சமீப பதிவுகள்

ஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது

செய்தி:

பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமெரிக்க அரசுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சமீபத்தில் தான் மேற்கொண்ட கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க விஜயத்தின் போது எத்தியோப்பியாவில் இருக்கும் போது இந்த கண்டத்தில் சீனா மேற்கொள்ளும்மி கப்பெரிய அளவிலான பொருளாதார ஈடுபாடானது அபாயகரமாக உள்ளது ஏனெனில் அது “சார்புடைமையை ஊக்குவிக்கிறது” மற்றும் “ஆப்பிரிக்காவின் இறையாண்மையை இழக்கச் செய்கிறது” என எச்சரித்தார் என்று செய்தி வெளியிட்டன.

கருத்து:

ஆப்பிரிக்காவில் டில்லர்சன் விஜயம் செய்வதற்கு தேர்ந்தெடுத்த ஐந்து நாடுகளை வைத்து பார்க்கும்போது வாஷிங்டனுடைய முதலாம் மற்றும் முக்கிய நலன் என்னவென்றால் அதன் பாதுகாப்பு மட்டுமே என்பதும் அதைத்தவிர ஆப்பிரிக்காவில் வேறு எதையும் அது நாடவில்லை அல்லது ஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து அது கவலை கொள்ளவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

முதலாளித்துவம் என்று உதயமானதோ அன்றே ஆப்பிரிக்க கண்டம் தனது இறையாண்மையை தொலைத்துவிட்டது அதன்பிறகு எப்போதும் அதை அது அனுபவித்ததே கிடையாது, தற்போது தங்களுக்கு என தேசிய கீதங்கள், நாணயங்கள், கொடிகள் மற்றும் தேசிய விடுமுறையை அதன் தேசங்கள் கொண்டிருந்தாலும் இவையனைத்தும் இறையாண்மையின் உண்மையான நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை.

19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் எழுச்சியடைந்த சமயத்தில், அது பூர்வீகமாக வசித்து வந்தவர்களை நசுக்குவது, அவர்கள் மீது அரசியல் ஆதிக்கம் கொள்வது, பொருளாதார ஆதிக்கம் கொள்வது, இன பாகுபாடு கொள்வது போன்ற செயல்களை கையோடு கை சேர்த்து செயல்படுத்தியது இது இறுதியாக சுரங்கங்கள், விவசாய பொருட்கள், தாதுப் பொருட்கள், மனித ஆற்றல் மற்றும் அவர்களுடைய நலன்களை பாதுபாப்பதற்காக வேண்டி முக்கியமான மூலோபாய பகுதிகள் மீது நேரடி ஆக்கிரமிப்பை மேற்கொள்வது போன்று அதன் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான தளமாக விளங்கும் அளவுக்கு ஆப்பிரிக்காவை துண்டாடும் நிலைக்கு இட்டுச்சென்றது, இதைதான் இதற்கு முன்பு அமெரிக்காவும் ஆசியாவும் அனுபவித்தது.

முதலாளித்துவ நாடுகள் ஒரு இடத்தில் தங்களை நிலைதிறுத்திய பிறகு, அங்குள்ள பெருவாரியான வளங்களை சுரண்டின மேலும் தங்களுடைய காலனியாதிக்கத்தை நேரடியாக கொண்டிருந்த போது தங்களுடைய நலன்களை அடைவதற்காக ஜன்ஜிபர், யுகாண்டா, சொகோடோ சுல்தான்கள் போன்று மறைமுகமாக உள்ளூர் ஆட்சியாளர்களை பணியமர்த்தி திறைக்கு பின்னால் இருந்து காலனியாதிக்க ஆலோசகர்கள் மூலம் அவர்களை கண்காணித்து வந்தன.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தோன்றிய சுதந்திர போராட்ட இயக்கங்கள் தேசிய இறையாண்மைக்காக போராடுகிறோம் எனும் வாதத்தை அதனுடன் எடுத்துக்கொண்டன மேலும் இந்த வாதத்தை சுதந்திர போராட்டக்காரர்கள் உரக்க எக்காளமிட்டு வந்தனர். எனினும், விடுதலைக்கான இந்த செயல்பாடானது உண்மையில் பிரத்தானிய மற்றும் பிரஞ்சு காலனிகளின் ஆதிக்கத்தை தங்கள் வசம் எடுத்துக்கொவதற்கும் உலகில் தமது ஏகாதியத்தை வளர்ப்பதற்குமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யாவின் திட்டமாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்கா உலகில் ஆதிக்கத்தை கொண்டது அதேநேரத்தில் இந்த போரின் மூலம் இங்கிலாந்தும் பிரான்சும் பலவீனம் அடைந்து சோர்வடைந்தன. சோவியத் யூனியனும் உலக அரங்கில் தான் ஒரு புதிய சித்தாந்த அரசாக உருவாக வேண்டும் என்று மிகவும் ஆர்வம் கொண்டிருந்தது.

காலனியாதிக்க முதலாளிகளிடமிருந்து உண்மையான சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடைய வேண்டும் என்று நம்பிக்கையில் இந்த சுதந்திரத்திற்கான அழைப்பை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மக்கள் தழுவிக்கொண்டனர், ஆனால் அது ஒருபோதும் நடைபெறவில்லை.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு நவீன காலனியாதிக்கத்தின் தற்போதய நிலை மிகவும் மோசமடைந்துள்ளது, சர்வதேச அளவில் தற்போது
மாபெரும் சக்தியாக அமெரிக்கா விளங்குகிறது, அதேவேளையில் இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இதர நாடுகள் சிறிய அளவிலான ஆதிக்கத்தையே கொண்டுள்ளன. இன்று ஒவ்வொரு தேசத்தின் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் அமெரிக்கா அதிகாரத்தை கொண்டுள்ளது அது எந்தவொரு நாட்டின் இறையாண்மையையும் கருத்தில் கொள்ளாமல் இந்த கண்டத்தில் மட்டும் 6,000 இராணுவ வீரர்களுக்கும் மேலாக கொண்டு, தனது இராணுவ தளங்களை ஆப்பிரக்காவின் அனைத்து இடங்களிலும் அமைத்துள்ளது.

ஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து அமெரிக்கா எச்சரிப்பது என்பது இந்த கண்டத்தை அவமதிப்பது, இகழ்வது மற்றும் கேலி செய்வது போன்ற செயலாகும், உண்மையில் இந்த மாதிரியான ஒரு அறிக்கையை விடுவதற்கான அருகதையை அமெரிக்கா பெற்றிருக்கவில்லை, ஏனெனில் அது தான் நாடியவை அனைத்தையும், எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டுவதற்கு ஆப்பிரிக்காவை புறவாயிலாக பயன்படுத்தி வருகிறது. அரசியல் குறித்து குறிப்பிடத் தேவையே இல்லை அது அதன் ஆட்சியாளர்களை அடிமைகளை போன்று நடத்தி அவர்களுக்கு கட்டளையிட்டு வருகிறது. இவ்வாறிருந்தும் அதன் இறையாண்மையை பாதுகாப்பது குறித்து ஆப்பிரிக்காவை அது எச்சரிக்கின்றது!

இன்றைய நிலையில் ஆப்பிரிக்காவும் மூன்றாம் உலக நாடுகளும் கிலாஃபா ராஷிதாவின் அரசுக்கு கீழ் இயங்கக்கூடிய ஒரு நியாயமான மற்றும் நீதியான இஸ்லாமிய சித்தாந்தத்திற்கான தேவையுடையதாக இருக்கின்றது, அது தீங்கிழைக்கக்கூடிய மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய முதலாளித்துவ சித்தாந்தத்தை போன்றல்லாது உண்மையான சுதந்தரத்தையும் இறையாண்மையையும் வழங்கக்கூடியதாக இருக்கும்.

முதலாளித்துவத்தை கைவிட்டு இஸ்லாத்தின் பக்கம் திரும்புவதற்கான தருணம் வந்துவிட்டது.

Comments are closed.