சமீப பதிவுகள்

செய்தி பார்வை 07.03.2018

கொரியா (வடகொரியா மற்றும் தென் கொரியா அமைதி) பேச்சுவார்த்தைகளை தொடங்கியது

இலங்கை அரசாங்கம் அவசர நிலை பிரகடனத்தை அமல் படுத்தியது

மற்றோரு கங்கானியின் செயல்

1.கொரியா (வடகொரியா மற்றும் தென் கொரியா அமைதி) பேச்சுவார்த்தைகளை தொடங்கியது

தென் கொரிய தூதுக்குழு தூதர்கள் வட கொரியாவின் கிம் ஜோங்-ஐன் அவர்களின் அணுசக்தி ஆயுதங்களை அகற்றுவதற்கு விவாதிக்க தயாராக உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். தென் கொரியாவின் அறிக்கை, வட கொரியாவிற்கு தெளிவான வகையில் “வட கொரிய இராணுவ அச்சுறுத்தலை நிறுத்தினால் (அகற்றினால்) அதற்கு அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என மேற்கோளிட்டுள்ளது. வட கொரிய அதிகாரிகள் கடந்த காலத்தில் இந்த விளைவுகளை பற்றி தெரிவித்திருக்கிறார்கள், ஆனால் தென் கொரிய பிரதிநிதிகளுக்கு அதைக் கூறும் வகையில் இது அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் ஒரு தெளிவான செய்தியைக் காட்டுகிறது.

வட கொரிய அச்சுறுத்தலை மேற்கோள் காட்டி ஆசியா கண்டத்தில் (பசிபிக்கில்) அமெரிக்க தன் (உடுருவளை) இருப்பை தக்க வைக்கிறது. இது தென் கொரியாவில் 20,000 படைவீரர்களை நிறுவி, இப்பகுதியில் தங்களுக்கு அடித்தளம் அமைக்க முயலுகிறது. இவை அனைத்தும் சீனாவை மறைமுகமாக எச்சரிப்பதற்காக அதனைச் சுற்றி ஒரு கட்டுப்பாட்டு வளையத்தை ஏற்படுத்தி அதனை பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

ஆனால், அமெரிக்காவின் இந்த முனைப்பானது(நிலைப்பாடு) அதன் அடித்தளத்தை பலவீனமாக்கும் என்பதால் எந்த முடிவும் அதனால் (அமெரிக்காவால்) இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆனால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பு இருந்தபோதிலும் வட கொரிய அதிகாரிகள் குளிர்கால ஒலிம்பிக்கை பயன்படுத்தி தென் கொரியாவவுக்கு அழைப்பு விடுத்தனர். இவை அனைத்தையும் அமெரிக்கா மேற்பார்வை இல்லாமல் நடந்தது, இப்பொழுது வட கொரியா மற்றும் தென்கொரியா நேரடி பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்படுவது, அமெரிக்கா இல்லாமல் நடைபேறும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

2.இலங்கை அரசாங்கம் அவசர நிலை பிரகடனத்தை அமல் படுத்தியது

இரண்டு பேரைக் கொன்ற சம்பவத்தின் காரணமாக முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் இரவு அன்று டஜன் கணக்கான மசூதிகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. வகுப்புவாத வன்முறை பரவக்கூடும் என்ற அச்சத்தை அதுத் தூண்டியது. இலங்கையின் மனித உரிமைகள் மையத்தின் நிர்வாக இயக்குனரான ரஜீத் கீர்த்திதென்னக்கோன், “கட்டுக்கடங்காத வன்முறைக்கு வழிவகுத்த காவல்துறையின் திறமையின்மையை” கண்டனம் செய்தார். “சமூக ஊடகங்கள் தெல்டெனியா நகரில் 10 மணி அளவில் சிங்கள மக்களை ஒன்று திரட்டுகின்றன, 11 மணிவாக்கில் வன்முறை மோதல்கள் துவங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.” இதன் விளைவாக முஸ்லிம் சொத்துக்கள் வன்முறையாளர்களால் சூறையாடப்படுகின்றன. இதன் அழிவு மற்ற இடங்களுக்கும் 1 மணிவாக்கில் பரவத் தொடங்கியது” என தென்னகொன் அல் ஜசீராவிடம் கூறினார்.

ஸ்ரீலங்காவில் NFGG கட்சியின் செயலாளரான நஜாஹ் முஹம்மத், கண்டி மட்டுமல்லாது நாடு முழுவதிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக அல் ஜசீராவிடம் தெரிவித்தார். முந்தைய அரசாங்கத்தால் நாங்கள் அனுபவித்த அதே சூழ்நிலையை (கொடுமையை) தற்போதும் எதிர்கொண்டுள்ளோம், முஸ்லிம்களுக்கு எதிரான பதற்றம், வெறுப்பு, வன்முறை ஆகியவை குறிப்பாகப் பரவலாகப் பரவியிருக்கின்றன,” என்று முஹம்மத் கூறினார்.

3.மற்றோரு உளவாளியின் செயல்

பிரிட்டனின் வெளியுறவு செயலாளர், ரஷ்யா “உலகெங்கிலும் ஒரு தீய சக்தியாக” இருப்பதாகக் கூறி, தெற்கு இங்கிலாந்தில் பிடிக்கப்பட்ட உளவு மற்றும் அவரது மகளுக்கு பின்னால் ரஷ்யா இருப்பதாக புலனாய்வாளர்கள் புலன் விசாரணையில் தெரிய வந்தால் அதற்கு தக்க பதிலடி கொடுப்பதாக கூறினார். முன்னாள் ரஷ்யா உளவாளி சீர்கேய் ஸ்கரிப்பால் (66) மற்றும் அவரது மகள் (33) பின்னர் மோசமாக பாதிக்க பட்டார்கள். அவர்கள் வெளிப்படையாக எதையும் தெரிவிக்காத நிலையில், இருவரும் உளவாளியாக செயல்பட்டதால் ஒருவர் ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டார், ஸ்கரிப்பால் பிரிட்டனில் 2010ம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டார். இந்நிகழ்வு 2006 ஆம் ஆண்டு லண்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளியாக இருந்த அலெக்ஸாண்டர் லிட்வின்பெங்கோவின் வழக்கை நினைவூட்டுகிறது.

Comments are closed.