சமீப பதிவுகள்

அமெரிக்க அரசுடைய முன்னாள் செயலாளரின் ஆப்பிரிக்க விஜயமானது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனும் பெயரில் முஸ்லிம்களுடைய இரத்தத்தை அதிக அளவில் சிந்துவதற்காக மட்டுமே கவனம் செலுத்துவதாக உள்ளது

வாஷிங்டனில் 2017 நவம்பர் மாதம் அமெரிக்க அரசுடைய செயலாளர் டில்லர்சனால் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மிகச் சிலரே கலந்து கொண்ட ஆப்பிரிக்க அயலுறவு அமைச்சர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மூத்த அரசுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அந்த அமைச்சர்களின் சந்திப்பானது வர்த்தகம், மேம்பாடு மற்றும் பாதுகாப்பு விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

டில்லர்சன் மேற்கொண்ட அந்த விஜயம் பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பையும் சோமாலியாவில் அல் ஷபாபுக்கு எதிராகவும் தென் கிழக்கு நைஜீரியா மற்றும் லேக் சாட் பகுதியில் போகோ ஹராமுக்கு எதிராகவும் போர் செய்துவரும் அதன் முக்கிய ஆப்பிரிக்க கூட்டணி நாடுகளுக்கான அமெரிக்காவின் ஆதரவை உறுதிபடுத்துவதை குறித்தே அதிகமாக கவனம் செலுத்தியதாக இருந்தது.

டொனால்டு டிரம்ப்புடைய ‘முதலில் அமெரிக்கா’ எனும் திட்டமானது அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் பேராவலுடைய சதுரங்க விளையாட்டில் தன்னை சதுரங்க ஆட்டக்காரராக ஒருபுறம் நிலைநிறுத்தி மற்ற அனைத்து தரப்பினரையும் ஒன்று நண்பர்களாகவோ அல்லது எதிரிகளாகவோ வைத்து பார்ப்பதாக உள்ளது. இது போன்றதொரு திட்டத்தை கொண்டுள்ள அமெரிக்கா அதனுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் மேலும் அது தன்னை உலகலாவிய அளவிலான பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய சக்தியை உடையதாகவும் பார்க்கப்பட வேண்டும் என நாடுகிறது. எந்த அளவுக்கு என்றால் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் அழிவின் விழிம்பில் இருக்கும் மற்றும் அழியாமல் தாங்கிப் பிடிப்பதற்காக போராடி வரும் மதசார்பற்ற முதலாளித்துவ கொள்கைக்கு எதிராக இஸ்லாம் ஒரு மாற்று சித்தாந்தமாக எழுச்சி அடையாமல் இருப்பதை உறுதி செய்வது எனும் தனது முதல் திட்டத்தை சீரமைக்கவும் மறுகட்டமைப்பு செய்யும் அளவுக்கு அது சென்றுள்ளது. அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரில் தனது முக்கிய கூட்டாளிகள் என கூறுப்படும் ஆப்பிரிக்க கைக்கூலிகள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு திட்டத்தை முன்வைத்து அவர்களை சந்திக்க திட்டமிட்டது, அது முன்வைத்த திட்டங்களாவது:

முதலாவதாக, எதியோப்பியா, அது இந்த பகுதியின் பெரியதொரு மற்றும் மிகவும் திறனுள்ள இராணுவத்தை கொண்டுள்ளது, அது 2008ம் ஆண்டு முதல் அல் ஷபாபிற்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. இந்த நாடு தற்போது தீவிரமான அரசியல் பதற்றம் மற்றும் நிலையற்ற தன்மையை எதிர்கொண்டு வருகிறது, இவ்வாறிருந்தும் ஆட்டிஸில் (Addis) டில்லர்சனுடைய கவனம் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து மேலோங்கியதாகவே இருந்தது. அவர் தனது விஜயத்தை இந்த அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனும் உத்திரவாதத்தை அளிக்கவும், மற்றும் இந்த அரசிடம் உள்ளூர் அரசியல் பிரச்சனைகள் இந்த பகுதியில் அது மேற்கொண்டிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சிகளிலிருந்து தன்னை திசை திருப்பி விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கவும் பயன்படுத்திக் கொண்டார்.

இரண்டாவதாக, ஜிபோட்டி, 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட ஒரு சிரிய நாடான ஜிபோட்டி இந்த பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு மையமாக செயல்பட்டு வருகிறது. மூலோபாய ரீதியில் அது சோமாலியாவுக்கு தெற்கேயும் போரினால் சிதைந்து போயுள்ள யமனிலிருந்து செங்கடலுக்கு குறுக்கேயும் அமைந்துள்ளது. ஜிபோட்டியிலுள்ள லெம்மோன்னியர் முகாம் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க படைகளுக்கு தங்குமிடமாக விளங்குகிறது, இது ஆப்பிரிக்காவில் இருக்கும் அமெரிக்க வீரர்களில் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருக்கின்றது. சோமாலியாவுக்கு அல் ஷபாப் அச்சுறுத்தலாக இருக்கும் வரை லெமோன்னியர் முகாம் இந்த பகுதியில் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பின் மையக்கல்லாக இருக்கும். டில்லர்சனுடைய ஜிபோட்டியின் விஜயம் அந்த நாட்டில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கமும் அதன் இருப்பையும் எதிர்கொள்வதை நோக்கமாக வைத்தே மேற்கொள்ளப்பட்டது. கடந்த தசாப்தத்தில், சீனா இச்சிறிய நாட்டில் பல மில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளது மேலும் தன்னை ஜிபோட்டியின் முதன்மையான மேம்பாட்டுக்கான மற்றும் பாதுகாப்புக்கான கூட்டாளியாக மாற்றியமைக்க துடிப்புடன் செயலாற்றி வருகிறது. பீஜிங் சமீபத்தில் ஜிபோட்டியில் இரண்டு பெரிய திட்டங்களை செய்து முடிந்துள்ளது: நிலத்தால் சூழ்ந்துள்ள எதியோப்பியாவில் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ரயில் பாதை அமைத்தது மற்றும் அமெரிக்காவின் இராணுவ தளத்திற்கு போட்டியாக பரந்த அளவிலான சீனாவின் முதல் சர்வதேச இராணுவ தளத்தை அமைத்தது.

மூன்றாவதாக, கென்யா, இது அல் ஷபாபின் பல கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது, அது சோமாலியாவுக்கான ஆப்பிரிக்க கூட்டமைப்பு பணியின் (AMISOM) அங்கமாக பல்லாயிரக்கணக்கான படைகளை கொண்டுள்ளது. கென்ய பாதுகாப்பு படைகள் அங்கமாக இருக்கும் சோமாலியாவுக்கான ஆப்பிரிக்க கூட்டமைப்பு குழு (AMISOM), 2020ல் சோமாலியாவிலிருந்து வெளியேறும் என்று தான் அறிவித்த காலக்கெடுவை அடைவது சாத்தியமற்றது என சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா தனது பழமையான கூட்டாளியான கென்யாவுக்கு வாஷிங்டன் வழங்கி வரும் இராணுவ, புலனாய்வு உதவி மற்றும் சோமாலியாவில் தொடர்ந்து சண்டையிட வேண்டும் என்றும் அதற்கு வேண்டிய நிதியுதவியை தொடர்ந்து வழங்கும் என்று மீண்டும் உத்திரவாதம் அளிப்பதற்காக வேண்டி டில்லர்சன் கென்யா சென்றார்.

நான்காவதாக, நைஜீரியா, பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்க நைஜீரிய உறவுகள் எப்போதும் சுமூகமாக இருந்ததில்லை மேலும் கடந்த காலத்தில் அமெரிக்க இராணுவ தளவாடங்கள் குறிப்பாக விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா அதன் மீது தடை விதித்த காரணத்தால் நைஜீரிய அதிகாரிகள் கொதிப்படைந்துள்ளனர். போகோ ஹராமுடனான அவர்களுடைய போரை தீவிரப்படுத்தவும் இந்த பகுதியில் போகோ ஹராம் செயல்படும் நாடுகளுடன் அவர்களுடைய ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டி அதன் அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக டில்லர்சன் நைஜீரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என மீண்டும் உறுதியளிப்பதற்காக சென்றுள்ளார்.

ஐந்தாவதாக, சாட், போக்கோ ஹராமுக்கு எதிராக இந்த பிராந்தியத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் ஐந்து நாடுகளின் அமைப்பான ஜி-5 (G-5)ன் மிகவும் துடிப்புடன் செயல்படும் உறுப்பினராகும், சாட் டிரம்ப்புடைய அரசாங்கத்தால் எட்டு பெரும் முஸ்லிம் நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதில் ஒன்றாக தனித்து விடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது. டில்லர்சன் சாட் அதிகாரிகளிடம் போக்கோ ஹராமுக்கு எதிராக போரிடுவதில் அவர்கள் ஆற்றி வரும் பங்கிற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக சாடிற்கு பயணம் மேற்கொண்டார் அதேவேளையில் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலிலிருந்து சாடை நீக்குவதற்கு தன்னால் முடிந்தவற்றை அனைத்தையும் அரசுத்துறை செய்யும் என சத்தமில்லாமல் உறுதியளித்தார்.

இறுதியாக, அமெரிக்க தலைமைத்துவம் மற்றும் அதனுடைய கூட்டணிகளும் தங்களது இரத்தக்கறை படிந்த கரங்கள் கொண்டு தமது தவறான மதசார்பற்ற முதலாளித்துவ சித்தாந்தம் உருக்குலைவதிலிருந்து தடுப்பதற்கு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், முஸ்லிம் உம்மத் திடமாக இருந்து அதன் எழுச்சிக்கு எதிராகவும் அல்லாஹ்வின் அருளை கொண்டு நபித்துவ வழிமுறையின் அடிப்படையில் வெகுவிரைவில் மறுநிர்மாணம் செய்யப்படவிருக்கும் கிலாஃபத்துக்கான பணியை ஏந்திச்செல்வதற்கு எதிராகவும் இருக்கும் அனைத்து தவறான அழைப்பாளர்களை நிராகரிக்கும்.

(إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ)

“நிச்சயமாக (உண்மையை) நிராகரிக்கும் இத்தகையவர் வெற்றி பெறமாட்டார்கள்.”

(அல்குர்ஆன் : 23:117)

Comments are closed.