சமீப பதிவுகள்

செய்தி பார்வை 09.03.2018

1.கேளிக்கை துறைக்காக 64 பில்லியன் டாலர்களை சவூதி அரேபியா முடிதலீடு செய்ய உள்ளது

அடுத்த தசாப்தத்தில் 64 பில்லியன் டாலர்களை கேளிக்கை துறைக்கு முதலீடு செய்ய உள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. கேளிக்கை துரையின் மூத்த அதிகாரி 5000 நிகழ்ச்சிகளை இந்த வருடம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் முதல் இசை கூத்து அரங்கத்தை அமைக்கும் பனி ரியாத்தில் தொடங்கியுள்ளது. இவை அணைத்தும் இலக்கு 2030 எனும் இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்களின் திட்டத்தினுள் அடங்கும். 32 வயதுடைய இவர் நாட்டின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தி நாட்டின் எண்ணெய் வளத்தின் மீதுள்ள சார்பு நிலையை குறைத்து, இந்த கேளிக்கை துறையின் வருமானத்தை சார்ந்து அரசு இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இத்துறையின் மூத்த அதிகாரி அகீல் அல் காதிப் கூறியதாவது, கடந்த காலத்தில் முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வெளியில் அவர்களின் படைப்பை தயாரித்து அதனை சவூதி அரேபியாவிற்குள் கொண்டுவருவர். இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது, கேளிக்கை சம்மந்தமான அனைத்தும் இந்நாட்டிற்கு மேற்கொள்ளப்படும் என்றார். இறைவன் நாடினால் 2020 ஆண்டு நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள். [மூலம் பி.பி.சி.].

தற்போது பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் சல்மான், அவர்களின் ஆலோசனை மூலம் கேளிக்கை துறையை சவூதி அரேபியாவில் மேம்படுத்த நாடுகிறார். இதன் மூலம் மேற்கத்திய கலாச்சாரத்தை மக்கள் மீது கொண்டுசேர்க்க உள்ளார். மக்களின் பணத்தை திரட்டி இத்தகைய மேற்கத்திய கலாச்சாரத்தை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு பதிலாக இந்த பணத்தின் மூலம் ஏமன் போரை முடிவுக்கு கொண்டுவரலாம், அல்லது சிரியாவை விடுவிக்கலாம் அல்லது ரோஹிங்கிய முஸ்லிம்களை பாதுகாக்கலாம். ஆனால் இளவரசர் சல்மான் சவூதி அரசை இன்னொரு துபாய் நாடாக மாற்ற விரும்புகிறார்.

2.இந்தோனேஷியா பல்கலைக்கழகங்கள் அடிப்படைவாதம் எனும் அச்சுறுத்தலால் நிகாபை தடைசெய்துள்ளது

இரு இந்தோனேஷியா இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் பெண்களை முகத்தை மறைப்பதை தடை செய்துள்ளது. ஸுனன் கலீஜாக ஸ்டேட் இஸ்லாமியா பல்கலைக்கழகம் கடந்த வரம் மூன்று டஜன் பெண்களுக்கு நிகாப் அணிந்ததால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். முகத்தை மறைத்தல் வலை குடா நாடுகளில் சாதாரண விஷயமாக இருந்தாலும் , இந்தோனேசியாவில் இது அரிதான ஒன்று. முகத்தை மறைப்பதென்பது இந்தோனேசியாவில் வரவேற்க தக்க ஒன்று அல்ல. மற்றொரு பல்கலைக்கழகமும் தேர்வு நாட்களில் நிகாப் அணிய தடை விதித்துள்ளது. இந்தோனேசியாவின் மத சகிப்புத்தன்மை என்பது சமீபத்தில் ஓரின சேர்க்கை தொடர்பான சட்டம் மற்றும் திருமணத்திற்கு முன்பு உறவு மேற்கொள்ளுதல் எனும் விஷயங்கள் சார்பான சட்டங்களை அரசு வெளியிட்டதின் மூலம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. நங்கள் அரசு பல்கலைக்கழகம், நங்கள் நடுத்தர இஸ்லாத்தை பரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளோம் என்று வேந்தர் யுடிங் வஹ்யுடி செய்தியாளர்களிடம் கூறினார். ]மூலம் – டெய்லி மெயில் ]

மேற்கத்தியர்கள் மதசார்பின்மை மற்றும் இஸ்லாத்தின் மீதான தாக்குதல்களை வெளிகொண்டுவராமல், இந்தோனேஷியா அதிகாரிகள் இஸ்லாத்தில் மேற்கத்திய சிந்தனையை திணிக்க நாடுகின்றனர். இதன் மூலம் இந்தோனேஷியா அதிகாரிகள், அவர்களின் கூட்டாளிகளான மேற்கத்தியவர்களை விட எந்த வகையிலும் மாறு படவில்லை, மேலும் இந்தோனேசிய முஸ்லிம்கள் இஸ்லாத்தை பாதுகாக்க ஒன்றாக நிற்க வேண்டும்.

3.வெற்றி சாத்தியமில்லை – பாகிஸ்தானிய அதிகாரிகள் அமெரிக்காவிடம் தாலிபனுடனான போரை நிறுத்த அறிவித்துள்ளனர்

கடந்த செவ்வாய் கிழமை, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரி, அமெரிக்கா ஆப்கானில் போரை வென்றுவிடலாம் எனும் எண்ணத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றார். ஆப்கான் மக்களின் துயரத்தை நிறுத்துங்கள். நாம் இந்த போரை வெல்வதற்கு பதிலாக நிறுத்த நினைக்க வேண்டும் என்றார். ஆப்கான் போர் 17 வது ஆண்டாக தொடரும் நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஆப்கான் மீதான ராணுவ முயற்சியை விரிவுபடுத்தி தாலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க கூறினார். ஆனால் சமீபத்தில் தாலிபான் மேற்கொண்ட தொடர் தாக்குதலால் இந்த முயற்சியை டிரம்ப் சந்தேகிக்கின்றார். தாலிபனுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் எனும் தாலிபான் கோரிக்கையை அமெரிக்கா தொடர்ந்து நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவில் இருக்கும் அஷ்ரப் காணியின் அரசு, ஆப்கான் நாட்டில் 60 சதவீதத்திற்கும் குறைவான இடத்தையே கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர். அமெரிக்காவால் ஆப்கானில் 44 சதவீதத்தை வெல்ல முடியும் என்பது சாத்தியமற்றது என அமெரிக்கா ராணுவ அதிகாரி ஐஞ்சுஞ் பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு தலைமையகத்தில் கூறியுள்ளார். “இந்த போரை அரசியல் ரீதியாக தீர்க்கலாம். நாம் ஒன்று படலாம். இன்னும் எத்தனை காலம் ஆப்கானிஸ்தானில் நாம் போர் செய்ய உள்ளோம் என்றார். [மூலம் : வாஷிங்டன் டைம்ஸ்].

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவை வெளியே அனுப்ப ஒரே வழி, கிலாபத்தை நிலைநாட்டுவதாகும். நபித்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கிலாபத் மட்டுமே மேற்கத்தியவர்களின் குறிக்கீடை இரு நாட்டிலிருந்தும் தடுக்க முடியும்

Comments are closed.