சமீப பதிவுகள்

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தலை பற்றிய இஸ்லாமிய பார்வை

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இருக்கும் சூழ்நிலையில், (அங்குள்ள) ​​முஸ்லிம்களுக்கு தாங்கள் யாருக்கு வாக்குபதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் வரலாம். அங்குள்ள ‘அதிகாரப்பூர்வ ஆன்மிக’ பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடியவர்களும் அரசு அதிகாரிகளும் தற்போதைய அதிபர் புதினுக்கு வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இன்னும் சிலர் ‘Apple Party’ என்ற கட்சியின் தலைவர் கிரிகோரி யாவ்லின்ஸ்கி (Grigory Yavlinsky) என்பவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இதனால் அவர் ரஷிய படைகளை சிரிய மண்ணிலிருந்து வெளியேற்றுவார் எனற அழைப்பையும் விடுத்துள்ளனர். இன்னும் இத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை மாறாக எதிர் கட்சியினர் ஒடுக்கபடுகின்றனர் என்று கூறி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பையும் சிலர் விடுத்துள்ளனர். உண்மையில் இவர்கள் அனைவரும் அங்குள்ள முஸ்லிம்களை ஏதாவது ஒருவகையில் திசை திருப்புகின்றனர்.

 

ஆனால் முஸ்லிம்கள் இதில் எதையும் ஏற்று கொள்ள முடியாது, ஏனெனில் அல்லாஹ் (சுபு) நமக்கு பின் வருமாறு கட்டளையிடுகிறான்:

(وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ)

“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.” [அஹ்சாப்: 36].

இஸ்லாம் அல்லாத சட்ட அமைப்பை ஏற்று கொள்வது ஹராம் என்று அல்லாஹ் (சுபு) அறிவிக்கின்றான். அல்லாஹ் (சுபு) கூறுகின்றான்,

(إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ أَمَرَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَـكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ)

”அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) ஆட்சி அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான்” [யூஸுப்: 40].

மேலும் அல்லாஹ் (சுபு) கூறுகின்றான்:

(فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّىَ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لاَ يَجِدُواْ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُواْ تَسْلِيمًا)

“உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.” [அந் நிஸா: 65].

அல்லாஹ் (சுபு) இஸ்லாமையும் ஷரியாவையும் தொடர்பு படுத்துகிறான். அதாவது, முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டங்களையோ அல்லது இஸ்லாம் அல்லாத சட்டங்களையோ இவற்றில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்று கூற வில்லை. ஆக, ரஷியாவில் எந்த ஒரு வேட்பாளரும் இஸ்லாமிய சட்டங்கள் படி ஆட்சி செய்வோம் என்று கூறவில்லை. மேலும் அவர்கள் முஸ்லிம்களும் இல்லை. ஆக, இத்தேர்தலில் பங்கு கொள்வது ஹராமாகும். ஏனனில் அவ்வாறு வாக்களித்து அவர்கள் ஜெயிக்கப்டுவது இஸ்லாம் அல்லாத சட்டங்கள் ஜெயிக்கின்றது என்று அர்த்தமாகும்.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்:

(أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللّهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُونَ)

“அறியாமை காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” [அல்மாயிதா: 50].

மேலும் அல்லாஹ் (சுபு) கூறுகிறான் :

(إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ يَقُصُّ الْحَقَّ وَهُوَ خَيْرُ الْفَاصِلِينَ)

“அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.” [அல் அன்ஆம்: 57].

ரஷ்யாவிலோ அல்லது உலகில் வேறு எந்த நாட்டிலோ முஸ்லிம்கள் ஒரு ஜனாதிபதியைத் தேர்வு செய்ய தடுக்கப்படுகிறார்கள் என்பதற்காக இஸ்லாமிய ஷரியாவில் ஜனநாயகம் அனுமதிக்கப்பட்டதாகவோ அல்லது வேறு ஒரு சட்ட அமைப்பை ஏற்றுகொள்வது ஆகுமாக்கப்பட்டது என்றோ கூறிவிட முடியாது. ஆக, முஸ்லிம்களில் யாரெல்லாம் இஸ்லாமை கொண்டு ஆட்சி செய்ய கூடிய அரசை நிலை நிறுத்த முயற்சி செய்யாமல் இருக்கிறார்களோ அவர்கள் பாவிகளே.

இவ்வரசை நிலை நிறுத்துவது முஸ்லிம்கள் குழுவாக செய்ய கூடிய கடமையாகும். உம்மத்தை ஒன்றிணைக்கூடிய இந்த அதி முக்கிய வேலையை செய்ய ஒரு அரசியல் கட்சி இன்றியமையானதாகும்.

இஸ்லாமிய அரசியல் கட்சியான ஹிஸ்பு தஹ்ரிர் என்ன செய்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும். முஸ்லிம்கள் அனைவரையும் இந்த உழைப்பில் பங்கு கொள்ள நாம் அழைப்பு விடுக்கின்றோம். இவ்வமைப்பின் சிந்தனை தெளிவின் மூலம், மனிதர்கள் சந்திக்க கூடிய அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி மற்றும் இதர பிரச்சனைகளை தீர்க்க இஸ்லாம் எப்படி வழி நடுத்துகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளில் மட்டும் சுருக்கி கொள்ள கூடிய விஷயமல்ல மாறாக அது நடைமுறை படுத்த வேண்டிய வாழ்கை வழி முறை என்று இவ்வமைப்பின் சிந்தனையை யாரெல்லாம் படிக்கிறார்களோ அவர்களுக்கு தெரியும்.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்:

(وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ)

“இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.” [அல் மாயிதா: 2].

Comments are closed.