சமீப பதிவுகள்

ஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது

செய்திகள்

பார்முலா பால் கம்பெனிகள் தொடர்ந்து தீவிரமாகவும், இரகசியமாகவும் மேலும் பெரும்பாலும் சட்ட விரோதமான முறைகளால் உலகின் மிக ஏழ்மையான பகுதி வாழ் தாய்மார்களை குறிவைத்து தாய்ப்பாலை காட்டிலும் பவுடர் பாலை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கின்றன, ஓர் புதிய ஆய்வு இதனை வெளிப்படுத்தி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சிலவற்றில் , ‘அ கார்டியன் ‘ / சேவ் தி சில்ட்ரன் ( A Guardian/Save the Children ) என்ற ஆய்வு குழு ஆய்வு செய்து – நெஸ்லே மற்றும் மூன்று இதேபோன்ற கம்பெனிகள் டாக்டர்கள் மற்றும் உள்ளூர் சுகாதார தொழிலாளர்களுக்கு ஆடம்பர மாநாடுகள் மற்றும் விருந்துகளுக்கு இலவச பயணம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாவிற்கு டிக்கெட்டுகள், இன்னும் சூதாட்ட கிளப்களில் பயன்படும் சிப்புகள் (chip) என்றெல்லாம் வழங்கி அவர்களின் கவர்ந்து தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவை பெறுகிறது. ( தி கார்டியன்:27/2/2018)

விமர்சனம்

உலகம் முழுவதிலிருந்தும் அதிகபட்ச லாபத்திற்காக உழைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கத்தை பார்க்கும் போது, அப்பட்டமான பொய்களுடன் இவர்கள் செயல்படுவது அதிர்ச்சி அளிக்க கூடியதாக இல்லை. பணம் சம்பாதிக்க, நாம் வழங்கும் வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது .

இதில் நாம் காண்பது உலகளாவிய அளவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களையும் பின்தங்கிய நாடுகளில் உள்ளவர்களையும் வெவ்வேறு விதமாக நடத்துகிறார்கள். உலகளாவிய சந்தையாக இருக்கின்ற போதும் வாடிக்கையாளர்களை நடத்தும் விதம் பெரும் வேறுபாடு தெரிகிறது.

பவுடர் பால் விலை உயர்வு, வளரும் நாடுகளில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு கட்டுப்படியாவது இல்லை, இருந்தாலும் மக்கள் தொகை வளர்ச்சியால் இந்த பவுடர் பால் சந்தை வளர்ந்து கொண்டு உள்ளது, மற்றும் குழந்தைகள் உணவு விஷயத்தில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்ற மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.

பவுடர் பாலை பொறுத்தவரை இது ஒன்றும் புதிய யுக்தி இல்லை.

1973 யில், ‘ தி இன்டர்நேஷனலிஸ்ட் ‘ நெஸ்லே யின் வியாபார நடைமுறைகளை வெளிப்படுத்தும் பதிவு ஒன்றை வெளியிட்டது, “குழந்தைகள் என்றால் வியாபாரம்” என்பதே அதன் முக்கிய கொள்கை மூலம் அந்த கம்பெனி வளரும் நாடுகளில் உள்ள தாய்மார்களை பவுடர் பாலையே சார்ந்திருக்க எவ்வளவு முயற்சிகளை செய்து வருகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

நெஸ்லே இதனை மூன்று வழியில் சாதித்தது, இவை தான் முதலாளித்துவத்தின் அடிப்படை தத்துவம் ஆகும்:

• தேவையே இல்லாத நிலையில் தேவையை உருவாக்குவது.

• பொருட்களை தவிர்க்க முடியாத தேவையுள்ளதாக மக்களை நம்பவைப்பது.

• பொருட்களை மிகவும் ஆசைக்குறிய மற்றும் எட்டாத சிந்தனைகள் உடன் சம்பந்தப்படுத்துவது – பின்பு ஒரு மாதிரி பொருளை (சாம்பிள்) அழிப்பது.

1974யில் லண்டனின் ‘ விருப்பங்களுக்கு எதிரான போர்’ என்ற அமைப்பு (War on Want organization) ” தி பேபி கில்லர் ” என்ற கையேட்டை வெளியிட்டது. இது பவுடர் பால் கம்பெனியின் முகத்திரையை கிழித்ததுடன், சுயமாக சிந்திக்கும் உணர்வு கொண்ட வாடிக்கையாளர்கள் நெஸ்லே பொருட்களை புறக்கணித்தனர். அந்த கையேட்டில் அவர்களின் நயவஞ்சகமான நடைமுறைகள் விவரிக்கப்பட்டிருந்தது, இருந்தும் நெஸ்லே ஒரு வழக்கை (law suit ) வென்று, வெறும் தனது விற்பனை நடைமுறைகளை மட்டும் மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தயாரிப்பு எப்படி விற்கப்படுகிறது என்பதில் இன்னும் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். கடந்த காலத்தில், மேற்கத்திய வாழ்க்கை முறையை முழு நிறைவானதாக சித்தரித்து, பாட்டில் பால் வழக்கம் தங்கள் பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது என்ற தோற்றமே சிறந்த வியாபார யுக்தியாக இருந்தது. உலகின் எல்லா பெண்களும் மேற்கத்திய நாட்டு பெண்கள் போலிருக்க ஆசைப்பட வேண்டும் என்று விளம்பரம் செய்தனர். உண்மை அதிலிருந்து வெகு தூரமாக இருந்த போதும் அதனை அவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். வறுமையுடன் தொடர்புப்படுத்தி அச்சுறுத்துவது – பவுடர் பால் நுண்ணறிவை அதிகரிக்கிறது என்ற கூற்று. பல தாய்மார்கள் தாம் தாங்கிக் கொள்ளும் வறுமையின் சுழற்சியிலிருந்து தப்பிப்பதற்கு கல்வி கற்ற குழந்தைகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதுகின்றனர். எல்லா தாய்மார்களுக்கும் சிறந்ததை வழங்க வேண்டும் என்று இயற்கையாகவே தூண்டுதல் உள்ளது, எது சிறந்தது என்னவென்று தெரியவில்லை என்றாலும்.

‘ தி கார்டியன் ‘ க்கு பேட்டி அளித்த ஒரு தாய் விளக்குவது , ” நான் சாப்பிடவில்லை, ஏனென்றால் அப்பொழுது தான் என்னுடைய பிள்ளைக்கு என்னால் உணவளிக்க முடியும். ஒரு சில நாட்கள் எதுவுமே உண்ணாமல் இருந்துள்ளேன். நெஸ்டொஜன் மிகவும் விலை வாய்ந்தது, அதை அவனுக்கு எப்போதும்

கொடுக்க முடியவில்லை, ஒரு நாளைக்கு நான்கு முறை பாதி பாட்டில் மட்டும் கொடுக்கிறேன்.”

இகாவத்தின் வீடு -தேவையில்லாத பலகைகள், நெளிந்த இரும்புகள் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்களால் ஆனது – அழுக்கு கால்வாய் மீதுள்ள பலகைகள் மீது அமர்கிறாள். தன் வீட்டில் தண்ணீர் தொடர்ந்து வருவதில்லை, மின்சாரமும் இல்லை, இதனால் பாட்டில்களை ஸ்டெர்லைஸ் செய்வதும் சிரமம், பயமற்றிருக்க பால் பவுடரை கொதிக்கும் நீரில் கலந்தால் நன்று , ஆனால் அதுவும் சிரமம்.” (27/2/2018)

குடிமக்களைக் காப்பது ஆட்சியாளரின் கடமையாய் இருக்க, இந்த பன்னாட்டு நிறுவனங்களால் சட்டங்களை மீறவும் முடிகிறது, மற்றும் அறிந்து தேர்வு செய்யும் வாய்ப்பில்லாத நுகர்வோர்களிடம் சாமர்த்தியமாக விற்பனை செய்யவும் இயல்கிறது. ஒரு டாக்டரோ அல்லது நர்ஸோ திறமையானவராக இருந்தாலும் அவர்களையும் கவர்ந்து விடுகின்றனர், பின்னர் எவ்வாறு தாய்மார்களும், குழந்தைகளும் பாதுகாக்கப்படுவர்?

இஸ்லாமிய வாழ்க்கை முறை மட்டுமே மனித இயல்பை சரியாக புரிந்த ஒரே வழியாகும், மேலும் ஒவ்வொரு உயிரையும் பணமாக பார்ப்பதில்லை மாறாக மனித ஆற்றலை பார்க்கிறது. வறுமையை சாதகமாக்கிக் கொண்டு எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களை மேலும் வறுமையில் ஆழ்த்துவது என்பது வெறுப்புக்குரிய இழிவான செயலாகும்!

வெறும் சட்டங்களும் கட்டுப்பாடுகளும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது –

மொத்த அமைப்பையும் பழுது பார்க்க வேண்டும். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, உயிர் அல்லாஹ்விடமிருந்து வருவது, குழந்தைகளுக்கு உணவு வழங்குகின்ற அவனின் சீரிய முறையை நாம் குலைத்து விடக்கூடாது. மக்களுக்கு உண்ணும் உணவு வழங்கக் கூடிய எவரையும் ஒழுங்குபடுத்தும் வழி அவன் அல்லது அவளுடைய தக்வாவின் (இறையச்சத்தின்) மூலம் ஆகும், தவிர அவர்களை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்திக்கொள்ள கூடாது. இஸ்லாமிய பொருளாதார அமைப்பு தவறான கூற்றுக்கள் அல்லது தவறான தேவைகளை அடிப்படையாக கொண்டது அல்ல, மாறாக நேர்மையான வணிகம் என்பது ஒரு வணக்க வழிமுறையாகவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுமே தவிர மக்களுடைய துயரத்தை மேலும் அதிகரிக்காது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

«التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء»

“நேர்மையான, நம்பகமான வணிகர்கள்- நபிமார்கள், சித்தீக்கினர்கள், மற்றும் போர் தியாகிகளுடன் எழுப்பப்படுவார்கள் ” ( திர்மிதி )

அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நலம் இஸ்லாமிய அமைப்பான, நபி வழியிலான கிலாபத்தில் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்!!!

Comments are closed.