சமீப பதிவுகள்

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன்

செய்தி :
13 மார்ச் 2018 அன்று சி.என்.பி.சி அறிவித்த செய்தியில், ஐரோப்பாவின் வர்த்தக ஆணையர் சிசிலியா மலம்ஸ்ட்ரோம் வர்த்தக குழுவில் உரையாற்றியபோது வெள்ளை மாளிகையின் தர்போதைய பொறுப்பாளரை மறைமுகமாக சாடினார். அதில் ஐரோப்பா அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு எதிராக நிற்போம் என்றும் அஞ்ச மாட்டோம் என்றும் கூறினார். மற்றொரு செய்தியில் பெயர் கூற விரும்பாத திறனாளிகளின் இயக்குனர் கூறியதாவது ஐரோப்பா அமெரிக்காவின் எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து டிரம்ப் அறிவித்த வரிகளிலிருந்து விலக்கு பெற நாடாது என்றார்.

கருத்து :

மார்ச் 8 அன்று, டிரம்ப் கையெழுத்திட்ட உத்திரவின் படி இரும்பிற்கு 25%, மற்றும் அலுமினியத்திற்கு 10% வரி விதித்தார், மேலும் இந்த வரியிலிருந்து கனடா, மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு விடுப்பு உள்ளதாகவும் கூறினார். எனினும், கனடா மற்றும் மெக்ஸிகோவிற்கான சலுகை தர்களினமானது என்றும் நாப்தா ஒப்பந்தத்திற்கு பிறகே மற்றவை தீர்மானிக்கப்படும் என்றும். இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட ட்வீட்டில், ஒரு நாடு (அமெரிக்கா) பல கோடி டாலர்களை வர்த்தகத்தில் இழக்கும் தருணத்தில் வர்த்தக போர் நல்லது என்றும் வெல்வதற்கும் சுலபம் என்றும் கூறினார்.

டிரம்ப் அறிவித்த இத்தகைய வரிகள் புதிதல்ல. ஏற்கனவே சூரிய சக்தி மற்றும் சலவை இயந்திரங்களுக்கு வரி அறிவித்தார். சூரிய சக்தி இயந்திரத்திற்கான வரி சீன போட்டியினை குறிவைத்தும் சலவை இயந்திர விதி தென்கொரியாவை குறிவைத்து விதிக்கப்பட்டவை. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், அமெரிக்காவின் கொள்கைகள் நட்பு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் குறைந்த வேறுபாடுகளுடன் வந்துள்ளது. டிரம்ப் சீனாவை குறிவைத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் , இதன் மூலம் சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வை சரி செய்ய நினைக்கிறார், அதே நேரத்தில் மற்ற ஐரோப்பா நாடுகளையும் நேர்மையற்ற வர்த்தகம் என சாடுகிறார். ஐரோப்பிய யூனியன் , அமெரிக்காவை வர்த்தகத்தில் மோசமாக நடத்திய நாடுகள், இன்று வரியை பற்றி குறைகூறுகின்றனர். அவர்கள் நாடுகளில் அமெரிக்கா பொருட்களுக்கான தடையை நீக்கினால் நாங்களும் நீக்குவோம், இல்லையேல் நாங்களும் கார்கள் முதலிய சறுக்குகளுக்கு வரி விதைப்போம். நியாயமே! என ட்வீட் செய்துள்ளார்.

இத்தகைய கொள்கைகள் மூலம் தலைகீழ் வர்த்தக போர் நிகழும். பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் புருனோ லே மரே, கூறியதாவது அமெரிக்காவின் வரிகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும், இல்லையேல் , ஐரோப்பா மக்கள் பலவீனமானவர்கள் எனும் தோற்றம் ஏற்படும். இத்தகைய வரிகள் விரிக்க பட சில நாட்களே இருக்கும் நிலையில், இந்நாடுகளுக்கிடையேயான மோதலை தவிர்க்க முடியாது.

அமெரிக்கா இந்த உலகத்தை தன்னுடைய சொந்த நிலமாக கருதி , பண்டைய கால முறைப்படி வர்த்தகத்தை வெற்றி தோல்வி நிலையாக காண்கிறது. ஒருபுறம் அமெரிக்கா தன்னை பலமானதாகவும் மறுபுறம் தன்னுடைய பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகிறது. இது பலத்தை இழந்துகொண்டிருக்கக்கூடிய நாட்டின் ஒரே வழியாகவும் , பிரகாசமாக எரியும் அணையும் விளக்கை குறிப்பிடுவதாக உள்ளது.

Comments are closed.