சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 03.03.2018

அமெரிக்காவின்நிலையற்ற (உறுதியற்ற) தன்மையே ரஷ்யாவின் புதிய போர்முறைகளுக்கு காரணம்

கெளத்தாவில் நடக்கும் அட்டூழியங்களை அமெரிக்கா தனக்கு சாதகமாக்கி தனது கொள்கைகளை நிலைநாட்ட முயலுகிறது

மியான்மரின் அழுத்தம் அதன் எல்லையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசம் இடம்பெயர காரணமாகின்றது

1.அமெரிக்காவின்நிலையற்ற (உறுதியற்ற) தன்மையே ரஷ்யாவின் புதிய போர்முறைகளுக்கு காரணம்

நியூயார்க்செய்தியின்படி

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் மேற்குலகத்தை புதியதலைமுறை அணு ஆயுதங்கள் கொண்டு அச்சுறுத்தினார். தொலைக்காட்சி உரையில் வியாழனன்று புட்டின், வெல்லமுடியாத (வெற்றிக்கொல்லமுடியாத) கண்டம்விட்டுகண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் புதிய அணுஆயுதநீர்மூழ்கிக்குண்டு ஆகியவை இராணுவ தொழில் நுட்பத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும், அமெரிக்கத் தலைமையிலான துருப்புகள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு முறையை பயனற்றதாக்குவதாக புட்டின் கூறினார்.

புளோரிடாவை இலக்காகக் கொண்ட பலபோர்வீரர்களை சித்தரிக்கும் அனிமேஷன் வீடியோக்களை உள்ளடக்கிய திரு.புட்டினுடைய விளக்கக்காட்சியாக, ஜனாதிபதி ட்ரம்ப் அடிக்கடி தனது Mar-a-Lago ரிசார்ட்டில் தங்கியுள்ள நிலையில், அமெரிக்க மற்றும் ரஷ்யாவிற்கும் இடையேயான பதட்டமான உறவில் இராணுவத் தூண்டுதலை அதிகப்படுத்தியது. மேலும் மதிப்புமிக்க புதிய அணுஆயுதப் பந்தயத்தின் கணிப்புகளுக்கு வழிவகுத்தது புட்டின் இந்த ஆயுதங்களைப் பற்றி அவை முரட்டுத்தனமாக இருந்தபோதிலும், ​​அவர் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்புகளின் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு கவனம் செலுத்தினார் என சில வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிரி அணுஆயுத ஏவுகணைகள் உயர்ந்து பறக்கப்படுவதையும், அவை இலக்குகளை அடைவதற்கு முன் அவற்றை தாக்கி அழிக்கமுடியும்.

ரஷ்யாவின் புதியவகை ஆயுதம் எதிரிகளின் பாதுகாப்பையும் கடந்து செல்வதற்கு கடினமான திறனைக் கண்டுபிடிப்பதற்கும், அதிகமான திறனை வளர்த்துக் கொள்வதற்கும் திருட்டுத்தனமான திறன்கள் இருப்பதாக அவர்தெரிவித்தார். ரஷ்யா மேற்குலகத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தியதன் மூலம் மூன்று சகாப்தங்களாக நடைபெற்று வந்த பனிப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. உண்மையில் இந்நிலைக்கு காரணம் மேற்குலகத்தின் கொள்கைமாற்றமே ஆகும். குறிப்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு (தலையீடு).

பிரிட்டிஷ் உலகில் ஆதிக்கம் செலுத்தியது போன்று அமெரிக்கா தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பிரிட்டிஷ்ன் சமநிலை அதிகார சிந்தனை, வலுவான சக்தியை எதிர்கொள்ள பலவீனமான சக்தியை ஊக்குவிப்பதைத் தொடர்ந்து முயன்றது. பிரிட்டிஷ் கொள்கையின் தவிர்க்கமுடியாத நீண்டகால விளைவுக்கு நடந்து முடிந்த இரண்டு உலகப் போர் சாட்சியாக இருப்பதை காணலாம்.

ரஷ்யாவை சமாதானப்படுத்துவதற்காக அமெரிக்கா பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம், மேற்கத்திய தலைமையிலான சர்வதேச சமூகம் இதை வரவேற்பதுடன், ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்ய அதன் அண்டை நாடுகளுடன் வலுவான அமைதியான உறவுகளை வளர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

ஆனால் மேற்கத்திய சக்திகளுக்கு இடையே உள்ள ஆழமான போட்டியால் அமெரிக்கா ஐரோப்பாவிற்கு எதிராக ரஷ்ய ஆக்கிரமிப்பை மறைமுகமாக ஊக்குவிக்கும் அதே வேளையில் ஐரோப்பாவை ரஷ்யாவிற்கு எதிராக தூண்டிவிடுகிறது.

அமெரிக்கா உலக வல்லரசாக இருக்க எந்த தகுதியும் இல்லை. இஸ்லாம் சர்வதேச விவகாரங்களில் மேலாதிக்கம் செலுத்தியபோது, இஸ்லாமியக் கிலாபத்தை (கலீஃபா) அரசு அதன் வல்லரசு என்ற நிலையில் உலகளாவிய பறந்து விரிந்த அதிகாரம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பெற்று வந்தது.

போர்கள் மிகக் குறைவாகவே அரிதாகவே நடந்தது, சச்சரவு ஸ்திரதன்மையின்மை, அமைதியின்மை, போராட்டம் ஆர்ப்பாட்டம் போன்றவை அறியப்படாதவைகளாக இருந்தன. மதச்சார்பின்மைவாத முதலாளித்துவ ஏகாதிபத்திய மேற்கத்திய சக்திகளின் மேலாதிக்கம் இடம்பெயர்ந்து தூக்கி எறியப்பட்டு மீண்டும் இஸ்லாமிய கிலாபத் (கலிஃபாத்) அரசு நிறுவப்பட்டு, மாநிலத்திற்குள் இஸ்லாம் நடைமுறைப்படுத்தி, முழு உலகத்திற்கும் அதன் வெளிச்சத்தை கொண்டுவருவதால் மட்டுமே, உலகம் சமாதானத்தையும் நீதியையும் பெரும்.

2.கெளத்தாவில் நடக்கும் அட்டூழியங்களை அமெரிக்கா தனக்கு சாதகமாக்கி தனது கொள்கைகளை நிலைநாட்ட முயலுகிறது

கெளத்தாவில் அசாத் ஆட்சியின் தாக்குதல்களின் அட்டுழியங்கள் உலகில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், சிரியாவில் தனது சொந்த நோக்கங்களை இன்னும் தீவிரமாக நிறைவேற்ற அமெரிக்கா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முனைந்துள்ளது, இது அசாத்(சிரியா), ரஷ்ய, ஈரானிய படைகள் மேலும் குர்துகள் மற்றும் துருக்கியர்கள் உட்பட மற்றுமுள்ள அனைத்து படைகளையும் சமநிலையில் எடுத்து செல்ல வேண்டும். எனவே ஒருபுறம் அமெரிக்கா அசாத்தை எதிர்கொள்கிறது;

ராய்ட்டர் செய்தியின் படி

யுத்தத்தின் கொடூரமான தாக்குதல்களில் ஒன்று, அரசாங்க வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகள் ஆகும். கிழக்குக் கௌடாவில் 12 நாட்களுக்கு மேல் நூற்றுக்கணக்கானவர்களை அது கொன்றுள்ளது; இது முற்றுகையிடப்பட்ட நகரங்கள் மற்றும் பகுதிகள் தலைநகருக்கு அருகில் உள்ள பிரதான போராட்ட குழுக்களின் கட்டுப்பாட்டு பகுதி ஆகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளியன்று சிரியாவின் நிலைமைப் பற்றி பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தலைவர்களிடம் பேசினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோன் மற்றும் டிரம்ப் ஒரு ஐ.நா.வுடன் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்க ஒப்புக் கொண்டதுடன், தாக்குதலை நிறுத்தத் தவறியது மேலும் ரஷ்யாவை டமாஸ்கசை கைப்பற்றும்படி அது அழைப்பு விடுத்தது.

ஐ.நா பாதுகாப்பு சபை சனிக்கிழமையன்று 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தது. யுத்தத்தில் சிரிய அரசாங்கத்தை ஆதரிக்கும் ரஷ்யா, தினசரி மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தங்களுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரை அழைப்பு விடுத்துள்ளது. (0700 GMT to 1200 GMT).

எவ்வாறிருந்த போதினும், அதே நேரத்தில் அமெரிக்காவின் கைக்கூலி (ஏஜெண்டு) எர்டோகன் சிரியாவிற்குள் நுழைவதற்கு துருக்கியை முன்னெடுத்தது;

மற்றொரு ராய்ட்டர்ஸ் செய்தியின் படி:

பிரிட்டிஷ் தளமான மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்புக் குழு வெள்ளியன்று, துருக்கிய போர் விமானங்கள் சிரியா அரசாங்க சார்பு படையினரை தாக்கின, வடமேற்கு சிரியாவின் ஆபிரோன் பிராந்தியத்தின் வடக்கில் ஒரு கிராமத்தில் குறைந்தபட்சம் 17 பேரையாவது கொன்றிருக்கும் எனக் கூறியது.

சிரிய குர்திஸ் YPG படையின் மூன்று உறுப்பினர்கள் இதில் அடங்குவர், மீதமுள்ளவர்கள், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை ஆதரிப்பவர்கள். மேலும் அவர்கள் துருக்கியின் தாக்குதலைத் தடுக்க உதவும் வகையில் கடந்த வாரம் சிரியாவிலுள்ள ஆபிரின் பகுதிக்குள் நுழைந்தனர்.

அமெரிக்கா, சிரியாவில் சிக்கலான தந்திரத்தை கையாளுகிறது. சிரியா மக்களுடைய உயிர்களை அழிக்க, அமெரிக்கா அதன் கூட்டாளிகளையும் கைகுளிகளையும் (ஏஜெண்டுகளையும்) பயன்படுத்துகிறது. தூரத்திலிருந்து இதை கையாளுதல், அல்லது ‘பின்னால் இருந்து இதை இயக்குதல்’ (மறைமுகமாக போரை நடத்துதல்) என்று ஒபாமா கூறியது போல, அமெரிக்க தன் வலிமையைக் காட்டிலும் அமெரிக்கா பலவீனத்தை மட்டுமே குறிக்கிறது. உலகம் இந்த உண்மையை எப்போது உணரும்? என்றுத் தெரியவில்லை.

3.மியான்மரின் அழுத்தம் அதன் எல்லையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசம் இடம்பெயர காரணமாகின்றது

இப்போது பர்மாவின் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை வெளியேற்றுவதில் அந்நாட்டு இராணுவம் திருப்தியுறவில்லை, மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் அதன் இராணுவம் இப்போது பங்களாதேச எல்லையில் குவிந்து காணப்படுகிறது.

பிபிசி செய்தி படி:

வங்கதேசம் அண்டை நாடான மியான்மரை தனது துருப்புக்களை தங்கள் எல்லையில் இருந்து திருப்பி அழைக்க கூறியுள்ளது, ரோஹிங்யா அகதிகளின் ஆயிரக்கணக்கான தங்கும்மிடங்களில் மியன்மார் இராணுவம் தன் படைத் துருப்புகளை வைத்திருக்கின்றன.

கடந்த ஆண்டு மியான்மரில் சுமார் 700,000 ரோஹிங்யா வீடுகளை எரித்தனர். இந்நிலையில் அவர்கள் (ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள்) இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு குறுகிய பகுதி நிலத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வியாழக்கிழமை, மியான்மர் படையினரின் பெரும்பகுதி அதன் எல்லையில் வங்கதேசம் அருகில் குவிந்தது. உடனே நிலைமையை சரி செய்ய வங்கதேசம் மியான்மர் தூதரை அழைத்து நிலைமையை சரி செய்ய கூறியது.

மியான்மர் அரசாங்கம், போர்க்குணம் கொண்ட குழுக்களினால் இராணுவத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ரோஹிங்கியா அகதிகள் கடந்த ஆண்டு ராகினில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், பொதுமக்களின் கிராமங்களை எரித்தல் ஆகியவற்றை பற்றிய விரைவாக அறிக்கைகள் வெளிப்படுத்தின.

மியான்மரின் நடவடிக்கைகளை “இன அழிப்பு” என்று ஐ.நா. நாடுகள் முத்திரை குத்தியுள்ளதுடன், அது இனப்படுகொலைக்கு ஒரு செயல் என்று கருதிவிட முடியாது என்று கூறியுள்ளது. அதன் பின்னர், நூறாயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் அதன் எல்லைப் பகுதியிலிருந்து வங்கதேசத்திற்கு தப்பி சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

மனங்கெட்ட வங்காளதேசத்தின் தலைமையால், மியான்மரில் தனது இராணுவத்தை இந்த நிலையில் முஸ்லிம்களை துரத்துவதற்கு தைரியமாக வழிநடத்தியுள்ளது. துரதிருஷ்டவசமாக முஸ்லீம்களின் படைகள் பொதுவாக தங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவோ அல்லது ஐக்கிய நாடுகளின் ‘அமைதிகாக்கும்’ பணிக்கான ஊதியத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இஸ்லாத்தின் கீழ், வெளிநாட்டு குஃபார்கள் முஸ்லிம்கள் எதிராக எந்த நடவடிக்கை எடுக்க தைரியமில்லாத நிலையில் இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். குர்ஆன் சுன்னா அடிப்படையில் மீண்டும் இஸ்லாமியக் கிலாஃபத் அரசை நிறுவிக்கொள்ளும் வரை முஸ்லீம்களின் கண்ணியம், கௌரவம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க முடியாது. இஸ்லாமியக் கிலாஃபத் அரசை மறுபடியும் நிறுவினால் மட்டுமே முஸ்லிம் உம்மா வெளிநாட்டு குஃபார்களின் தீமைகளிருந்து பாதுகாக்கப்படும்

Comments are closed.