சமீப பதிவுகள்

கிலாஃபத்தின் அழிவின் மூலம் நாம் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கான ஒரே வழி அதை மீண்டும் நிறுவுவது தான்

இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் அவமானகரமான மற்றும் மாபெரும் பேரழிவும் மற்றும் நெடுங்காலமாக மிகவும் மோசமான அளவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் விஷயம் என்னவென்றால் மார்ச் 3, 1924 அன்று காலனியாதிக்கவாதியும் அதன் கங்காணிகளும் கிலாஃபத்தை அழித்தது தான். கிலாஃபத்தை நீக்கியது என்பது வரலாற்றில் வேறு எந்தவொரு அரசை நீக்கியது போன்ற செயல் அல்ல, ஆனால் அதனை நீக்கியதன் மூலம் யதார்த்தத்திலிருந்து அல்லாஹ்வின் சட்ட விதிகள் நடைமுறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, இஸ்லாமிய தலைமைத்துவம் சிதைந்துள்ளது மேலும் உம்மத் துண்டாடப்பட்டுள்ளது, இது தான் நடந்தேறியுள்ளது. அதன்பிறகு, வேறு எந்தவொரு பேரழிவும் இஸ்லாமிய உம்மத் மீது விழுவதற்கு இல்லை, அது அதன் கண்ணியத்தையும், கௌரவத்தையும் மற்றும் மேன்மையையும் இழந்துள்ளது; அதன் நிலப்பரப்பு கொடூரமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டும் அதன் குழந்தைகள் கொடேரமான முறையில் கொல்லப்பட்டும் மேலும் அதன் வளங்கள் வீணாக்கப்பட்டும் வருகின்றன. மேலும் கிலாஃபத்தின் அழிவின் மூலம் முஸ்லிம் உம்மத் அதன் தீனிலிருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் அரசியல் ஆர்வத்தையும், இராணுவ பலத்தையும், பொருளாதார வளத்தையும் மற்றும் அதன் மூலோபாய பலத்தையும் இழந்துள்ளது.

கிலாஃபத்தின் அழிவானது ஒரு இரவில் நடந்தேறிய செயல் அல்ல மாறாக முழுமையான அளவிலும் நீடித்து இருக்கும் அளவிலும் காலம் நெடுகிலும் அதன் அழிவு இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டியும் அவர்கள் மூன்று நூற்றாண்டுகளாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட செயலாகும். காலனியாதிக்க நாடுகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் குஃப்பார்கள் கிலாஃபத்தினால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து நன்கு அறிந்திருந்த காரணத்தால் அதை அழிப்பதற்கும் அதை அழித்த பின்பு அது மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்கும் அவர்களுடைய அனைத்து வலிமையை கொண்டும் முயற்சி செய்து வந்தனர்.

முதலாவதாக: இஸ்லாமிய நாடுகளை துண்டாடி தமக்கு விசுவாமான கைப்பாவைகளை அங்கு அமர்த்தி அங்கு குஃப்ரியத்தான செயலாக்க அமைப்புகள், கருத்துக்கள் மற்றும் வாழ்வியல் வழிமுறை ஆகியவற்றை புகுத்தியது.

இரண்டாவதாக, முஸ்லிம்களை நிரந்தரமாக ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருப்பது அவர்களை நிரந்தரமாக போர்ச் சூழலில் வைத்திருப்பது மற்றும் அவர்களை கொல்வது, அவர்களை அடியோடு அழிப்பது மற்றும் அடிமைப்படுத்துவது போன்றவையாகும்.

முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் யூத அரசாங்கத்தை (சட்டவிரோத) ஒரு குத்துவாளாக நட்டு வைத்தது இதற்கு மிகவும் முக்கியமான உதாரணமாக விளங்குகிறது.

காலனியாதிக்கவாதிகள் இவற்றை மட்டும் செய்யவில்லை, உம்மத் தனது சொந்தக் காலில் நிற்க முடியாதவாறும், அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்படாதவாறும் அவர்கள் பின்னாலிருந்து போரிடுவதற்கு கேடயமாக விளங்கும் கிலாஃபத்தின் தலைமைக்கு கீழ் அவர்கள் மீண்டும் ஒன்றிணையாதவாறும் இருக்க பல்வேறு வழிகளை கையாண்டது. ஆகவே, அவர்கள் கிலாஃபத்தின் கருத்திலிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்துவதற்கு தவறான கற்பிதங்களை பரப்பினர். கிலாஃபத் சட்டப்பூர்வமான கடமை கிடையாது எனவும் அதுவொரு வரலாற்று நிகழ்வு எனவும் கூறினர்; கிலாஃபத்திற்கு அவப்பெயர் உண்டாக்குவதற்கும், முஸ்லிம்களை அதிலிருந்து அந்நியப்படுத்துவதற்குமான பிரச்சாரங்களை மேற்கொண்டனர், கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதற்கு பாடுபடும் முஸ்லிம்கள் மீது எந்தவொரு அநியாயமான செயலையும் செய்யாமல் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

இவ்வனைத்து முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டும் அவர்களால் முஸ்லிம் உம்மத்தின் நெஞ்சுகளிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் கிலாஃபத் என்னும் கருத்தை அகற்ற முடியவில்லை. மாறாக இன்று உம்மத் கிலாஃபத்தின் இல்லாமையை அதிகமாக உணர்ந்துள்ளது மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் அது உணர்ந்துள்ளது, ஆக அதை கோருவதற்கு தொடங்கி உறுதியுடன் அந்த கோரிக்கையை பாதுகாத்தும் வருகிறது. இவ்வாறிருக்க, இப்போது யார் அதற்கு எதிராக பாடுபட்டு அதன் மீளுருவாக்கம் ஏற்படாமல் செய்வதற்கு தடையாக இருக்கின்றனர்? நிச்சயமாக, விளைச்சல்களையும் விலங்குகளையும் மிகவும் கொடூரமாக அழித்த காலனியாதிக்கவாதிகள் தான் அவர்கள்!

அல்லாஹ்விடம் அல்லாமல் அந்த காலனியாதிக்கவாதிகளிடத்தில் நன்மதிப்பை விரும்பி அவர்களுடைய கட்டளைகளை பின்பற்றும் அவர்களுடைய கைப்பாவைகள் தான் அவர்கள்!

இஸ்லாமிய வாழ்வியல் வழிமுறையிலிருந்து தங்களை தூரப்படுத்திக்கொண்ட முட்டாள்களும் அறிவிலிகளும் தான் அவர்கள்!

கிலாஃபத்தானது முஸ்லிம்களுக்கு நண்மையையும், பெருமையையும் கண்ணியத்தையும் இஸ்லாமிய எதிரிகளுக்கு தீங்கையும், இழிவையும் தோல்வியையும் தரக்கூடியதாகும். அது நிறுவப்படும் போது ஆக்கிரமிப்பிலுள்ள முஸ்லிம் நிலப்பரப்புகள் விடுவிக்கப்படும், துண்டாடப்பட்டுள்ள முஸ்லிம் உம்மத் ஒன்று சேர்க்கப்படும் மேலும் அது இழந்தவற்றை திரும்பப் பெறும். அது உலகில் நிலவும் காலனியாதிக்க அமைப்பை அழித்துவிடும் மேலும் அல்லாஹ்வுடைய விருப்பத்தின் பேரில் உலகின் முதன்மை தேசம் எனும் அந்தஸ்தை அடையும். தீயினாலும், அநீதியாலும் முதலாளித்துவத்தின் ஊழல்களினாலும் கோபமடைந்துள்ள முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைத்து மனிதகுலத்தையும் இஸ்லாத்தின் நீதி
அரவணைக்கும்.

ஓ முஸ்லிம்களே! கிலாஃபத் உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது (ஃபர்ளு), மேலும் அது அனைத்து கடமைகளுக்கும் கிரீடமாக விளங்குகிறது. மேலும் அது அல்லாஹ்வின் வாக்குறுதியும் அவனுடைய தூதரின் ﷺ நற்செய்தியுமாகும். அல்லாஹ் سبحانه وتعالى அவனுடைய வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவான் அப்போது அது அவனுடைய தூதர் ﷺ வழங்கிய நற்செய்தியான கிலாஃபா ராஷிதாவாக (நேர்வழி பெற்ற கிலாஃபத்) இருக்கும். கிலாஃபத் என்பது முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு கற்பிதமான யோசனை கிடையாது. அதுவும் விடுதலையும் நிஜத்தில் நடந்தேறக்கூடியதாகும் மேலும் அல்லாஹ் سبحانه وتعالى வின் ஆணையைக் கொண்டு அவை நிறைவேறுவது உறுதியாகும்.

ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள்: «ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ» “அதன்பிறகு நபித்துவ வழிமுறையிலான கிலாஃபத் இருக்கும்”.

Comments are closed.