சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 02.03.2018

கத்தார் நெருக்கடியை தீர்க்க சவூதி மற்றும் அரபு ஐக்கிய நாடுகளின் ஆட்சி தலைவர்களை சந்தித்தார் டிரம்ப்

துருக்கி ஏன் எகிப்து மற்றும் சைப்ரஸ் , மத்திய தரைக்கடல் பகுதிகளில் பூமியிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பதற்காக மேற்கொள்ளும் பணிகளை எதிர்க்கிறது

கடற்படை பயிற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது அதனுடைய நோக்கம் இந்தியாவை எதிர்ப்பதும் தனது பொருளாதரத்தை பாதுகாப்பதும் ஆகும்

1.கத்தார் நெருக்கடியை தீர்க்க சவூதி மற்றும் அரபு ஐக்கிய நாடுகளின் ஆட்சி தலைவர்களை சந்தித்தார் டிரம்ப்

அடுத்த இரண்டு மாதங்களில் மூத்த சவூதி, அரபு ஐக்கிய நாடுகள் மற்றும் கத்தார் தலைவர்களை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செல்கிறார், வளைகுடா மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே நடக்கும் சச்சரவை தீர்க்க முயற்சிப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்கிறார் என வாஷிங்டன் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

சவுதி மன்னர், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ், சவூதி கூட்டமைப்பின் துணைத் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்; அபுதாபியின் இளவரசர் ஆயுதப்படைகளின் துணை தலைமைத் தளபதியான ஷேக் முகமத் பின் சயத் அல் நஹியான்; கத்தாரின் அமீர் ஷேய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோரை சந்திக்க வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் டிரம்ப் இருதரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த விஜயத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் கூட்டம் ஒன்றை அமைப்பதும், இந்த ஆண்டின் பிற்பகுதியிலும், மத்திய கிழக்கு பகுதியிலும் மற்றும் ஈரானிலும் சமாதான மற்றும் அமைதியை ஏற்படுத்தும் என நம்புவதாக வாஷிங்டன் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் ஐக்கிய அரபு எமிரேட், கடந்த ஜூன் மாதம் கத்தார் நாட்டிற்கான பயண மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்டது. ஏனெனில் இந்நாடுகளின் பரம எதிரியான ஈரானின் தீவிரவாத செயல்களுக்கு கத்தார் துணை நின்றது. ஆனால் கத்தார் (தோஹா) குற்றச்சாட்டுகளை மறுத்தது. வாஷிங்டன் கோடை காலத்தில் உச்சிமாநாட்டிற்கான அடித்தளத்தை கட்டியெழுப்ப நம்புகிறது.

“உச்சிமாநாட்டிற்கு முன்னர் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று மற்றொரு அமெரிக்க அதிகாரி கூறினார்.
(ஆதாரம் : கலீஜ் டைம்)

இது என்ன வகை தலைமை? ஏற்கனவே மேற்குலகிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் கொடுத்துள்ளனர், மேற்கூறப்பட்ட மேற்கு நாடுகளுக்கு தேவையில்லாமல் வீணாக பில்லியன்களைக் கொடுத்து வளங்களை வீனடித்துள்ளனர் மேலும் மேற்கத்திய போர்களுக்கு நிதியளித்து, வெட்கமின்றி ட்ரம்பை சந்தித்து பிரச்சனைக்கான தீர்வை எதிர்பார்கின்றார்கள்!

2.துருக்கி ஏன் எகிப்து மற்றும் சைப்ரஸ் , மத்திய தரைக்கடல் பகுதிகளில் பூமியிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பதற்காக மேற்கொள்ளும் பணிகளை எதிர்க்கிறது

கிழக்கு மத்தியதரைக் கடலில் எகிப்து மற்றும் சைப்ரஸால் இயற்கை எரிவாயுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு எதிராக துருக்கி பல ஆட்சேபனைகளை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது மேலும் அரசியல் மற்றும் இராணுவ நடவடிவங்களை எடுத்துள்ளது. பிப்ரவரி 5, 2018 அன்று கிரேக்க செய்தியாளர் சந்திப்பில் : மத்தியதரைக் கடல் பகுதியில் எகிப்து மற்றும் சைப்ரஸின் பொருளாதார மண்டலங்களை வரையறுத்து 2013 ல் கையெழுத்திடப்பட்ட கடற்படை எல்லை ஒப்பந்த உடன்படிக்கையை நங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் இயற்கை எரி வாயுவை எடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் துருக்கிய கடல்சார் எல்லை பகுதி ஆகும். இது அங்காரா(துருக்கி) கூற்றின்படி, கிழக்கு மத்தியதரைக் கடலில் 32,16 மற்றும் 18 ஆகியவற்றுக்கு இடையேயுள்ள எல்லையில் பரவியுள்ள பகுதியாகும்.

கெய்ரோ (எகிப்து) அவரது கூற்றை மறுத்துள்ளது. எகிப்திய மற்றும் சைப்ரஸ் இடையே எல்லை ஒப்பந்த உடன்படிக்கை (சர்ச்ச்சர்க்குரியதல்ல) விவாதத்திற்குரியதல்ல, ஏனெனில் இது சர்வதேச சட்டங்களுக்கு இணங்குவதோடு ஐ.நா.வால் பட்டியலிடப்பட்ட வரையறுத்துள்ள சர்வதேச எல்லை என்று எகிப்தின் வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உடன்படிக்கையில் பிராந்தியத்தில் எகிப்தின் இறையாண்மை உரிமை மீறல்களை பொறுத்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

எகிப்து (கெய்ரோ) இதற்கு இராணுவ ரீதியாக பதிலளித்தது; கடல்வழிகளால் கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்பில், “சினாய் 2018” என்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எகிப்தின் Zohr gas field இயற்கை வாயுவைப் எடுப்பதற்கு பொறுப்பேற்றது. இது துருக்கிக்கும் எகிப்திய பிராந்திய கடல் அல்லது பொருளாதார மண்டலங்களை மீறுவதற்கும் திட்டமிடும் எந்தவொரு நாட்டிற்கும் நேரடியான எச்சரிக்கை செய்தியை அனுப்பியது.

ஈனி(Eni) என்கிற இத்தாலிய எரிவாயுக் கம்பெனி நிறுவனம், அதன் மூன்றாவது யூனிட்டை சைப்ரஸ் கடல் எல்லைக்குட்பட்ட பொருளாதார மண்டலத்தில் அறிவித்தது, ஆனால் இது கடல் எல்லைக்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக பிப்ரவரி 9, 2018 அன்று துருக்கிய போர்க் கப்பல்கள் மூலம் நிறுத்தப்பட்டது அந்த சம்பவம் அன்காராவின் பகுதி மீது அப்பட்டமான ஆக்கிரமிப்பு (அத்துமீறல்) ஆகும்.

மேலும் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கை மீறப்படுவதை இதுக் குறிக்கிறது. போக்குவரத்து கப்பல்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று குறிப்பிடுவதுடன், இந்த கப்பல் இத்தாலி நாட்டிற்கு சொந்தமானது என்பதால் இத்தாலியும் இவர்களுடைய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

2018, பிப்ரவரி 13 அன்று, துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் டெய்யிப் எர்டோகன், மத்திய தரைக்கடல் பகுதியில் எரிபொருளைத் துப்பரவு செய்யும் உரிமைகள் மீது துருக்கி மற்றும் சைப்ரஸ் இடையேயான மோதலில் ஈடுபடுவதற்கு எதிராக வெளிநாட்டு எரிபொருள் தோண்டும் நிறுவனங்களை எச்சரித்தார்.

சைப்ரஸின் கடலோரப் பகுதிக்கு ஈனி (Eni) கப்பல் மூலம் செய்த விவகாரங்களில் வெளிநாட்டு கப்பல்களைத் தடுக்கவும் அவர் அச்சுறுத்தினார். இந்த சம்பவம் அன்காராவை அண்டை நாடுகளுடன் நல்ல உறவை நிலைநாட்டவும், அவர்களின் பிராந்திய இறையாண்மையை மதிக்கவும் அழைப்பு விடுத்தது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவரான டொனால்ட் டஸ்க், சைப்ரஸின் தலைவரான நிகோஸ் அனஸ்தாசியேடஸுடன் தொலைபேசியில் உரையாடினார். அவர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கைக்கு எதிராக துருக்கியை எச்சரித்தார், இது அங்காராவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்தது.

துருக்கியானது ஒரு வர்த்தக நாடாகும், இதன் மக்கள் தொகை சுமார் 81 மில்லியன் குடிமக்களாக மதிப்பிடப்படுகிறது. அதன் சந்தை அளவின் காரணமாக, நாட்டிற்கு புதிய ஆற்றல் வளங்கள் தொடர்ந்து தேவைப்படுகிறது. எகிப்தின் முயற்சியால் இத்தாலிய நிறுவனமான ஈனி(Eni) யால் கண்டுபிடிக்கப்பட்ட ஜொஹ்ர் இயற்கை ஏரி வாயுத் துறை, துருக்கிக்கு மிகுந்த கவலையளிக்கக் கூடியதாக இருக்கலாம்.

எரிகிற கொல்லியில் எண்ணெய் ஊற்றுவது போல் எகிப்திய பிராந்திய கடல் பகுதிக்குள் 11 புதிய மண்டலங்களில் ஈனி(Eni) விரைவில் துவங்க இருக்கிறது, சைப்ரஸ் எரிசக்தி அமைச்சர் ஜார்ஜ் லாக்கோட்ரிபிஸ் சைப்ரஸ் பிராந்திய கடல் எல்லையில் புதிய எரிவாயு துறையை கண்டுபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் (ஆதாரம் : எகிப்து டுடே)

ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்குப் பதிலாக, எகிப்தும் துருக்கியும் சைப்ரஸை துருக்கியுடன் இணைத்து, இதன் மூலம் முஸ்லீம் உம்மாவிற்காக இந்த வாயு வளங்களிலிருந்து பயனடையலாம்.

3.கடற்படை பயிற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது அதனுடைய நோக்கம் இந்தியாவை எதிர்ப்பதும் தனது பொருளாதரத்தை பாதுகாப்பதும் ஆகும்

பாகிஸ்தானிய கடற்படை கடந்த சனிக்கிழமை அன்று தங்களது கடற்படையின் பரிசோதனைகளை மேற்கொண்டது. இது வளர்ந்து வரும் இந்தியாவின் கடற்படைக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையிலும் அதேநேரத்தில் இந்திய பாகிஸ்தானிய எல்லை பகுதியில் தங்களது கடல்சார் பெருளாதாரத்தையும், வர்த்தக வழிகளையும் மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டது
இவ்வாறு பயிற்சி மேற்கொல்வதென்பது கடற்படையின் ஸ்திறத்தை மேம்படுத்தவும் அனைத்து வழிகளிலும் அதனுடைய வலிமையை உறுதிப்படுத்தவும் ஆகும். பிராந்திய மற்றும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து காத்துக் கொள்ளவும் பயன்படும். மேலும் இதன் நோக்கம். “அரேபிய கடலில் நீட்டிக்கப்பட்ட எல்லைகள் கொண்ட விமானப்படை” ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகும். ராணுவ செய்தியின் படி மார்ச் 6 ம் தேதி நேரடி துப்பாக்கி பயிற்சி மூலம் இது முடிவடைகிறது.

ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரி பிரையன் க்ளாக்லியை, “துணை போர்முறை” போன்ற “பயங்கரவாத எதிர்ப்பு, முதலியன – உண்மையில், உன்னதமான போர்க்களத்திற்கு துணையாக அமையும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, புதிய ஏவுகணை / ரோந்துப் படைகள் பாக்கிஸ்தானின் வளர்ந்து வரும் கடல்வழி பொருளாதாரத்தையும் வர்த்தகத் தொடர்புகளையும் பாதுகாக்க முயல்கின்றன, அதையொட்டி அது பொருளாதார மறுசீரமைப்பின் நம்பிக்கையைப் பின்தொடர்கிறது, இதன் மூலம் சீனா மற்றும் துருக்கியிடம் கடல்வழி வாணிபத்தில் ஈடுபடுவதற்கு மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்த இவை முயலுகின்றன.

இந்த விஷயத்தில் திறமைகளை மேம்படுத்துவதற்கு இன்னும் என்ன செய்ய முடியும் என்பதைப் பொறுத்து, மேலும் ரோந்துச் சொத்துக்களை வாங்குவது அல்லது ஆற்றல்மிக்க வான்வழி மற்றும் மேற்பரப்பு வாகனங்கள் போன்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதையும், கடற்படை நிச்சயமாக உள்ளிருப்பு ரோந்து கப்பல்களில் கவனம் செலுத்துகிறது.

எனினும், பாக்கிஸ்தான் கடலோரக் காவலாளர்களுக்கு இன்னும் திட்டமிடப்பட்டுள்ள ரோந்து கருவிகளையும் வாகனங்களையும் அதிகரித்து மேம்படுத்தலாம். அவர் ஆளில்லா தொழில்நுட்பம் முக்கியம் என்று நம்புகிறார், ஆனால் அரசாங்கம் “நோக்கங்களை வெளிப்படுத்துவதாக” நினைக்கவில்லை. சீனாவின் விங் லுத் என்றழைக்கப்படும் நடுத்தர, உயர்தர, ஆளில்லாத விமானம் பாகிஸ்தானில் சோதனை செய்து ஒத்திகைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. வணிக செயற்கைக்கோள்களின் படங்கள் சீனாவின் விங் லுத் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் தேவையான அளவை பாக்கிஸ்தான் எட்டவில்லை. ஒத்திகையில் அதனுடைய திறன்களைத் தவிர வேறு எதுவும் இன்னும் அறியப்படவில்லை.

இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தானின் கடற்படை, நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் அவசியமாக உள்ளது. பிரிட்டிஷ் சிந்தனையாளரான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டில் சக மற்றும் பாக்கிஸ்தானிய ஆய்வாளரான கமால் ஆலம் கடந்த கால மோதல்களின் போது கடற்படை “இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைவான பங்கைக் கொண்டிருந்தது” என்று வரலாற்று ரீதியாக “மூன்று சேவைகளில் பலவீனமானதாக” இருந்தது என்றார்.

“ஆயினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா அதன் நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவில் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்துடன் அதன் ஆதரவைக் கொண்டுவருகிறது” மற்றும் “தற்காப்பு விசை ஒரு தாக்குதலை நோக்கி நகர்கிறது.”

ஆயினும்கூட, விமான ஆதரவு “இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு கடற்படை நடவடிக்கைக்கும் முக்கியம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவிடம் ஹார்பூன்-பொருத்தப்பட்ட ஜாகுவார்கள் மற்றும் சூப்பர்சோனிக் ப்ராஹ்மோஸ்-பொருத்தப்பட்ட Su-30MKI flankers உட்பட ஏராளமான ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் உள்ளன. பாகிஸ்தான் கடற்படைக்கு பிரம்மோஸ்க்கு எதிராக குறைவாக வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு படை மட்டுமே உள்ளது.
(ஆதாரம் : டெபின்ஸ் நியூஸ்)

அரேபிய கடலையும் தாண்டி இந்தியா தனது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்காக அது செயல்படுவதால் அதன் (இந்தியாவின்) கடற்படை வளர்ந்து வருகிறது. பாக்கிஸ்தான் அதன் தற்காப்பு யுக்தியை மாற்றாதவறை வரை, அதன் கடற்படை இந்தியாவுடன் போட்டியிட முடியாது.

Comments are closed.