வந்திருக்கலாம்.

நாம் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்கவில்லை ஏனெனில் அவர்கள் நம்மை சார்ந்தவர்கள் அல்லர் அல்லது நாம் அவர்களை சார்ந்தவர்கள் அல்லர், அவர்கள் நம்மை சார்ந்தவர்களாக இருந்திருப்பார்களேயானால் அவர்கள் நடுக்கம் அடைந்திருப்பார்கள் இந்நேரத்தில் அவர்களுடைய புஜங்கள் நகர்ந்திருக்கும் – ஆனால் ஒருவரும் செவியேற்பவர்களாக இல்லை, ஆகையால் நாங்கள் நம்மை சார்ந்தவர்களிடம் கேள்வி கேட்கிறோம் மேலும் நாம் அவர்களை சார்ந்தவர்களாவோம், இதுபோன்ற அடக்குமுறை ஆட்சியாளர்கள் மற்றும் இதுபோன்றவர்களின் உணர்வுகளை பாதுகாக்கும் முஸ்லிம் உம்மத்துடைய இராணுவத்திடம் கேள்வி எழுப்புகிறோம். உண்மையில் இதுபோன்ற செயல்கள் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அஷ்-ஷாமுடைய குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களை காப்பாற்றுவதற்கு யார் இருக்கின்றனர்?

«لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ»

“அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விதத்தில் ஒரு படைப்புக்கு கட்டுப்படுவது கூடாது” என்று ரசூலுல்லாஹ் ﷺ கூறியிருக்கையில், யமன் மற்றும் லிபியாவில் முஸ்லிம் உம்மத்துடைய படைத்தளபதிகள் மற்றும் வீரர்களால் இராணுவ கட்டளை எனும் பெயரில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு யார் இருக்கின்றனர்?!

நமது போர்வீரர்களையும் தளபதிகளையும் வெறுமனே சம்பளத்துக்கும், பதவிகளுக்கும் உயர்ந்த நிலையை அடைவதற்காக வேண்டி மட்டுமே பணிபுரியும் சாதாரண ஒரு பணியாளர்களாக மாற்றுவதில் இவர்கள் வெற்றியடைந்துள்ளனர்!! இந்த இராணுவங்கள் உம்மத்தை பாதுகாக்கவும் முஸ்லிம் உம்மத்தின் உயிர் மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது கிடையாது – இவ்வகையில் தான் அது தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது!

முடிப்பதற்கு முன்பாக, நாம் இந்த தளபதிகளுக்கும் வீரர்களுக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் அழுகுரல்களை செவியுறச் செய்வாயாக என்று அல்லாஹ்விடம் கோருகிறோம் மேலும் அல்லாஹ் அவர்களுடைய உணர்வுகளை தூண்டி விட வேண்டும் எனவும் அதன் மூலம் அவர்கள் தங்களது கால்களை முன்னெடுத்து வைத்து உம்மத்தின் நிலையை மாற்ற வேண்டும்…

இறுதியாக நாம் கூறுவது என்னவென்றால்: மனிதகுலத்திற்கு அனுப்பப்பட்ட சமூகத்தில் சிறப்புமிக்க சமூகத்தினரே, மரணம் என்பது நிச்சயமானது மேலும் அல்லாஹ்வை சந்திக்க இருப்பதும் நிச்சயமானது அதுபோலவே அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் வெற்றியும் நிச்சயமானது. ஆகவே உங்களுடைய மரணத்தை அல்லாஹ்வுக்காக வேண்டி ஆக்கிக்கொள்ளுங்கள் அதுதான் நண்மையானது இதன்மூலம் அல்லாஹ்வை நண்மையுடன் சந்திக்கும் பாக்கியம் உங்களுக்கு ஏற்படலாம் மற்றும் அல்லாஹ் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கக்கூடும் ஏனெனில் அவன் நண்மையாளனாக இருக்கின்றான் மேலும் அந்த மரணமானது வெற்றி அல்லது ஷஹீது இரண்டில் ஒன்றிற்காக வேண்டி இருக்கட்டும். அல்லாஹ் سبحانه وتعالى ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை மகிழ்வித்ததை போன்று அல்லாஹ்வின் நற்செய்தியை கொண்டு நாங்கள் உங்களுடைய இதயங்களை இலகுவாக்கி மகிழ்விக்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்:

(وَمَا جَعَلَهُ اللّهُ إِلاَّ بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُم بِهِ وَمَا النَّصْرُ إِلاَّ مِنْ عِندِ اللّهِ الْعَزِيزِ الْحَكِيمِ)

“உங்களுடைய உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியை புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே அன்றி (வேறு யாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.)”
(அல்குர்ஆன் : 3:126)

Comments are closed.