சமீப பதிவுகள்

செய்தி பார்வை 14.03.2018

1.டிரம்பால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டில்லர்சன்.
2.பிரிட்டனில் அரசாங்க பயங்கரவாதம்.
3. சவுதியில் கச்சேரி

1.டிரம்பால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டில்லர்சன்.

அமெரிக்க வெளியுறவு செயலாளரான ரெக்ஸ் டில்லர்சனை டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து அகற்றினார், முன்னாள் Exxon Mobil யின் தலைமை நிர்வாக அதிகாரியான டில்லர்சனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிரம்பின் இந்த திடீர் நடவடிக்கையில் அவரின் காலம் முடிவுக்கு வந்ததோடு, நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைக் குழுவை குலுக்கியது.

பல வாரங்களாக நடந்துக்கொண்டிருந்த ஊழியர்களின் கொந்தளிப்புக்கு பின் டில்லர்சனின் வெளியேற்றத்தை டிரம்ப் தன் டுவிட்டர் பக்கத்தில் காலை 9 மணி அளவில் பதிவு செய்து, CIA இயக்குனரான மைக் பாம்பியொவை மாநில செயலாளராக நியமித்ததாக அறிவித்தார். ஆனால், டிர்ம்புடைய இந்த முடிவின் சில மணி நேரங்களுக்கு முன்னே, “செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தன் அனைத்து பொறுப்புகளையும் துணை செயலாளரான ஜான் சல்லிவனிடம் ஒப்படைப்பேன்” என்று டில்லர்சன் டிரம்பிடம் கூறியிருந்தார்.

CIA இயக்குனரான மைக் பாம்பியொ டில்லர்சன் பதிலாக செயல்படுவார். அதேப்போல பாம்பியொவின் இடத்தில் CIA வின் தற்போதைய துணை இயக்குனரான ஜினா ஹாஸ்பெல்யை டிரம்ப் நியமித்துள்ளார். JCPOA அல்லது ஈரான் அணுசக்தி உடன்பாடு போன்ற கணிசமான பிரச்சினைகளில் டில்லர்சனுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக டிரம்ப் இந்த முடிவுக்கு வந்ததாக பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

வடகொரியாவுடனும் JCPOA வுடனுமான பேச்சுகள் விரைவாக வரயிருக்க,
டிரம்ப் அமைச்சரவையின் மறுசீரமைப்பை தயாரிப்பு செய்கிறார். டில்லர்சனை அகற்றியதில் தன் முடிவுகளில் அடிக்கடி கருத்து வேறுபாட்டை காட்டுகின்ற, சில நேரங்களில் பகிரங்கமாகவும் பேசுகின்ற டில்லர்சனின் குரலை நீக்கியுள்ளார். டிரம்ப்பின் புதிய நியமனங்கள்,அதிகாரத்தின் நிலைகளில் அவரது திட்டங்களுக்கு மிகவும் ஒத்துப் போகின்றன குரல்களாக இருக்கும்.

 

2.பிரிட்டனில் அரசாங்க பயங்கரவாதம்.

பிரித்தானிய மண்ணில் நடந்த அரசாங்க பயங்கரவாதத்தின் மற்றொரு சம்பவம் பிரிட்டனை கோபமடைய வைத்துள்ளது.

மார்ச் 4 மதியத்தில், ஒரு ஆணும் ஒரு இளம் பெண்ணும் பெஞ்சில் சரிந்து இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதை ஆராய்ந்ததில் அளவுக்கு அதிகமாக opioid போதைப்பொருளை பயன்படுத்தியதால் ஆன இறப்பு என தெரியவந்தது. ஆனால் போலீஸ் சம்பவம் இடத்தில் வந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டபோது, இது போதைப்பொருளால் ஆன ஒரு தற்செயலான இறப்பில்லை என்று தெரிந்துக்கொண்டனர். இறந்த மனிதர் 66 வயதான செர்ஜி ஸ்க்ரிபால் ரஷ்ய இராணுவ உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி மற்றும் 1990 களில் பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத்துறைக்கு (MI6) உளவுப்பார்த்தவர்.2010 இல் உயர்வான உளவு இடமாற்றத்தில் அவர் UK விற்கு வந்திருந்தார். இந்த இருவர் பற்றிய தகவல் தெரிந்த போலிஸ் சரிந்து போனார்கள் ஏனெனில், இதற்கு முன் இதே போன்ற சம்பவம் முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிக்கும் நடந்தது. உளவு விளையாட்டில் நீங்கள் இல்லையென்றாலும் நீங்கள் இழத்த துரோகம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சும்மாவிடாது என்று உளவு உலகத்திற்கு கூறுகிறது புட்டின் கீழ் நடந்த இந்த தாக்குதல்கள்.

 

3. சவுதியில் கச்சேரி

சவுதி அரேபியாவின் சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு ஏற்ப மார்ச் 30 ம் தேதி Tamer Hosny என்ற ஒரு பிரபலமான எகிப்திய பாடகர், சில நேரங்களில் பாலியல் சம்பந்தமாக பாடக்கூடியவரின் கச்சேரியிற்கான விதிமுறைகளை சவுதி இராஜ்யத்தின் பொழுதுபோக்கு அதிகாரத்தால் வழங்கப்பட்டது. ஆனால், மிகப் பெரிய முரண்பாடாக கருதவேண்டிய இந்த சூழ்நிலையை தவிர்க்காமல் மாறாக, “இசை நிகழ்ச்சியின் போது நடனம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, கைகளை உயர்த்தி அசைத்தலும் கூடாது” போன்ற ஒழுங்குமுறைகளை மட்டும் பயணச்சீட்டுகளில் குறித்து வழங்கப்பட்டது. இளவரசர் முஹமதின் சீர்திருத்தங்களில் நிறைய மக்கள் மிகவும் சங்கடமானவர்களாக உள்ளனர், இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் கைது செய்யப்படுவதற்கு பயந்து அமைதியாக இருக்கின்றனர். Tamer Hosny ன் இந்த கச்சேரியை குறித்து பல ஆன்லைன் பதிவுகள் கண்டனம் செய்தன ஆனால விதிகள் பற்றி எவரும் கூறவில்லை. நாட்டு பொருளாதாரத்தை தரையில் தள்ளுவதன் காரணமாக இதுப்போன்ற செயல்களில் ஈடுபட மன்னர் ஆட்சி கட்டாயப்படுத்துகிறது. சவூதியை மேற்கத்தியமையம் ஆக்குதல் வெறும் ஆரம்பம்தான்.

Comments are closed.