சமீப பதிவுகள்

கெளத்தாவின் அவலநிலையும் அதற்கு வெற்றியை வழங்குதலும்

கிழக்கு கெளத்தாவை குறிவைத்து சிரியா அரசு பெருமளவில் குண்டு மழை பொழிந்ததாலும் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தியதாலும் பல அப்பாவி மக்களின் உயிரை பறித்துள்ளது…

மேலும் இதனடிப்படையில் கெளத்தாவில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்பு சிரியா அரசுக்கும் காலனியாதிக்க ஆட்சியாளர்களான அதன் கூட்டணிகளுக்கும் அதற்கு உதவியளித்தும் அல்லது மௌனமாக இருந்தும் அவனுக்கு ஆதரவளித்து வரும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் இருக்கின்றது…

ஹிஸ்புத்தஹ்ரீரின் துனீசிய விலாயத்திலுள்ள ஊடக அலுவலகத்தின் மகளிர் பிரிவு:

-அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்சின் தலைமையில் பெரும் நாடுகளானவை சிரியாவிலுள்ள நமது மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு நேரடி பொறுப்பு வகிக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகிறது.

-முஸ்லிம் உலகின் மீது மேற்கும் பஷாரும் நிகழ்த்தி வரும் குற்றங்களை கண்டு அமைதி காத்து வரும் நமது ஆட்சியாளர்கள் அவர்களுடைய கைப்பாவைகள் என்பதையும் மேலும் சிரியாவில் பொதுவாகவும் கெளத்தாவில் குறிப்பாகவும் அப்பாவி மக்கள் மீது நடப்பவைகளுக்கு தார்மீக அளவில் அவர்கள் பொறுப்பாளிகளாக இருக்கின்றனர் என்பதையும் உறுதிபடுத்துகிறது.

-ஹிஸ்புத்தஹ்ரீரின் துனீசிய விலாயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நாங்கள் கெளத்தாவுடைய நமது மக்களின் காரியத்தை தத்தெடுத்துக் கொண்டுள்ளோம் என்பதையும் இதன் காரணமாக அவர்களுடைய காரியத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவும் அவர்களுடைய குறைகளை நீக்குவதற்காக பாடுபட போகிறோம் என்பதையும் அறிவிக்கின்றோம்.

-நாங்கள் முஸ்லிம் உம்மத்திடம் கெளத்தாவின் அப்பாவி மக்களுக்கு உதவிடும் வகையில் அதன் முயற்சிகளை ஒருங்கிணைக்குமாறு வலியுறுத்துகிறோம்.

-இராணுவத்தினரிடமும் அதிகார வர்க்கத்தினரிடமும் தத்தமது தேசங்களில் கொடுங்கோன்மை மற்றும் கைப்பாவைகளின் அடக்குமுறையால் முற்றிலும் சோர்வடைந்தவர்களுடன் மற்றும் தங்களுடைய சூழ்நிலைக்கும், காலனியாதிக்கம் மற்றும் அதன் கைப்பாவைகளுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டிருக்கும் குழுவினருடன் இணைந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறோம்.

-நாங்கள் முஸ்லிம் இராணுவத்தினரிடம் கிலாஃபா ராஷிதாவை (நேர்வழி பெற்ற கிலாஃபத்) நிறுவுவதற்கு தீவிரமாகவும் உறுதியுடனும் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம், அதுவே சிரியாவில் அல்லது உலகில் எந்தவொரு இடத்திலும் பாதிக்கக்கூடிய முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான ஒரே தீர்வாகும். இராணுவங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால் கைப்பாவை ஆட்சியாளர்களை வேரறுத்து நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை நிறுவி முஸ்லிம் உம்மத்தின் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே, அது தான் நிலப்பரப்புகளையும் மக்களையும் விடுவிக்கும்.

﴿إِلا تَنْفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلا تَضُرُّوهُ شَيْئًا وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾

“(உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லா விட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (அன்றி, உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன்.” (அல்குர்ஆன் : 9:39)

Comments are closed.