சமீப பதிவுகள்

டிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்

அதிபர் டிரம்ப் மார்ச் 13ம் நாள் டிவிட்டர் குறுஞ்செய்தி மூலம் தனது அயலுறவுத் துறை செயலாளர் டில்லர்சனை பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ வின் இயக்குனர் மைக் பாம்பியோவை நியமணம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். டில்லர்சன் நீக்கப்பட்ட சில மணி நேரத்திற்கு பின்னர் அவரை நீக்கியதற்கான காரணத்தில் வெள்ளை மாளிகையுடன் வெளிப்படையாக முரண்பட்டதால் அரசுத்துறை துணை செயலாளலர், ஸ்டீவ் கோல்ட்ஸ்டீனும் நீக்கப்பட்டார், மேலும் டில்லர்சன் “வயிற்றுப்போக்கால் பாதிகப்பட்டு ஆப்பிரிக்காவில் கழிவறை ஒன்றில் அமர்ந்திருந்த சமயத்தில்” அவரை பதவிநீக்கம் செய்துள்ளதாக அறிவிப்பதற்காக வேண்டி
தலைமை அதிகாரியால் மார்ச் 16ம் நாள் பத்திரிக்கையாளர்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டனர். வெள்ளை மாளிகையால் டில்லர்சன் அவமதிக்கப்பட்ட நிகழ்வானது டிரம்ப்பை ‘கயவன்’ என்று தான் கூறவில்லை என்று கூற மறுத்ததின் காரணமாக சில மாதங்களாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் யூகங்களை தொடர்ந்து நிகழ்ந்ததாகும். இருப்பினும் அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மட்டுமே டில்லர்சனை அயலுறவு செயலாளர் பதிவியிலிருந்து நீக்கியதற்கு காரணமல்ல.

ரஷ்யா மீதான கொள்கையில் நிலவிய கருத்து வேறுபாடே இதற்கான காரணமாக இருக்கலாம் என சிஎன்பிசி யின் செய்தி வெளியீடு தெரிவிக்கின்றது, அவர் நீக்கப்படுவதற்கு முந்தய நாள், “இங்கிலாந்தில் ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரிக்கு பயன்படுத்திய விஷம் ரஷ்யாவிலிருந்து வந்ததாகும் எனக் கூறியவாறு வெள்ளை மாளிகையின் நிலையிலிருந்து வேறுபட்டிருந்தார்.” எனினும், இதர வெள்ளை மாளிகை அதிகாரிகளும் அரசு துறைகளும் ரஷ்யாவின் விஷயத்தில் டிரம்புடன் வேறுபாட்டை கொண்டிருந்தன. மேலும், டில்லர்சனை மாற்றுவது குறித்த முடிவானது வழக்கமாக ரஷ்யா மீது: “நாம் ரஷ்யர்களை எங்கு கண்டாலும் அங்கிருந்து அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.” என்பன போன்று கடுமையாக தொடுத்து வரும் சொல்லாட்சியின் காரணமாக எடுக்கப்பட்டதாகும் என பாம்பியோ கூறினார்.

மார்ச் 16ல் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவில்’ வெளியான கட்டுரை ஒன்று “அயலுறவு செயலாளரை மாற்றியது பிரச்சனைக்குரிய தென்சீன கடற்பகுதியில் மீண்டும் அமெரிக்காவின் இராஜதந்திரம் தொடங்கியுள்ளது” எனும் தலைப்பில் இந்த மாற்றம் சீனாவுடைய கொள்கையில் தாக்கம் ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தது. அதன் ஆசிரியர் தென்சீன கடற்பகுதியில் அமெரிக்க அரசியல் தலைமைத்துவத்தை திறம்பட வெளிப்படுத்தவில்லை எனும் கருத்துக்கு இப்பிராந்தியத்தின் வல்லுநர்கள் ஆதரவு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்: “இப்போதைக்கு, பென்டகன் பிரச்சனைக்குரிய ஒரு கொள்கையை மேற்கொண்டு வருகிறது ஏனென்றால் அது மோதல்களுக்கு (கடல் சார்ந்த) எந்தவொரு இராணுவ தீர்வும் கொண்டிருக்கவில்லை, மேலும் பென்டகன்… மிகப்பெரியதொரு இராஜாங்க திட்டம் இல்லாமல் இதில் வெற்றிபெற முடியாது” என ஆசிய கடல்சார் வெளிப்படைத்தன்மை நிறுவனத்தின் இயக்குனர் கிரகோரி போலிங் கூறினார். அதற்கடுத்த நாள் சட்டவிரோதமாக உடைந்து போன பகுதி என்று சீனா கருதும் தாய்வானுடனான உறவை மேம்படுத்துவதற்கான சட்டத்திற்கு டிரம்ப் கையைழுத்திட்ட போது இந்த வாதத்திற்கு சிறிதளவு ஆதரவு கிடைத்தது. “நாங்கள் அமெரிக்க தரப்பிடம் தங்களுடைய தவறை திருத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம், அமெரிக்கா மற்றும் தாய்வானிய அதிகாரிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைகளையும் அதனுடன் உறவை மேம்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் மேலும் சீன-அமெரிக்க உறவிலும் தாய்வானிய கால்வாய் பகுதியில் ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான பாதகம் ஏற்படுவதை தவிரத்துக் கொள்ள இவ்விஷயத்தை விவேகத்துடன் சரியான முறையில் கையாளுங்கள்.” எனக் கூறி அதற்கு சீனா கடுமையான வார்த்தைகளை கொண்டு பதிலளித்தது.

புதிய அயலுறவு செயலாளர் ரஷ்யா மற்றும் சீனா மீது ‘கூரிய பார்வையுடைவர்’ என கருதப்படுகிறது, டிரம்ப்புடன் ஒத்திருக்கும் அவருடைய தீவிரமான கொள்கையானது வடகொரியா மற்றும் ஈரானை நோக்கியே உள்ளது. புதிய அயலுறவு செயலாளராக அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் டொனால்டு டிரம்ப்புக்கு இடையே நடைபெறவிருக்கும் சந்திப்பு குறித்து பேராவல் கொண்டிருந்தார். “முந்தய நிர்வாகமானது பலவீனமான நிலையிலிருந்து கொண்டு பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. இந்த நிர்வாகம் மிகவும் பலமான நிலையிலிருந்து கொண்டு பேச்சுவார்த்தையை நடத்தும்,” என சிபிஎஸ் தொலைக்காட்சியின் ஃபேஸ் தி நேஷன் எனும் நிகழ்ச்சியில் கூறினார், மேலும் அதில் “வடகொரியாவில் முழுமையான, சரிபார்க்கக்கூடிய மற்றும் மாற்ற முடியாத அளவில் அணுசக்தியற்ற நிலைக்கு கொண்டுவர வேண்டும் என நாடுகிறேன்” எனக் கூறினார். ஈரானை பொறுத்தவரை, ஈரானுடைய அணு உலைகள் மீது வெடிகுண்டு வீசி தாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார் மேலும் அவர் அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட சமயம் ஒபாமாவின் அரசாங்கம் “ஈரானுடைய அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வேண்டி அதன் மீது நசுக்கக்கூடிய அளவில் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை சாதகமாக பயன்படுத்த தவறியது”, “அது அயலுறவு கொள்கை கிடையாது; அது சரண்டைதல் ஆகும்” என கடுமையாக விமர்சித்தார்.

மத்திய கிழக்கை பொறுத்தவரை, பாம்பியோ ஒரு தீவிர பழமைவாதியாவார் அவர் இஸ்லாம் விடுக்கும் அச்சுறுத்தல்களில் இருந்து ஜூடியோ கிறித்தவ விழுமியங்களை பாதுகாப்பதற்கு போதுமானவற்றை செய்யவில்லை என ஒபாமாவை விமர்சித்தார்.

டிரம்ப்புக்கு பெருமளவு நிதியுதவியும் ஆதரவையும் அளித்து வரும் தீவிர பழமைவாதிகளான ‘தேநீர் கட்சி’ யை பொறுத்தவரை பாம்பியோவின் தேர்வு ஒரு தெளிவான தேர்வு என கருதுகிறது. அவர் 2017ல் சிஐஏ வின் இயக்குனராக பதவியேற்பதற்கு முன் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிக்குழுவின் உறுப்பினராக இருந்தவர் மேலும் அவைக்குழுவின் எரிசக்தி மற்றும் வர்த்தகப் பிரிவு, அவையின் புலனாய்வுத் துறையின் நிரந்தர தேர்வுக்குழு, பெங்காஸியின் தேர்வுக்குழு ஆகியவற்றில் சேவை புரிந்துள்ளார். அந்த சமயத்தில், அவர் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் பெற்றிராத நிதியை தீவிர பழமைவாதியான கோச் தொழில் நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பெற்றார். ‘ஓபன் டெமாக்ரசி’ எனும் நிறுவனம் கோச் மற்றும் அதன் தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் 900,000 டாலர்களுக்கு மேலாக வழங்கியிருப்பதை அட்டவணைபடுத்தயுள்ளது (டுவீட்: நவம்பர் 18, 2016). மேலும், கோச்சுடைய தி ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனின் ஆசிய ஆய்வு மையம் பாம்பியோ நியமணம் செய்யப்பட்ட இரு தினங்களுக்கு பிறகு பாம்பியோ அரசவை மற்றும் ஜனாதிபதி என இரு தரப்பிலும் நல்ல முறையில் செயல்படும் தனித்தன்மையை கொண்டுள்ளார் என்றும் “அமெரிக்க தேசத்தின் நலன்கள் மாறாது. அமெரிக்கா அவற்றை அடைவதற்கான வழிமுறையில் – அமெரிக்க அயலுறவு கொள்கையில் – மாற்றம் இருக்கும்” எனக் கூறி பாம்பியோவின் நியமணத்தை உறுதிசெய்தது.

Comments are closed.